என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி
- முதல் பணிக்கு ரூ.1000 செலுத்தினால் 30 சதவீதம் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்.
- இதுகுறித்து அருண்குமார் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை விநாயகபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவர் ஐ.டி நிறுவனத்தில் என்ஜனீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வாட்ஸ் அப்-க்கு ஒரு எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில் தான் பகுதி நேர வேலை வாங்கி தருவதாகவும் டெலிகிராமில் தொடர்பு கொள்ளுமாறும் அந்த நபர் கூறினார். அவரது பெயர் மெலோனி என்றும் கூறினார். முதலில் எனக்கு கணக்கை தொடங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நான் ரூ.150 செலுத்தினேன்.
பின்னர் மறுநாள் ஒரு லிங்கை டெலி கிராமில் அனுப்பினார். ெடலிகிராம் குழுவிலும் இணைய சொன்னார். நானும் அந்த புதியவர்களுக்கான குழுவில் இணைந்தேன். பின்னர் தினமும் 24 பணிகளை (டாஸ்க்) கொடுத்தனர்.
முதல் பணிக்கு ரூ.1000 செலுத்தினால் 30 சதவீதம் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார். நானும் அதனை உண்மை என நம்பி பணம் கட்ட னேன். முதற்கட்டமாக ரூ. 2 லட்சத்து 59 ஆயிரத்து 800 பணம் அவரது வங்கி கணக்கில் செலுத்தினேன். மேலும் பணம் செலுத்தினால் தான் கமிஷன் கிடைக்கும் என்றார். பின்னர் 24 பணிகளையும் முடித்து சிறிது சிறிதாக தவணை முறையில் ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்து 679 வரை பணத்தை அனுப்பினேன்.பின்னர் எனக்கு கமிஷன் வரவே இல்லை.
இதனால் சந்தேகமடைந்த நான் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அந்த நபர் எனக்கு சரிவர பதில் தரவில்லை. இதனால் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். பின்னர் இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 28). டெக்ஸ் டைல்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவர் துடியலூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவன் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன்குமார் (26) என்பவர் அறிமுகமானார். அவர் எனது அக்கா பிரவீனா, நண்பர் சரவணன் ஆகியோருக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
இதனை உண்மை என நம்பிய நான் நிரஞ்சன் குமாரின் வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை அனுப்பி






