என் மலர்
கோயம்புத்தூர்
- கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
- தெற்கு மாவட்ட பகுதியில் மட்டும் 20 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தெரிவித்தார்.
கோவை:
கோவை காந்திபுரத்தில் வி.கே.கே. மேனன் சாலையில் கடந்த மாதம் 29-ந்தேதி பாரதிய ஜனதா சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மீது தி.மு.க.வினர் புகார் செய்த வண்ணம் உள்ளனர்.
பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிடம் தி.மு.க. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசி எங்கள் கட்சியினரை இழிவுப்படுத்தி உள்ளார். அவரது பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளது.
அமைதி பூங்காவான தமிழகத்தில் அவருடைய பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருகட்சியினரிடையே வன்மத்தை தூண்டுவதாக உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல கோவை ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி என மாநகரில் உள்ள 17 போலீஸ் நிலையங்களில் தி.மு.க. பகுதி செயலாளர்கள் தனித்தனியாக புகார் செய்துள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர சூலூர் போலீஸ் நிலையத்திலும் தி.மு.க. நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர். தெற்கு மாவட்ட பகுதியில் மட்டும் 20 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தெரிவித்தார்.
மேலும் வடக்கு மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் மனுக்கள் கொடுக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த அனைத்து புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் தேடுவதை அறிந்த திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை அருண் சக்ரவர்த்தியுடன் அனுப்பி வைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அருண் சக்ரவர்த்தி (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
அருண் சக்ரவர்த்திக்கு வடக்கிப்பாளையம் அருகே உள்ள கொங்கநாட்டன்புதூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர்.
காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.
அதன்படி 2 பேரும் கடந்த 1-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஆச்சிப்பட்டியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். திடீரென மாயமானதால் அவர்களின் பெற்றோர் மாயமானவர்களை கண்டுபிடித்து தரும்படி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்த திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை அருண் சக்ரவர்த்தியுடன் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் இளம்பெண்ணை அவரது உறவினர்கள் சிலர் சந்தித்தனர். அப்போது வீணாக வாழ்க்கையை தொலைத்து விடாதே, எங்களுடன் வந்து விடு என ஆலோசனை வழங்கினர். அவர்களின் பேச்சை கேட்ட இளம்பெண் அருண் சக்ரவர்த்தி கட்டிய தாலியை கழற்றி கொடுத்து விட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
திருமணம் செய்த காதலி தாலியை கழற்றி கொடுத்து விட்டு சென்றதால் மனவேதனை அடைந்த அருண் சக்ரவர்த்தி வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக அருண் சக்ரவர்த்தியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு குருவின் வழிகாட்டுதல் அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- ‘உயிர் நோக்கம்’ என்ற எளிய ஆன்மீக பயிற்சி தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த குரு பெளர்ணமி தினமான இன்று ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "சத்குரு, உங்கள் இதய துடிப்பாக இருக்க முடியும், உங்கள் உயிர் மூச்சாக இருக்க முடியும் அல்லது உங்கள் முக்திக்கு நோக்கமாகவும் இருக்க முடியும். உங்கள் விருப்பம், நீங்கள் என்னை எப்படி வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளலாம். ஆனால், நான் எப்போதுமே உங்களுக்காக தான் இருக்கிறேன்" என கூறியுள்ளார்.
நம் பாரத கலாச்சாரத்தில் ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு குருவின் தேவையும், அவரின் வழிகாட்டுதலும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சத்குரு அவர்கள் சம காலத்தில் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக சாதகர்களுக்கு குருவாக விளங்குகிறார்.
குரு பெளர்ணமியை முன்னிட்டு சத்குருவின் அன்பளிப்பாக, 'உயிர் நோக்கம்' என்ற எளிய ஆன்மீக பயிற்சி தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் வாயிலாக ஜூலை 7 முதல் ஜூலை 9 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த யோகா வகுப்பில் பஞ்ச பூதங்களின் உதவியுடன் ஒருவர் தனது உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் கற்றுக் கொடுக்கப்படும்.
இவ்வகுப்பில் பங்கேற்க Isha.co/unosm என்ற இணையதள முகவரியில் ஜூலை 4-ம் தேதி நள்ளிரவுக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- நீலகிரி மாவட்டத்தில் 404 ரேஷன் கடைகள் உள்ளன.
- நீலகிரியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 148 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் கூட்டுறவுத்துறை சார்பில் 335 ரேஷன் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், எஸ்டேட் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் கடைகள் என மொத்தம் 404 ரேஷன் கடைகள் உள்ளன.
இந்த கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில் போன்றவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
நீலகிரியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 148 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்தநிலையில் ஊட்டி மேல் தலையாட்டு மந்து பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 19-ந் தேதி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சந்தியா, ஊட்டி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது பதிவேடுகளில் இருந்ததை விட, ரேஷன் கடையில் 3,500 கிலோ அரிசி பற்றாக்குறையாக இருந்தது. இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர் அமுதாவிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அரிசி கெட்டுப்போய் விட்டதால் கோரிசோலா பகுதியில் கொட்டி விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஊட்டி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் நீலகிரி கூட்டுறவு சங்க இணை பதிவாளர் வாஞ்சிநாதன் ஆய்வு நடத்தி, ரேஷன் கடை விற்பனையாளரான அமுதா என்பவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்தார்.
இதற்கிடையே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், அமுதா ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கோவை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.
- தீயணைப்பு, பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன
கோவை,
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் சகல உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
தீயணைப்பு அலுவலகங்களில் ரப்பர் படகு, அறுவை எந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளதா? என்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக கோவை தெற்கு தீயணைப்பு அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் சாதனங்க ளை, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வ தற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையினரும் வந்துள்ளனர். அவர்கள் பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
- கல்குவாரி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
- கோவை மாவட்டம் முழுவதும் கட்டுமான வேலைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
கோவை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. அப்போது கோவை தெற்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் புகார்மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவையில் கிரஷர் மற்றும் கல்குவாரி நிறுவ னங்கள் கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் கட்டுமான வேலைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. பல லட்சம் கூலி தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.
இதற்கிடையே கோவையில் உற்பத்தியாகும் கனிம வளங்களில் 90 சதவீதம், முறைகேடாக கேரளாவிற்கு கடத்தபட்டு விற்கப்பட்டு வருகிறது.
இதை கண்டித்து கிரசர் மற்றும் கல்குவாரி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன.
எனவே அரசு உடனடியாக கிரசர் மற்றும் கல்குவாரி, லாரி உரிமையா ளர்களுடன் பேச்சுவா ர்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை கடத்தி செல்வதை தடுக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- அஸ்மிதா, முருகராஜ் என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்தார்.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார்.
கோவை,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அஸ்மிதா (வயது 19).
இவர் கடந்த மாதம் 24-ந் தேதி கிணத்துக்கடவு அருகே உள்ள சட்டக்கல்புதூரை சேர்ந்த முருகராஜ் என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்தார்.
இந்த நிலையில் அஸ்மிதா கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அஸ்மிதாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அஸ்மிதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கிணத்து க்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அஸ்மிதா திருமணமான ஒரு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
- முபாரக் ஆட்டோவை ரோட்டோரத்தில் நிறுத்தினார்.
- முபாரக்கை பரிசோதனை செய்த போது அவர் இறந்தது தெரிய வந்தது.
கோவை,
கோவை தெற்கு உக்கடம் பிலால் நகரை சேர்ந்தவர் முபாரக் (வயது 48). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் உக்கடத்தில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு பயணிகளை ஏற்றி சென்றார்.
பின்னர் பயணிகளை அங்கு இறக்கி விட்டு சர்பவாசலில் இருந்து தண்ணீர் பந்தல் செல்லும் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். முபாரக் ஆட்டோவை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்சு ஊழியர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று முபாரக்கை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் இது குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த முபாரக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உதவிதொகை பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக போட்டோ எடுத்து அனுப்பினர்.
- 7 பேரிடம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் பணம் மோசடி நடைபெற்றது.
கோவை,
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் விவரங்களை ஒரு கும்பல் ஆன்லைன் மூலமாக சேகரித்தனர்.
பின்னர் அவர்களை செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களது மகன், மகளுக்கு அரசு மூலமாக உதவித்தொகை பணம் கிடைத்துள்ளது என அரசு அலுவலர்கள் போல் பேசி உள்ளனர்.
மேலும் அந்த கும்பல் வாட்ஸ் அப்பில் தமிழ்நாடு அரசின் லோகோவை வைத்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் வாட்ஸ் அப்பில் கியூ.ஆர்.கோடு அனுப்பி உங்களுக்கு உதவிதொகை பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக போட்டோ எடுத்து அனுப்பி உள்ளனர்.
இதனை உண்மை என நம்பி உதவிதொகை பணம் பெறுவதற்காக கியூஆர் கோடை அழுத்தியவுடன் அவர்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் மர்ம நபர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதே போல் கோவையில் 7 பேரிடம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் பணம் மோசடி நடைபெற்றது.
இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். விசாரணையில், இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளிகள் டேவிட் (வயது32), லாரன்ஸ் ராஜ் (28), ஜேம்ஸ் (30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம் (34) ஆகிய 5 பேரை கடந்த மாதம் 16-ந் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இந்தநிலையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
அதற்கான உத்தரவு நகலை போலீசார் சிறை அதிகாரியிடம் அளித்தனர்.
- தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்குவது வழக்கம்.
- ஆழியாறு அணையின் நீர்மட்டம் 56.45 அடியாகவும் உள்ளது.
பொள்ளாச்சி,
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்குவது வழக்கம். இந்தாண்டு ஜூலை முதல் வாரமாகியும், இதுவரை தென்மேற்கு பருவமழை தொடங்கா ததால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் பருவ மழையை பயன்படுத்தி நடைபெறும் விவசாய பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
மேலும், வால்பாறை பகுதியிலுள்ள மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு அணைகளின் நீர் இருப்பும் உயரவில்லை. நேற்று காலை நிலவரப்படி 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 19.05 அடியாகவும்,120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 56.45 அடியாகவும் உள்ளது.
தென்மேற்கு பருவமழை யால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும். தற்போது, அணைப்பகுதி தண்ணீர் இன்றி மண் திட்டுகளாகவும், பாறை முகடுகளாகவும் காட்சியளிக்கிறது. மழைப்பொழிவு இன்றி விவசாயம் பொய்த்துவிடும் சூழல் ஏற்படாமல் இருக்கவும், விரைவில் தென்மேற்கு பருவமழை பெய்து அணைகளின் நீர்மட்டம் உயர வேண்டியும் ஆழியாறு அணையின் மீது உள்ள விநாயகர் கோவிலில் விவசாயிகள் கணபதி யாகம் நடத்தினர்.
ஆழியாறு அணை உதவி செயற்பொறியாளர் சிங்கார வேல், உதவிப் பொறியாளர் கார்த்திக் கோகுல் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
- மோகனப்பிரியா 7-ம் வகுப்பு படித்து வந்தார்
- சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்
சூலூரைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மகள் மோகனப்பிரியா(12). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று விடுமுைற என்பதால் வீட்டில் இருந்தார். அப்போது அவரது தாய் வீட்டை சுத்தம் செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர் அறைக்கு சென்று தாழிட்டு கொண்டார்.
வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அறைக்குள் மோகனப்பிரியா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று மகளை மீட்டு சிகிச்சைக்காக சூலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 45 வயது தொழிலாளி மரம் அறுக்கும் தொழில் செய்து வருகிறார்.
- இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கோவை,
கோவை கே.ஜி.சாவடியை சேர்ந்த 45 வயது தொழிலாளி. இவர் மரம் அறுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் தொழிலாளி மரம் அறுக்கும் போது கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது தொழி லாளியின் மனை விக்கு சூலூர் அருகே உள்ள பட்டணத்தை சேர்ந்த 36 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வாலிபரை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரமணாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது பொள்ளாச்சி கோட்டூர் ஜெய்பிரகாஷ் வீதியில் வாலிபருடன் மனைவி தங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தொழிலாளி அங்கு சென்று மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். அதற்கு அவர் வர மறுத்து விட்டார்.
அப்போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் தொழிலாளியின் இடது காதை அறுத்தார். பின்னர் அவர் தப்பி ஓடிய போது அரிவாள்மனையை தூக்கி வீசினார்.
இதில் அவரது பின் தலையில் காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ள த்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






