என் மலர்
கோயம்புத்தூர்
- அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் பாலாஜி சுப்பிரமணி யம்(வயது 45).
சம்பவத்தன்று இவர் முனிசிபல் ஆபீஸ் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குயிருப்பில் வசிக்கும் நண்பர் தங்கராஜ் என்பவரை பார்ப்பதற்காக சென்றார்.
3-வது மாடிக்கு சென்று நண்பரை பார்த்து விட்டு கீழே இறங்க முயன்றார். அப்போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு ஜன்னல் வழியாக 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிசிக்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பாலாஜி சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காகங்கள் வந்து சாப்பிட்டால் அது தங்கள் முன்னோர்களே வந்து சாப்பிட்டதாக பக்தர்கள் நினைப்பது ஐதீகம்.
- கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சார்பில், ஆங்காங்கே பாதுகாப்பு தடுப்பு கம்பிகளும் போடப்பட்டிருந்தது.
பேரூர்,
ஆடி அமாவாசையை முன்னிட்டு, பேரூர் நொய்யல் படித்துறையில் முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடு த்து வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் இறந்துபோன தங்கள் முன்னோர்களின் பெயரைச் சொல்லி, எள், உருண்டை, பச்சரிசி சாதம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை படைத்து, அவர்களை நினைத்து மனமுருகி வழிபட்டனர். மேலும், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து, தீபாராதனை செய்து, முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் எள் உருண்டை மற்றும் பச்சரிசி சாதத்தை காகங்களுக்கு வைத்தனர். காகங்கள் வந்து சாப்பிட்டால் அது தங்கள் முன்னோர்களே வந்து சாப்பிட்டதாக பக்தர்கள் நினைப்பது ஐதீகம்.
ஆடி மாதம் அமாவாசையை முன்னிட்டு இன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் படையல் இட்டும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர். குறிப்பாக இந்த ஆண்டு ஆடி மாதத்தில் வருகின்ற 2-வது அமாவாசையாகும்.கடந்த அமாவாசையோடு ஒப்பிடும்போது, இந்த அமாவாசைக்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவை மாவட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். நொய்யல் ஆற்றில் நீர் வராததால், பேரூர் பேரூராட்சி சார்பில் ஆங்காங்கே தற்காலிக பைப் நீர் குழாய்களை அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் தர்ப்பண வழிபாட்டுக்கு வரும் பொதுமக்கள் தாங்கள் கொடுக்கும் தர்ப்பண இலைகளை ஆங்காங்கே விட்டுச் செல்வதால் சுகாதார சீர்கேடும் ஏற்படும் வகையில் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில், பேரூர் பேரூராட்சி சார்பில் ஆங்காங்கே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து, பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சார்பில், ஆங்காங்கே பாதுகாப்பு தடுப்பு கம்பிகளும் போடப்பட்டிருந்தது.
- கார்த்திக் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
- வீட்டை விட்டு வெளியேறி நவாவூர் கோவிலில் திருமணம் செய்தனர்.
கோவை,
கோவை கணுவாய் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது32).
கார்த்திக் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கோகிலா(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே காத லர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர்.
அதன்படி சம்பவத்தன்று 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் நவாவூரில் உள்ள கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர். பின்னர் 2 பேரும் பாது காப்பு கேட்டு வடவள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 2 தரப்பு பெற்றோரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- யானை பாகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுகத்தியை சேர்ந்தவர் முரளி (வயது24).
இவர் டாப்சிலிப் யானைகள் முகாமில் பாகனாக வேலை பார்த்து வந்தார்.
முரளி, வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள பரணி என்ற யானையை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் யானையை முகாமுக்குள்ளேயே நடைபயிற்சி உள்ளிட்டவற்றிற்கு அழைத்து செல்வது வழக்கம். மேலும் யானைக்கு தேவையான உணவுகளையும் வழங்கி வந்தார்.
நேற்று காலை, வழக்கம்போல முரளி பணிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார். திடீரென அவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தும் அவர் எழுந்திருக்கவில்லை.
இதையடுத்து உறவினர்கள் அவரை தூக்கி கொண்டு, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முரளி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். யானை பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுமுகை வழியாக ரங்கம்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
- விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
சென்னையை சேர்ந்தவர் பெண்டால் நாயுடு(வயது 30). இவரது நண்பர் மோகன் ரெட்டி(24).
இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
பின்னர் அங்கு சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பெண்டால் நாயுடு ஓட்டிச் சென்றார்.
சிறுமுகை வழியாக ரங்கம்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பெண்டால் நாயுடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மோகன்ரெட்டியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பிரதீபனுக்கும் ராஜேஷ் குமாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீபனை கைது செய்தனர்.
கோவை,
கோயம்புத்தூர் கோவை சித்தாபுதூர் இளங்கோ நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 40), பெயிண்டர்.
இவருடைய சகோதரி கணவர் பிரதீபன் (47) என்பவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பிரதீபனின் மனைவி, தனது தம்பியான ராஜேஷ் குமாரிடம் கியாஸ் சிலிண்டர் கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை பிரதீபன் தட்டிக்கேட்டார்.
இதனால் பிரதீபனுக்கும் ராஜேஷ் குமாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபன், அங்கு கிடந்த கட்டையை எடுத்து ராஜேஷ் குமாரை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீபனை கைது செய்தனர்.
- போலீசார் நேற்று முன்தினம் இடையர்பாளையம் மாசாணி அம்மன் கோவில் அருகே ரோந்து வந்தனர்.
- 2 சேவல்கள், ரூ.5 ஆயிரத்து 250 மற்றும் 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
கோயம்புத்தூர் சுல்தான்பேட்டை சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இடையர்பாளையம் மாசாணி அம்மன் கோவில் அருகே ரோந்து வந்தனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக சேவல் வைத்து சூதாடி கொண்டு இருந்த போகம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 23), பல்லடம் தாலுகா சுக்கம்பாளையத்தை சேர்ந்த கோபால்(33), தேகாணியை சேர்ந்த சரண்(20), சதீஷ்குமார்(27) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 சேவல்கள், ரூ.5 ஆயிரத்து 250 மற்றும் 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- தமிழகத்தில் எசுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.
- கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.99 (உயிருடன்) ஆக இருந்தது.
கோவை,
உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோயம்புத்தூர் பொள்ளாச்சி கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து, கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை உள்ள 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு(பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.99 (உயிருடன்) ஆக இருந்தது. 8-ந் தேதி ரூ.101, 10-ந் தேதி ரூ105, 11-ந்தேதி ரூ.107, நேற்று முன்தினம் ரூ.112 என கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஒரு வாரத்தில் நுகர்வு அதிகரித்து கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.13 வரை உயர்ந்து உள்ளதால், தற்போது கிலோவிற்கு ரூ.18 வரை கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஆடி மாதம் முடிவடைய உள்ளதால் நுகர்வு இன்னும் அதிகரித்து, விலை மேலும் உயரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- கலெக்டர் கிராந்தி குமார் பாடி 281 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
- 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கோவை,
நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவை வ.உ.சி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் காலை 9 மணிக்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
பின்னர் கோவை மாநகர, மாவட்ட போலீஸ்துறையில் சிறப்பாக பணியாற்றி போலீசார் 109 பேர், அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 153 பேர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் 15 பேர், மொழி போராட்ட தியாகிகள் 4 பேர் என மொத்தம் 281 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 350 பேர் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை பொது மக்கள் உள்பட ஏராளமா னோர் குடும்பத்துடன் வந்து கண்டுகளித்தனர்
நிகழ்ச்சியில், மேற்கு மண்டல ஐ.ஜி பவானிஸ்வரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம், மதிவாணன், சுகாஷினி மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவையொட்டி வ.உ.சி. மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவை மாநகராட்சி வளாகத்தில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தேசிய கொடியேற்றி வைத்து மரியாைத செலுத்தினார்.
இதில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார் மற்றும் கோவை மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி துணை மேயருக்கு பள்ளி குழந்தைகள் பேண்ட் வாத்தியம் வாசித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- ஆண்டணி ஆனந்த் பாபு மருதமலை ரோட்டில் சென்ற போது, அவரை 3 பேர் வழிமறித்தனர்.
- ஆண்டணி ஆனந்த் பாபு ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சுந்தராபுரம் ஜூபிலி வீதியை சேர்ந்தவர் ஆண்டணி ஆனந்த் பாபு(வயது43).
இவர் சம்பவத்தன்று வேலை முடித்து விட்டு,வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மருதமலை ரோட்டில் சென்ற போது, அவரை 3 பேர் வழிமறித்தனர். பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டினர்.
தொடர்ந்து அவரின் கைகளை பின்புறம் கட்டி வைத்து விட்டு, அவரது பையில் இருந்த ரூ.3 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆண்டனி ஆனந்த்பாபுவிடம் பணம் பறித்தது, அவரது நண்பரான சாரமேடு பிலால் எஸ்டேட்டை சேர்ந்த பாரூக் நவாஸ்(22) மற்றும் அவரது நண்பர்கள் முகமது மிசல்(19), ரிஸ்வான்(19) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை வெள்ளலூர் பேச்சியம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார்(28). சம்ப வத்தன்று இவர் அங்குள்ள மார்க்கெட்டிற்கு பின்புறம் இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர், கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி ரூ.13 ஆயிரத்தை பறித்து சென்றார். இதுகுறித்து பெரியகடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கெம்பட்டி காலனியை சேர்ந்த சூர்யா என்பவரை கைது செய்தனர்.
- சாய்பாபா காலனி பகுதியில், ரூ.46.61 கோடி மதிப்பில் பாலம் கட்ட, கடந்த 9-ந் தேதி டெண்டர் வெளியிடப்பட்டது.
- இவ்விரு பாலங்களையும் கட்டுவதற்கு, தலா 4 மாதங்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
கோவை,
கோவை நகரின் வழியே பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கின்றன. இவற்றில் திருச்சி ரோட்டில் சுங்கம் பகுதியிலும், மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ் ஆகிய இடங்களிலும் பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதே ரோட்டில், பெரிய நாயக்கன்பாளையத்திலும், பொள்ளாச்சி ரோட்டில் உக்கடம் பகுதியிலும், மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இருப்பினும், தேசிய நெடுஞ்சாலைகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால், திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனி, சத்தி ரோட்டில் சரவணம்பட்டி பகுதியிலும் பாலங்கள் கட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்தது.
திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் பகுதியில் 2.4 கி.மீ., நீளத்துக்கும், மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனி பகுதியில் 1.14 கி.மீ., தூரத்துக்கும், சரவணம்பட்டியில் காளப்பட்டி ரோடு சந்திப்பு-துடியலூர் ரோடு சந்திப்பு வரை 1.4 கி.மீ., நீளத்துக்குமாக 3 புதிய பாலங்கள் கட்ட, ரூ.280 கோடி நிதியையும், மத்திய அரசு ஒதுக்கிவிட்டது. மூன்று பாலங்களுக்கும் 2022 ஏப்ரலில் டெண்டரும் விடப்பட்டது.
ஆனால், கோவை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகி வந்ததால், இந்த 3 பாலங்களில் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
திட்ட அறிக்கையில், அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோட்டில் மட்டுமே முதற்கட்டமாக மெட்ரோ ரெயில் தடம் அமைவது உறுதியானது.
இதனால், சரவணம்பட்டி தவிர, மற்ற 2 பாலங்களையும கட்ட மெட்ரோ நிறுவனம் தடையின்மைச் சான்று வழங்கியது.
அதன்படி, மற்ற இரண்டு பாலங்களையும் கட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விட்டுள்ளது. சிங்காநல்லூரில் ரூ.110.80 கோடி மதிப்பில் பாலம் கட்ட, கடந்த ஜூலை 24 அன்று டெண்டர் விடப்பட்டது. இது செப்டம்பர் 11-ல் இறுதி செய்யப்படவுள்ளது. சாய்பாபா காலனி பகுதியில், ரூ.46.61 கோடி மதிப்பில் பாலம் கட்ட, கடந்த 9-ந் தேதி டெண்டர் வெளியிடப்பட்டது. இது வருகிற செப்டம்பர் 26-க்குள் இறுதி செய்யப்படும்.
செப்டம்பர் இறுதிக்குள் இரண்டு டெண்டர்களும் இறுதி செய்யப்படும் பட்சத்தில், அக்டோபரில் பணிகள் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது.
இவ்விரு பாலங்களையும் கட்டுவதற்கு, தலா 4 மாதங்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு பாலங்களுக்குமே, ஒரு சதுர அடி கூட நிலம் கையகப்படுத்த வேண்டிய தேவை இல்லாத காரணத்தால், பணிகளை முடிப்பதில் தடைகள் இருக்காது.
சரவணம்பட்டியில் பாலம் கட்டுவது குறித்து, பின்பு விவாதித்துக் கொள்ளலாம் என்று, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சரவணம்பட்டியில் பாலம் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தில், மெட்ரோ தடத்துக்கான தூண்களை அமைக்க, நான்கு மீட்டர் அளவுக்கு நிறுவனமே, நிலம் எடுத்துக் கொடுப்பதாகவும், அத்துடன் இணைந்து பாலம் கட்டலாம் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளதாகத் தெரிகிறது.
- மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை கண்டுபிடித்து தரும்படி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
கோவை.
கோவை சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (49). இவருக்கு 20 வயதில் மகள் உள்ளார்.
இவர் கோவை பன்னிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
ஆனால் மாலை வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் மாணவியின் செல்போனுக்கு போன் செய்தனர். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர்கள் மாணவியின் கல்லூரி தோழிகள் விசாரித்ததுடன், அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை கண்டுபிடித்து தரும்படி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோருடன் கல்லூரிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்தார்.
பட்டமளிப்பு விழா முடிந்ததும், மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரி அலுவலகத்தில் சென்று, சான்றிதழ் வாங்கி விட்டு வருவதாக கூறி சென்றார். பெற்றோர் கல்லூரி வளாகத்தில் காத்திருந்தனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போதும், அது சுவிட்ச் ஆப் என வந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
போத்தனூரை சேர்ந்தவர் சிரஞ்சிவி. இவரது மனைவி சுசித்ரா (32). இவர் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சுசித்ரா வீட்டிற்கு வரவில்லை. இது தொடர்பாக சிரஞ்சிவி அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுசித்ராவை தேடி வருகிறார்கள்.






