என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆனைமலை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற தனியார் நிறுவன ஊழியர் தடுப்பணையில் மூழ்கி பலி
- நண்பர்களுடன் கோட்டூர் ஆற்றுப்பாலத்தில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றார்
- ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கடலூரை சேர்ந்தவர் அருள்முருகன் (வயது 23). இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று விடுமுறை என்பதால் அருள்முருகன் அவருடன் வேலை பார்க்கும் ராஜ்குமார், பால்ராஜ், சதீஷ், குணசீலன், மயி ல்சாமி, கர்ணன், கோவிந்த் ஆகி யோருடன் ஆலைம லைக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார்.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அருள்முருகன் அவரது நண்பர்களுடன் கோட்டூர் ஆற்றுப்பாலத்தில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றார். தடுப்பணையில் அவர் நண்பர்களுடன் ஜாலியாக குளித்துக்கொ ண்டு இருந்தார்.
அப்போது திடீரென அருள்முருகன் ஆழமான பகுதிக்கு சென்றார். அங்குள்ள சேற்றில் சிக்கி அவர் நீருக்குள் மூழ்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் அருள்மு ருகனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடிய வில்லை.
பின்னர் இது குறித்து அவர்கள் ஆனைமலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு வீரர்கள் தடுப்பணையில் இறங்கி அருள்முருகனின் உடலை தேடினர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இரவாகி விட்டதால் தேடுதல் பணியை தீயணைப்பு வீரர்கள் கைவிட்டனர்.
இன்று காலை 6 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அருள்முருகனின் உடலை தேடினர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவரது உடலை கைப்பற்றினர்.
பின்னர் போலீசார் தடுப்பணை சேற்றில் சிக்கி இறந்த அருள்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






