என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • முதல் பணிக்கு ரூ.1000 செலுத்தினால் 30 சதவீதம் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்.
    • இதுகுறித்து அருண்குமார் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை விநாயகபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவர் ஐ.டி நிறுவனத்தில் என்ஜனீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வாட்ஸ் அப்-க்கு ஒரு எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில் தான் பகுதி நேர வேலை வாங்கி தருவதாகவும் டெலிகிராமில் தொடர்பு கொள்ளுமாறும் அந்த நபர் கூறினார். அவரது பெயர் மெலோனி என்றும் கூறினார். முதலில் எனக்கு கணக்கை தொடங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நான் ரூ.150 செலுத்தினேன்.

    பின்னர் மறுநாள் ஒரு லிங்கை டெலி கிராமில் அனுப்பினார். ெடலிகிராம் குழுவிலும் இணைய சொன்னார். நானும் அந்த புதியவர்களுக்கான குழுவில் இணைந்தேன். பின்னர் தினமும் 24 பணிகளை (டாஸ்க்) கொடுத்தனர்.

    முதல் பணிக்கு ரூ.1000 செலுத்தினால் 30 சதவீதம் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார். நானும் அதனை உண்மை என நம்பி பணம் கட்ட னேன். முதற்கட்டமாக ரூ. 2 லட்சத்து 59 ஆயிரத்து 800 பணம் அவரது வங்கி கணக்கில் செலுத்தினேன். மேலும் பணம் செலுத்தினால் தான் கமிஷன் கிடைக்கும் என்றார். பின்னர் 24 பணிகளையும் முடித்து சிறிது சிறிதாக தவணை முறையில் ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்து 679 வரை பணத்தை அனுப்பினேன்.பின்னர் எனக்கு கமிஷன் வரவே இல்லை.

    இதனால் சந்தேகமடைந்த நான் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அந்த நபர் எனக்கு சரிவர பதில் தரவில்லை. இதனால் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். பின்னர் இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 28). டெக்ஸ் டைல்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இவர் துடியலூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவன் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன்குமார் (26) என்பவர் அறிமுகமானார். அவர் எனது அக்கா பிரவீனா, நண்பர் சரவணன் ஆகியோருக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய நான் நிரஞ்சன் குமாரின் வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை அனுப்பி 

    • காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம்
    • ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 28). இவர் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் ஆனது. இதனை அறிந்த பிரவீன் சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் ரவி (40). இவர் தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வந்தார்.

    இவர் குடும்ப செலவுக்காக ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு சிறுவிபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டு அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று காலை அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனவேதனை அடைந்த காவியா வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷத்தை குடித்தார்.
    • கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலத்தை சேர்ந்தவர் மாசாணி. இவரது மகள் காவியா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். தேர்வு முடிவில் காவியா கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தார். பின்னர் படிக்க செல்லாமல் ஆடு மேய்த்து வந்தார்.

    இந்தநிலையில் காவியா தனது பெற்றோரிடம் டுட்டோரியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதாக கூறினார். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் உடுமலையில் உள்ள டுட்டோரியல் கல்லூரியில் சேர்த்து விட்டனர். கடந்த 28-ந் தேதி நடந்த கணித தேர்வை காவியா எழுதினார். இன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு எழுத மாட்டேன் என அவர் தனது பெற்றோரிடம் கூறினார். அதற்கு அவரது பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் மனவேதனை அடைந்த காவியா வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷத்தை குடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக காவியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் காவியா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜவீதி முதல் மணிக்கூண்டு வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
    • புதிய திட்டம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை டவுன்ஹால் பகுதியில் ஒப்பணக்கார வீதி , ராஜவீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, பெரிய கடை வீதி, ரங்கே கவுண்டர் வீதி ஆகியவை உள்ளன. அந்த பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகள் ரோட்டின் இருபுறமும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    டவுன்ஹால் பகுதியில் ஜவுளிக்கடை, நகைக்கடை, மளிகை, தானியம், காய்கறி ஆகியவற்றுக்கான மொத்த விற்பனை நிலையங்கள் உள்ளன. எனவே அனைவரும் இங்கு வாகனங்களில் வந்து செல்வது வழக்கம். அங்கு பொருட்களை வாங்கி விட்டு வெளியேற குறைந்தபட்சம் 5 மணி நேரம் பிடிக்கும். எனவே டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் மாலைமலர் நாளிதழில், ஒரு பக்கம் மட்டும் பார்க்கிங் செய்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என்று தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கவனத்துக்கு வந்தது.எனவே அவர் நேற்று டவுன்ஹால் பகுதிக்கு நேரடியாக வந்திருந்து ஆய்வு நடத்தினார்.

    இதனை தொடர்ந்து அங்கு உடனடியாக ஒரு பக்க பார்க்கிங் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் டவுன்ஹால் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வாகனங்களை நிறுத்தும் இடம், சுழற்சி முறையில் மாற்றப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

    இதன்படி ஒப்பணக்கார வீதியில் வைசியாள் வீதி சந்திப்பு முதல் இடையர் வீதி சந்திப்பு வரை சாலையின் இரு புறமும் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை. இடையர் வீதி சந்திப்பு முதல் மில் ரோடு சந்திப்பு வரை சாலையின் இடது புறம் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். ராஜவீதியில் ஒப்பணக்கார வீதி சந்திப்பு முதல் ரங்கே கவுண்டர் வீதி வரை, சாலையின் இரு புறமும் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை. ரங்கே கவுடா் வீதி முதல் தேர்நிலை திடல் வரை வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

    துணி வணிகர் சங்க பள்ளி தேர் திடல் முதல் கருப்பு கவுண்டர் வீதி வரை இடதுபுறம் வாகனங்களை நிறுத்த வேண்டும். ஆனால் கருப்பு கவுண்டர் வீதி சந்திப்பு முதல் சலிவன் வீதி வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.

    ராஜவீதி முதல் மணிக்கூண்டு வரை இருபுறமும் வாகனங்களை நிறுத்தக்கூடாது. கருப்பு கவுண்டர் வீதியில் ராஜவீதி சந்திப்பு முதல் வைசியாள் வீதி வரை வலது புறம் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

    பெரிய கடை வீதியில் ரங்கே கவுடர் வீதி சந்திப்பு முதல் கருப்பு கவுண்டர் வீதி வரை இடதுபுறம் வாகனங்களை நிறுத்தலாம். வைசியாள் வீதியில் ரங்கே கவுண்டர் வீதி சந்திப்பில் பஸ் நிறுத்தம் எதிரே வலது புறம் நிறுத்த வேண்டும். கோவை டவுன்ஹால் பகுதியில் புதிதாக அமலுக்கு வந்து உள்ள வாகன நிறுத்த மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாநகர போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    இந்த புதிய திட்டம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல பல்வேறு அமைப்புகளும் டவுன்ஹால் வாகன நிறுத்த மாற்றம் பற்றிய அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • பழனியப்பன், நீங்கள் கிளம்பினால் வசதியாக இருக்கும். கடையை மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.
    • தொண்டாமுத்தூர் போலீசார் 11 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர்-புத்தூர் ரோட்டில் மதுபானபார் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 பேர் கும்பல் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்தது. அங்கு அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினார்கள். அப்போது அவர்களுக்கு ஊழியர் பழனியப்பன் என்பவர் சப்ளையராக இருந்தார்.

    இந்த நிலையில் அந்த கும்பல் இரவு 10 மணியான பிறகும் அங்கிருந்து புறப்படவில்லை. எனவே பழனியப்பன், நீங்கள் கிளம்பினால் வசதியாக இருக்கும். கடையை மூட வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு அந்த கும்பல் ஒப்புக்கொள்ளவில்லை. பழனியப்பனிடம் மேலும் மதுபாட்டில் கேட்டு தகராறு செய்தது. இதற்கு அவர் மறுத்து விட்டார்.

    எனவே ஆத்திரம் அடைந்த கும்பல் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியது. இதில் பழனியப்பனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. எனவே சக ஊழியர்கள் திரண்டுவந்து நியாயம் கேட்டனர்.

    இதற்கிடையே அந்த கும்பலில் இருந்த ஒருவர் தேவராயபுரத்தை சேர்ந்த சிலருக்கு போன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் மேலும் 7 பேர் கும்பல், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தது. அப்போது அவர்கள் மதுபானகூடத்தில் இருந்த டேபிள், சேரை அடித்து உடைத்து சூறையாடிவிட்டு தப்பி சென்றனர்.

    இதனை தொடர்ந்து பழனியப்பனை சக ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டு உள்ளன. இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் தேவராயபுரத்தை சேர்ந்த நொய்யல் கார்த்திக் என்பவர் தலைமையில் புத்தூர் மதுபான பாருக்கு வந்த கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தேவராயபுரத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 11 பேர் சிக்கினர். அப்போது அவர்களிடம் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதன்பிறகு தொண்டாமுத்தூர் போலீசார் மேற்கண்ட 11 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் தேவராயபுரத்தை சேர்ந்த நொய்யல் கார்த்திக் (வயது 29), புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் வீரசேகரன் (29), நரசிபுரம் பிரகாஷ் (27), தேவராயபுரம் மகாவிஷ்ணு என்ற சபரி (19), ஹரிஹரன் (19), பாரதி கண்ணன் (22), அருணகிரி (19), வாஞ்சிநாதன் (21), சந்தோஷ்குமார் (21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து புத்தூர் மதுபான பாரை சூறையாடி, சப்ளையர் பழனியப்பனின் மண்டையை உடைத்ததாக தொண்டாமுத்தூர் போலீசார் மேற்கண்ட 11 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.நொய்யல் கார்த்திக்கிற்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதற்கு பார்ட்டி கொடுப்பதற்காக அவர், நண்பர்களுடன் மதுபான பாருக்கு வந்து உள்ளார்.அப்போது தான் மேற்கண்ட சம்பவம் நடந்து உள்ளது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளிக்கு அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் நின்றது.
    • குழந்தைகள் யாரும் வெளியில் இல்லாததால் அங்கு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த ஹைஸ்கூல்புதூர், கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் நின்றது.

    இந்த நிலையில் அங்கு நேற்று மதியம் பலத்த காற்று வீசியது. இதில் அரசமரம் வேரோடு சாய்ந்தது. இதனை தற்செயலாக பார்த்த பொதுமக்கள் விலகி ஓடினார்கள். இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.

    இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஹைஸ்கூல்புதூர் கூத்தாண்டவர் கோவில் தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மரம் முறிந்து விழுந்தபோது, குழந்தைகள் யாரும் வெளியில் இல்லை. எனவே அங்கு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    • கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவருக்கு சந்தேகம்.
    • புகாரின் பேரில் வடக்கிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிப்பாளையம் கோவிந்தனூரை சேர்ந்தவர் 42 வயது பெண். இவர் வடக்கிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நானும் எனது கணவரும் கூலி வேலை செய்து வருகிறோம். நாங்கள் 2 பேரும் வேலைக்கு சென்று விட்டு வந்து ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அப்போது எங்களுக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்படும்.

    எங்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். எனது மூத்த மகளின் கணவருக்கும் எனக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக எனது கணவர் சந்தேகப்பட்டார். சம்பவத்தன்று மது போதையில் இருந்த எனது கணவர் என்னையும் எனது மருமகளையும் கொலை செய்வதற்காக வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து விரட்டினார்.

    ஆனால் நாங்கள் தப்பித்து ஓடி விட்டோம். எனவே கூறி என்னை கொலை செய்ய திட்டமிட்ட எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் வடக்கிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரமேஷ் 1 வருடங்களுக்கு முன்பு 2 கிலோ தங்கத்தை ரகுநாத்திடம் விற்பதற்காக கொடுத்துள்ளார்.
    • ரமேஷ் இதுகுறித்து பெரிய கடை போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை விநாயகபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 56). இவர் கோவை ராஜ வீதியில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் தங்க நகை வியாபாரம் செய்து வரும் கோவை செட்டித்தெருவை சேர்ந்த ரகுநாத் என்பவர் ரமேசுக்கு அறிமுகம் ஆனார். பின்னர் தான் தங்க வியாபாரம் செய்து வருவதாக அவரிடம் கூறியுள்ளார்.

    இதனை உண்மையென நம்பிய ரமேசும் 1 வருடங்களுக்கு முன்பு 2 கிலோ தங்கத்தை ரகுநாத்திடம் விற்பதற்காக கொடுத்துள்ளார். ஆனால் அதனை அவர் விற்று பணத்தை ரமேசிடம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் தங்கத்தை திருப்பி கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமேஷ் இதுகுறித்து பெரிய கடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரகுநாத் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    • மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு துணை வேந்தர் கீதாலட்சுமி சான்றிதழ் வழங்கினார்.

    கோவை,

    கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நிறைவடைந்தது.

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 14 இளநிலை பட்டப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தில் உள்ள 6 இளநிலை பட்டப் படிப்புகள், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 756 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் 79 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இதில், 287 விளையாட்டு வீரர்கள், 77 மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசைப்பட்டியல் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

    இதையடுத்து கடந்த ஜூலை 1 -ந் தேதி வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு விளையாட்டு வீரர்கள் பிரிவில் 70 விண்ணப்பதாரர்களும், மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு 71 விண்ணப்பதாரர்களும், அதேபோல் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முறையே 6515 விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்தது.

    இதன் தொடர்ச்சியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான 20 இடங்களுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உள்ள 3 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 64 இடங்கள் நிரப்பப்பட்டன. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடம் நிரம்பவில்லை.

    மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு துணை வேந்தர் கீதாலட்சுமி சான்றிதழ் வழங்கினார். வேளாண் பல்கலைக்கழக முதன்மையர் வெங்கடேச பழனிசாமி, மீன்வளப்பல்கலைக்கழக முதன்மையர் பாலசுந்தரி ஆகியோர் பங்கேற்றனர்.

    • காதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    • வீடு- வீடாகச் சென்று சுகாதாரத் துறையினர் ஆய்வு

    கோவை,

    கோவை மாவட்டம், இடிகரை பேரூராட்சியைச் சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு அண்மையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து துடியலூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காய்ச்சலின் தீவிரம் காரணமாக உயிரிழந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இடிகரை பகுதியில் கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சலுக்கு மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதையடுத்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா டெங்கு காய்ச்சலுக்கு பலியான பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவர் கூறுகையில் டெங்கு பாதிப்பின் தன்மை குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப்பகுதி முழுவதும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றார்.

    ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜன், மருத்துவர்கள் பத்மபிரியா, மவுபியா ஆகியோர் உடனிருந்தனர்.

    கோவை, கணபதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    மாநகராட்சிப் பணியாளர்கள் வீடு-வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றவும், தேவையில்லாத பொருள்களை அகற்றி, பொதுமக்கள் தேக்கிவைத்துள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியவும் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.

    • கடந்த இரண்டு நாட்களாக மக்னா யானை சரளப்பதி கிராமத்துக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
    • ஒரு வாரத்தில் பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே சுற்றித்திரியும் மக்னா யானையை பிடித்து கும்கியாக மாற்ற கோரி, ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்து வந்ததால், கடந்த 5 மாதங்களுக்கு முன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை, பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

    இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய மக்னா யானை, கோவையை அடுத்த மதுக்கரை அருகே வைத்து மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மானாம்பள்ளி அருகே மந்திரி மட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அங்கிருந்து டாப்சிலிப் பகுதிக்கு இடம் பெயர்ந்த மக்னா யானை அங்கிருந்து மீண்டும் வெளியேறி சரளப்பதி கிராமத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது.

    கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மக்னா யானை, அப்பகுதியிலுள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த இரண்டு நாட்களாக மக்னா யானை சரளப்பதி கிராமத்துக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர், அங்கிருந்த ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப் பாதுகாவலர் செல்வத்திடம், மக்னா யானையை பிடித்து கும்கியாக மாற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.

    சென்னையில் உள்ள மேல் அதிகாரிகள் அனுமதி அளித்தால் மட்டுமே, மக்னா யானையை பிடிக்க முடியும். தற்போது மக்னா யானை கிராமத்துக்குள் நுழையாமல் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். யானையை பிடிப்பது குறித்து மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

    இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, கிராமத்தில் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வரும் மக்னா யானையை இன்னும் ஒரு வாரத்துக்குள் பிடிக்காவிட்டால், மூன்று கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • உலா வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு சில நேரங்களில் உணவிற்காக வீடுகளையும் சேதப்படுத்துகின்றன.
    • வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், மாங்கரை, மருதமலை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி ஊருக்குள் உலா வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு சில நேரங்களில் உணவிற்காக வீடுகளையும் சேதப்படுத்துகின்றன.

    இந்நிலையில் ஆலாந்துறையை அடுத்த சின்னாற்று பகுதியில், மாலை நேரத்தில் 2 காட்டு யானைகள் ஊருக்குள் சுற்றி வந்துள்ளன.

    இதனை பார்த்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்து யானை வரும் பாதையில் இருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் யானை ஊருக்குள் சுற்றி வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    வழக்கமாக இரவு நேரங்களில் ஊருக்குள் வரும் யானைகள் தற்போது மாலை நேரங்களிலும் ஊருக்குள் வருவதால் பொதுமக்களும் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.

    எனவே வனத்துறையினர் நாள்தோறும் அப்பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×