search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட கோவை போலீசார்
    X

    ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட கோவை போலீசார்

    • இணையத்தில் தினமும் புதுப்புது மோசடிகள் நடந்து வருகின்றன.
    • புகார் கொடுத்தால் மட்டுமே குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து பணத்தை மீட்க முடியும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    கோவை,

    கோவையில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்தபடி உள்ளது. இதில் படிக்காதவர் மட்டுமின்றி படித்தவர்களும் கூட பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் சைபர் கிரைம் குற்றப்புலனாய்வு பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்குவது மட்டுமின்றி, பாதிக்கப்ப ட்டவர் இழந்த பணத்தையும் மீட்டு ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர். அதேநேரத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே சைபர் கிரைம் குற்றங்களின் வகைகள், குற்றவாளிகளிடம் இருந்து தப்புவது எப்படி, ஏமாந்தவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய நடவடி க்கைகள் ஆகியவை தொடர்பாக மாநகர போலீசார் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் இணையதள குற்றவாளிகள் எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றனர், பாதிக்கப்பட்டோர் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன, பணத்தை இழந்தவர்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? ஆகியவை குறித்த அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.

    இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இணையத்தில் தினமும் புதுப்புது மோசடிகள் நடந்து வருகின்றன. இதில் படிக்காதவர் மட்டுமின்றி படித்தவர்களும் எளிதில் சிக்கி விடுகின்றனர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக போலீசில் புகார் கொடுப்பது இல்லை. இதனால் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர். கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்ற வாளிகளை பிடிப்பத ற்காகவே தனிப்படை இயங்கி வருகிறது. எனவே ஆன்லைன் பணமோசடி, ஓ.டி.டி மூலம் பணம் இழந்தவர்கள், கிரெடிட் கார்டு மோசடி, இ-காமர்ஸ் மோசடி மற்றும் பல்வேறு அம்சங்கள் வாயிலாக பணம் இழந்தவர்கள் உடனடியாக கட்டணம் இல்லா தொலைபேசி எண்:1930 மூலம் தொடர்பு கொண்டு புகார் தரலாம். இதுதவிர www.cybercrime.gov.in இணையத்தளம் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். இணைய த்தளமோசடியில் பணம் இழந்தவர்கள் எவ்வளவு சீக்கிரம் புகார் கொடுக்கிறா ர்களோ, அந்தளவுக்கு குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து பணத்தை மீட்க முடியும் என்று தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×