சூலூரில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மோகனப்பிரியா 7-ம் வகுப்பு படித்து வந்தார் சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூரில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சூலூர்

சூலூரைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மகள் மோகனப்பிரியா(12). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று விடுமுைற என்பதால் வீட்டில் இருந்தார். அப்போது அவரது தாய் வீட்டை சுத்தம் செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர் அறைக்கு சென்று தாழிட்டு கொண்டார்.

வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அறைக்குள் மோகனப்பிரியா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று மகளை மீட்டு சிகிச்சைக்காக சூலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com