ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி சென்னை வாலிபர் பலி

சிறுமுகை வழியாக ரங்கம்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி சென்னை வாலிபர் பலி
Published on

கோவை:

சென்னையை சேர்ந்தவர் பெண்டால் நாயுடு(வயது 30). இவரது நண்பர் மோகன் ரெட்டி(24).

இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

பின்னர் அங்கு சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பெண்டால் நாயுடு ஓட்டிச் சென்றார்.

சிறுமுகை வழியாக ரங்கம்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பெண்டால் நாயுடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மோகன்ரெட்டியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com