என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டம் பிடித்த மாணவி"

    • உறவினரான 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி. கொட்டாம்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் பிளஸ்-2 படித்து முடித்து இருந்தார். மாணவிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனியை சேர்ந்த உறவினரான 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் அவர்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். ஆனால் மாணவி அவரது காதலை தொடர்ந்து வந்தார். பெற்றோர் பிரிந்து விடுவார்களோ என்ற பயத்தில் மாணவி இருந்தார். எனவே அவர் தனது காதலனுடன் செல்வது என முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவியின் பெற்றோர் அவர் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி அவரது உறவினரான வாலிபருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. எனவே போலீசார் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • வாலிபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதல் ஏற்பட்டது
    • மாணவி காதலனை தொடர்ந்து சந்தித்து வந்தார்.

    நாகர்கோவில் : குளச்சல் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஏரோநாட்டிங்கல் என்ஜினீ யரிங் படித்து வந்தார். இவருக்கும், செட்டியார் மடம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதல் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து மாணவியை அவர்கள் கண்டித்தனர். ஆனால் மாணவி காதலனை தொடர்ந்து சந்தித்து வந்தார். இதை அறிந்த பெற்றோர் மாணவிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தனர். இந்த நிலையில் மாணவி வீட்டை விட்டு மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் குளச்சல் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாணவி தனது காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

    தாங்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தங்களை பிரிக்க நினைப்பதாகவும் இதற்கு பாதுகாப்பு வேண்டும் என்று மாணவி போலீசாரிடம் கூறினார். போலீசார் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸ் நிலை யத்திற்கு வந்தனர். மாண விக்கு 18 வயது பூர்த்தியாகி விட்டதால் அவர் விருப்பப்படி தான் நடந்து கொள்ள முடியும் என்று போலீசார் கூறினார் கள். இதையடுத்து மாணவி காதலனோடு செல்ல தயாரானார்.

    அப்போது போலீசார் அவரது காதல னின் ஆதார் கார்டை சரி பார்த்தபோது அவருக்கு 20 வயதானது தெரியவந்தது. காதலனுக்கு திருமண வயது எட்டவில்லை என்பதால் மாணவி அவருடன் அனுப்ப போலீசார் மறுப்பு தெரி வித்தனர். மாணவிக்கு அறி வுரைகளை கூறி அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். பின்னர் மாணவி போலீஸ் நிலையத்தில் இருந்து அவரது பெற்றோருடன் வெளியே புறப்பட்டு சென்றார். போலீஸ் நிலையத்திற்கு வெளியே பெற்றோர் அவரை அழைத்து செல்வ தற்காக காரில் தயார் நிலை யில் இருந்தனர். காரின் அருகே சென்ற மாணவி திடீரென பெற்றோர் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அங்கு தயார் நிலையில் மோட்டார் சைக்கிளில் நின்ற தனது காதலனுடன் ஏறி மீண்டும் ஓட்டம் பிடித்தார். இதை எதிர்பாராத பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் மாணவியை போலீ சார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    ×