என் மலர்
நீங்கள் தேடியது "chain was stolen"
- சம்பவத்தன்று கணவன்-மனைவி இரு வரும் வேலைக்கு சென்றனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பவுன் செயினை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அச்சம்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகர் (வயது 57). இவர் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி. கடந்த 8-ந் தேதி இவர் தனது 10 பவுன் செயினை கழுத்தில் அணிந்துகொண்டு தனது மகள் ஊருக்கு சென்று வந்தார்.பின்னர் செயினை கழற்றி பீரோவில் வைத்தார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இரு வரும் வேலைக்கு சென்றனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த யாரோ மர்மநபர் பீரோவில் இருந்த 10 பவுன் செயினை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து குணசேகரன் அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பவுன் செயினை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- 3 பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்க செயினை பறித்து சென்றனர்.
- கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.
கோவை,
கருமத்தம்பட்டி அருகே உள்ள வேட்டைக்காரன் குட்டையை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மனைவி மஞ்சு (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கருமத்தம்பட்டி நால் ரோட்டில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறினார். அப்போது அந்த பஸ்சில் முககவசம் அணிந்தபடி நின்றிருந்த 3 பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மஞ்சு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற 3 பெண்களை தேடி வருகின்றனர்.
- கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்
- பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்காலகுறிச்சியை சேர்ந்தவர் மனோகரன். டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 38). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் விடுதியில் தங்கி படிக்கும் மகனை பார்ப்பதற்காக மாெபட்டில் புறப்பட்டனர். மொபட்டை மனோகரன் ஓட்டிச் சென்றார்.
மொபட் சமத்தூர் மணல்மேடு அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் மகாலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
- ஜமுனா கவுண்டம்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் மூலம் கல்லூரிக்கு சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை.
கோவை கவுண்டம்பாளையம் டிவி. எஸ் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி ஜமுனா (வயது 55). இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டார்.
அப்போது கவுண்டம்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் மூலம் கல்லூரிக்கு சென்றார். இந்த நேரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ சிலர் ஜமுனாவிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.இந்த நிலையில் ஜமுனா கல்லூரிக்கு வந்தார்.
அப்போது அவரிடம் சக ஊழியர்கள், ஏன் செயின் அணிந்து வர வில்லை என்று கேட்டு உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜமுனா கழுத்தில் தொட்டு பார்த்தார். அப்போது தான் அணிந்திருந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






