கோவையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

கோவை,

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 28). இவர் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் ஆனது. இதனை அறிந்த பிரவீன் சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் ரவி (40). இவர் தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வந்தார்.

இவர் குடும்ப செலவுக்காக ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு சிறுவிபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டு அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று காலை அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com