search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க கொசு ஒழிப்பு பணி தீவிரம்
    X

    கோவையில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க கொசு ஒழிப்பு பணி தீவிரம்

    • காதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    • வீடு- வீடாகச் சென்று சுகாதாரத் துறையினர் ஆய்வு

    கோவை,

    கோவை மாவட்டம், இடிகரை பேரூராட்சியைச் சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு அண்மையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து துடியலூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காய்ச்சலின் தீவிரம் காரணமாக உயிரிழந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இடிகரை பகுதியில் கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சலுக்கு மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதையடுத்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா டெங்கு காய்ச்சலுக்கு பலியான பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவர் கூறுகையில் டெங்கு பாதிப்பின் தன்மை குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப்பகுதி முழுவதும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றார்.

    ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜன், மருத்துவர்கள் பத்மபிரியா, மவுபியா ஆகியோர் உடனிருந்தனர்.

    கோவை, கணபதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    மாநகராட்சிப் பணியாளர்கள் வீடு-வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றவும், தேவையில்லாத பொருள்களை அகற்றி, பொதுமக்கள் தேக்கிவைத்துள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியவும் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×