என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்- கலெக்டர் கிராந்திகுமார் தேசியக் கொடியேற்றி வைத்தார்
    X

    கோவையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்- கலெக்டர் கிராந்திகுமார் தேசியக் கொடியேற்றி வைத்தார்

    • கலெக்டர் கிராந்தி குமார் பாடி 281 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
    • 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    கோவை,

    நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவை வ.உ.சி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் காலை 9 மணிக்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

    பின்னர் கோவை மாநகர, மாவட்ட போலீஸ்துறையில் சிறப்பாக பணியாற்றி போலீசார் 109 பேர், அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 153 பேர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் 15 பேர், மொழி போராட்ட தியாகிகள் 4 பேர் என மொத்தம் 281 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 350 பேர் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை பொது மக்கள் உள்பட ஏராளமா னோர் குடும்பத்துடன் வந்து கண்டுகளித்தனர்

    நிகழ்ச்சியில், மேற்கு மண்டல ஐ.ஜி பவானிஸ்வரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம், மதிவாணன், சுகாஷினி மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சுதந்திர தின விழாவையொட்டி வ.உ.சி. மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவை மாநகராட்சி வளாகத்தில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தேசிய கொடியேற்றி வைத்து மரியாைத செலுத்தினார்.

    இதில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார் மற்றும் கோவை மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி துணை மேயருக்கு பள்ளி குழந்தைகள் பேண்ட் வாத்தியம் வாசித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×