என் மலர்
கோயம்புத்தூர்
- கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளன.
- 3 நாள் சிறப்பு முகாமில் 48 ஆயிரம் பேர் பதிவு
கோவை,
தமிழகத்தில் பெண்க ளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என பெயரிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் வசிக்கும் ரேஷன்கார்டு தாரர்களுக்கு ஊழியர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க ப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன.
கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 11 லட்சத்து 43 ஆயிரத்து 891 வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து கோவையில் உள்ள 839 கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் கட்ட முகாம் நடத்தப்பட்டது. அப்போது 6 லட்சத்து 33 ஆயிரத்து 525 கார்டுதார்களில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 480 பேர் விண்ணப்பத்தை பெற்று கொண்டனர்.
அவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 354 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் பதிவு செய்தனர். ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 126 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. மீத முள்ள 562 கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட முகாம் நடத்தப் பட்டது. அங்கு 5 லட்சத்து 10 ஆயிரத்து 366 கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் 4 லட்சத்து 22 ஆயிரத்து 300 கார்டு தார்களே விண்ணப்பத்தை பெற்றனர். அவர்களில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 908 பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். மீதம் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 392 பெண்கள் விண்ணப்பத்தை ஒப்படைக்கவில்லை.
கோவையில் நடத்தப்பட்ட 2 முகாம்களிலும் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 98 ஆயிரத்து 518 பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திரும்ப வழங்கவில்லை. அதே நேரம் முதல்கட்ட முகாமில் 68 ஆயிரத்து 45 கார்டுதாரர்கள், 2-ம் கட்ட முகாமில் 88 ஆயிரத்து 66 கார்டுதாரர்கள் என மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 111 பேர் விண்ணப்பமே பெறவில்லை என்பது தெரிய வந்து உள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் விடுபட்ட அனைத்து பெண்களும் விண்ணப்பம் பெற்று பதிவு செய்வதற்கு ஏதுவாக, தமிழக அரசு 3 நாள் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து இருந்தது.
அதன்படி கோவை மாவட்டத்தில் 18, 19,20-ந்தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டு விண்ணப் பங்களை பெற்று பதிவு செய்து உள்ளனர்.
அதன்படி கோவை மாவட்டத்தில் 3 நாளில் மட்டும் 48,687 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இங்கு கடந்த 18, 19, 20-ந்தேதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் மட்டும் தாலுகாவாரியாக பதிவான விண்ணப்பங்களின் விவரம் வருமாறு:
ஆனைமலை-2808, அன்னூர்-1737, கோவை வடக்கு-13483, கோவை தெற்கு-7273, கிணத்துக்கடவு-1067, மதுக்கரை-5207, மேட்டுப்பாளையம்-4100, பேரூர்-5312, பொள்ளாச்சி-3499, சூலூர்-3732, வால்பாறை-469. கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் மாதாந்திர உரிமைத்தொகை பெறுவதற்காக 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது.
இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், கோவையில் ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுவோரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து உள்ளனர். அத்தகைய விண்ணப்பங்கள் பரிசீலனையின் போது நிராகரிக்கப்படலாம் என்று தெரிவித்து உள்ளனர்.
- மகன்கள் பார்க்க வராததால் அன்னம்மாள் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.
- தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கணுவாய் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அன்னம்மாள் (வயது 55). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேரும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர்.
அன்னமாளை யாரும் பார்ப்பதற்கு வருவதில்லை. அவர் தனியாக வசித்து வந்தார். மகன்கள் பார்க்க வராததால் அன்னம்மாள் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷம் குடித்தார். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சத்யாவை சூர்யா,கேசவன் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
- மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சத்யா புகார் செய்தார்.
மேட்டுப்பாளையம்,
நீலகிரி மாவட்டம் கவரட்டி சக்தி நகரைச்சேர்ந்தவர் மாரசாமி. இவரது மகன் சத்யா (23). கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ரங்கராஜ் என்பவரது வீட்டு திருமணம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதனால் சத்யா தனது குடும்பத்தினருடன் திருமணத்திற்கு வந்துள்ளார். கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச்சேர்ந்தவர்கள் சூர்யா (20), கேசவன் (22). கூலித்தொழிலாளர்கள். இவர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த சத்யாவை சூர்யா,கேசவன் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட சத்யாவை அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சத்யாவை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சத்யா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல் நாயகி மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
- 16 செல்போன்களள் பறிமுதல் செய்யப்பட்டன.
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் மர்ம நபர்கள் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கரவழி மாதப்பூர் அண்ணா நகரில் உள்ள தனியார் மில் ஊழியர்கள் தங்கும் அறையில் 5 செல்போன் திருட்டு போனது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல் நாயகி மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் பொரு த்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்
இந்த நிலையில் கருமத்தம்பட்டி போக்குவரத்து பணிமனை அருகே, 3 வட மாநில வாலி பர்கள் செல்போன்களை குறைந்த விலையில் விற் பனை செய்வதாக தனிப்படை போலீஸ்சா ருக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் ஒடிசா மாநிலம், பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் குமார் மாலிக், பிரதாப்மாலிக் மற்றும் ராஜேஷ் மாலிக் என்பதும், அவர்கள் கரவழி மாதப்பூர் அண்ணா நகரில் உள்ள தனியார் மில் ஊழியர் விடுதியில் செல்போன் திருடியதும் தெரிய வந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 செல்போன்களள் பறிமுதல் செய்யப்பட்டன.
கருமத்தம்பட்டி போலீசார் கூறுகையில் இந்த வழக்கில் துப்பு துலக்க சிசிடிவி காமிராக்கள் உதவியாக இருந்தது. எனவே அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கும் அறையில் சிசிடிவி காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
- தாய் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.
கோவை,
கோவை பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயது வாலிபர். இவர் 39 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர்.
அவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். அந்த பெண் தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கணவரை பிரிந்து அவர் வாலிபருடன் வந்து விட்டார். அந்த பெண்ணின் 15 வயது மகளும் இவர்கள் பராமரிப்பிலேயே இருந்தனர்.அந்த பெண் வேலைக்கு சென்ற பிறகு தனியாக இருக்கும் அவரது மகளுக்கு வளர்ப்பு தந்தையான அந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பல நாட்களாக அவரது தொல்லை நீடித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று அந்த பெண் வெளியே சென்று இருந்தார். அந்த சமயம் 15 வயது சிறுமிக்கு வாலிபர் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி தனது தாய்க்கு தகவல் தெரிவித்து அந்த சிறுமி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி மூலமாக விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
- 23 பேருக்கு ரூ.3 கோடிக்கு முதலீட்டு ஆதாரத்தொகை வழங்கப்பட்டது.
கோவை,
தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் 'தமிழ்நாடு ஸ்டார்ட்-அப்' திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி மூலமாக விழாவை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சி யில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. தொழில்துறையில் சாதனை படைத்த வல்லுனர்கள் சிறப்புரையாற்றினர். பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
கண்காட்சி வளாகத்தில் 450-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள், அரங்குகள் அமைந்திருந்தன. முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்றனர்.மருத்துவ அவசர காலங்களில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கான அதிநவீன டிரோன், மாற்றுத்திறனாளி களுக்கான நவீன வாக னங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்படும் வகையில் பொருட்களை உற்பத்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன.
ஸ்டார்ட்-அப் திருவிழா வில் 23 பேருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மொத்தம் ரூ.3 கோடிக்கு முதலீட்டு ஆதார தொகை வழங்கப்பட்டது. 20 பெண் தொழில் முனைவோர்களுக்கு தொழில் விரிவாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 10 ஆயிரத்தி ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்ப ட்டது.தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் அருண்ராய், தமிழ்நாடு 'ஸ்டார்ட் அப்' இன்னே ாவேசன் திட்ட இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.
- மணமகனும் அடிக்கடி நிச்சயமான மணமகளிடம் செல்போனில் பேசி பழகி வந்தார்.
- புது மாப்பிள்ளை இரவு முழுவதும் வீட்டு வாசலில் படுத்து கிடக்க நேரிட்டது.
கோவை:
கோவை சூலூரை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தனது மகனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி முடித்தார். இதனை தொடர்ந்து இருதரப்பு பெற்றோரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மணமகனும் அடிக்கடி நிச்சயமான மணமகளிடம் செல்போனில் பேசி பழகி வந்தார். அந்த ஜோடியின் திருமணம் இன்று நடப்பதாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூர் தொழில் அதிபர், தனது மகனிடம் தாடியை எடுத்து விடு, அதுதான் உனக்கு நன்றாக இருக்கும் என்று கூறி உள்ளார். இதன்படி புதுமாப்பிள்ளை சலூனுக்கு புறப்பட்டார்.
அப்போது அவருக்கு மணமகளிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. உங்களுக்கு தாடி அழகாக உள்ளது. எனவே அதை எடுக்க வேண்டாம். டிரிம் செய்து கொள்ளுங்கள். அது போதும் என்று அறிவுரை கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து புது மாப்பிள்ளை சலூனுக்கு சென்று மணமகளின் விருப்பப்படி தாடியை டிரிம் செய்தார். அதன்பிறகு வீட்டுக்கு வந்தார். அப்போது தந்தை வீட்டில் இருந்தார்.
அவருக்கு மகன் தாடியுடன் இருந்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர், நான் சொன்ன பிறகும் ஏன் தாடியை எடுக்கவில்லை என்று சத்தம் போட்டார்.
அதற்கு புது மாப்பிள்ளை, மணமகளின் விருப்பப்படி தாடியை டிரிம் செய்ததாக தெரிவித்து உள்ளார். இது தந்தையை மேலும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியது.
நான் தாடியை சேவிங் பண்ண சொன்னேன். ஆனால் நீ அந்த பெண்ணின் விருப்பப்படி தாடியை டிரிம் செய்து உள்ளாய். என்னை மதிக்க தவறி விட்டாய் என்று சத்தம் போட்டு உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகன் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்து உள்ளார். இருந்தபோதிலும் தந்தை மனம் இரங்கவில்லை. வீட்டில் இருந்து மகனை வெளியே தள்ளி கதவை பூட்டிக் கொண்டார்.
இதனால் புது மாப்பிள்ளை இரவு முழுவதும் வீட்டு வாசலில் படுத்து கிடக்க நேரிட்டது. இந்த நிலையில் அவர் மணமகளுக்கு போன் போட்டு நடந்த விவரங்களை தெரிவித்து உள்ளார். இது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் தந்தையிடம் கூறி மணமகனின் தந்தையை சமாதானப்படுத்தும்படி கேட்டுக்கொண்டு உள்ளார். இதன்படி அவர் மணமகனின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது அங்கு இருந்த தொழில் அதிபரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதிலும் அவர் சமரசம் ஆகவில்லை. எனவே மணமகளின் தந்தை புறப்பட்டு போய் விட்டார்.
இதற்கிடையே மணமகனின் தந்தை சமூகவலைதளத்தில், எனது மகனின் திருமணம் நின்று விட்டது. எனவே திருமண மண்டபத்துக்கு யாரும் வர வேண்டாம் என்று பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். இது மணமகள் வீட்டாரை அதிர்ச்சி அடைய வைத்தது.
எனவே இன்று நடப்பதாக இருந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது. இதற்கிடையே ஊர் பெரியவர்கள் மற்றும் இருதரப்பு உறவினர்கள் அனைவரும் மணமகனின் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மணமகனின் தந்தை மிகவும் சுத்தமாக இருப்பதை விரும்புவாராம். அதனால் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முகச்சவரம் செய்து கொள்ள வேண்டும், முடியை நீளமாக வளர்க்கக் கூடாது என அறிவுறுத்துவாராம். அதையே அவரும் கடைபிடித்து வந்துள்ளார். ஆனால் அவரது மகனோ திருமண நிச்சயத்துக்கு பிறகு தந்தையின் பேச்சை கேட்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்து அவர் தனது மகன் திருமணத்தை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் சூலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- காசோலையை வங்கியில் செலுத்தியபோது வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்து விட்டது.
- புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் அன்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
நாகர்கோவிலை சேர்ந்தவர் விஷால் கிருஷ்ணன் (24). இவர் ரத்தினபுரி போலீசில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் நாகர்கோவிலில் தேங்காய் மொத்த விற்பனை வியாபாரம் செய்து வருகிறேன். என்னிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த அன்வர் சதாத் (52) என்பவர் 17 ஆயிரம் கிலோ தேங்காய் வாங்கினார்.
இதற்கான முன்பணமாக ரூ.3 லட்சம் கொடுத்து உள்ளார். மீதம் உள்ள பணத்துக்கு 2 காசோலை கொடுத்தார். அதனை வங்கியில் செலுத்தியபோது வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்து விட்டது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அவர் ரூ.74 ஆயிரம் தந்து விட்டு, மீதி பணமான ரூ.19.96 லட்சத்தை திருப்பி தர மறுத்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் அன்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று மாலை மாணவி விடுதியில் இருந்து வெளியே சென்றார்.
- கல்லூரி நிர்வாகம் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.
கோவை.
கன்னியாகுமரி மாவட்டம் எடக்காட்டை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் கோவையில் விடுதியில் தங்கி பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை மாணவ விடுதியில் இருந்து வெளியே சென்றார். அதன்பின் அவர் திரும்பி வரவில்லை.
இதுதொடர்பாக அவர்களது பெற்றோரை தொடர்புகொண்டு தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் வரவில்லை என தெரிவிக்கவே கல்லூரி நிர்வாகம் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.
கோவை பி.என்.பாளையம், ஜோதி நகரை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் ரேஸ்கோர்சில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை கல்லூரிக்கு செல்தாக புறப்பட்டு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீட் தேர்வையும் பிரித்தாளும் அரசியல் ஆயுதமாக தி.மு.க பயன்படுத்தி வருகிறது.
- இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் மாணவர்களைத்தான் பலிகடா ஆக்கினர்.
கோவை.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. 2017 முதல் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு நடந்து வருகிறது.
ஆனாலும், இந்தி வெறுப்பு, திராவிட இனவாதம் போல, நீட் தேர்வையும் பிரித்தாளும் அரசியல் ஆயுதமாக தி.மு.க பயன்படுத்தி வருகிறது.
2021ல் நடந்த தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து முதல் கையெழுத்திடுவோம். அதற்கான ரகசியம் எனக்கு தெரியும் என தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வை, உச்ச நீதிமன்ற உத்தரவில்லாமல் ரத்து செய்ய முடியாது என்பது தெரிந்தும் பொய்யான வாக்குறுதி அளித்தனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று நீட்ைட ரத்து செய்வோம் என கூறி மக்களையும், மாணவர்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக மாணவர்களிடம் நீட் நடக்குமா, நடக்காத என்ற குழப்ப மனநிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும்" என முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அப்படியெனில், 2021-ல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது அரசியல் மாற்றம் இல்லையா?
2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வேண்டும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டும் என்பதெல்லாம் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினுக்கும், அவரது மகன் உதயநிதிக்கும் தெரியாதா? "திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதன் ரகசியம் எனக்கு தெரியும்" என்று உதயநிதி சொன்னதெல்லாம் மாணவர்களை, மக்களை ஏமாற்றும் நாடகமா?
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும்" என்று அமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார். இதிலிருந்து நீட் தேர்வை அரசியலாக்கி குளிர்காய நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் மாணவர்களைத்தான் பலிகடா ஆக்கினர். இப்போதும் அதுதான் நடக்கிறது. ஆனால் இந்த முறை தமிழக மாணவர்களும், தமிழக மக்களும் ஏமாற மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிற 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
- 24-ந் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடத்தப்பட உள்ளது.
குனியமுத்தூர்,
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஈச்சனாரி விநாயகர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிற 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான விழா இன்று காலை 8 மணிக்கு நன்மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, திருமுறை பாராயணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இறை ஆணை பெறுதல், தூய நீராக்கல், மூத்த பிள்ளையார் வழிபாடு, மண்ணெடுத்தல், காப்பணிவித்தல், திருக்குடங்களை வேள்விச்சாலைக்கு எடுத்து வருதல், மூத்த பிள்ளையாருக்கு முதல்கால வேள்வி நடத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் இன்று நடக்கின்றன.
நாளை (21-ந் தேதி) நன்மங்கள இசை, திருமுறை பாராயணம், ஈச்சனாரி விநாயகருக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை, மூன்றாம் கால வேள்வி பூஜை உள்ளிட்டவை நடை பெறுகின்றன. வருகிற 22-ந் தேதி நன்மங்கள இசை, திருமுறை பாராயணம், நான்காம் கால வேள்வி பூஜை, 5-ம் கால வேள்வி பூஜை நடக்கிறது.
23-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நன்மங்கள இசை, திருமுறை பாராயணம் நடத்தப்படுகிறது. காலை 5.45 மணிக்கு கலைகள் நாடிகளின் வழியாக மூலத்திருமேனியை அடைதல் நிகழ்வு நடத்தப்படுகிறது. காலை 6.45 மணி முதல் 7.45 மணிக்குள் ஈச்சனாரி விநாயகர், கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபி ஷேக விழா நடத்தப்படுகிறது. அன்று மாலை 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
24-ந் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடத்தப்பட உள்ளது.
- கட்சி ஆரம்பித்து 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.
- ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கான ஆட்சி நடத்தினார்.
கோவை,
முன்னாள் அமைச்சரும், கோவை முன்னாள் மேயருமான செ.ம. வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க.
தன் இதயத்தில் தெய்வமாக இருக்கும் அண்ணாவை நினைவு கூறும் வகையில் அவரது பெயரையே கட்சி பெயராகவும், அவரது படத்துடன் கொடியையும் உருவாக்கினார்.
கட்சி ஆரம்பித்த 6 மாதத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்து மாபெரும் வெற்றியுடன் வரலாறு படைத்தார் அ.தி.மு.க. வேட்பாளர்
இதேபோல் கோவை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் செ.அரங்கநாயகம் வெற்றிய டைந்து முதல் எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
1977-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக அ.தி.மு.க. 133 இடங்களை கைப்பற்றி ஜூன்.30-ல் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக பதவியேற்றார்.
11 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் ஆறாத சோறு, சத்துணவு திட்டம் உள்பட பல திட்டங்களையும், 8-வது உலக தமிழ் மாநாட்டையும் நடத்தினார்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு இந்த கட்சியையும், ஆட்சியை யும் திறம்பட நடத்தியவர் ஜெயலலிதா. 1991-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிக பெரிய வெற்றி பெற்று ஜூலை 24-ந் தேதி முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து 2001, 2011, 2016-ம் ஆண்டுகளிலும் வெற்றி முதல்-அமைச்சரானார்.
ஜெயலலிதா, முதல் அமைச்சராக இருந்த போது இலவச அரிசி திட்டம் உள்பட பல திட்டங்களை கொண்டு வந்தார்.
இந்தியாவிலேயே எந்தமாநிலத்திற்கு இல்லாத வகையில் தமிழ்நாட்டிற்கு 69 சதவீத இடஒதுக்கீடு பெற்று தந்தவர். 13-வது உலக தமிழ் மாநாட்டை நடத்திய பெருமைக்குரியவர்.
ஜெயலலிதா இறந்த பின்னும் இந்த இயக்கம் 50 ஆண்டுகளை கடந்து ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருந்து மக்களுக்கு பணியாற்றி வருகிறது.
கட்சி ஆரம்பித்து 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழியில் அவர்களின் வழி தோன்ற லாக எடப்பாடியார் ஆட்சி யையும், கட்சியையும் திறம்பட நடத்தி வருகிறார்.
ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கான ஆட்சி நடத்தினார். குறிப்பாக, குடிமராமத்து திட்டம், ரூ.2,500 பொங்கல் பரிசு, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவீத இடஒதுக்கீடு, அவினாசி-அத்திக்கடவு திட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தார்.நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்று தொண்டர்களுடன் எளிமையாக பழகி அரவணைத்து செல்கிறார்.
தற்போது எதிர்கட்சி தலைவராக இருந்து அரசு செய்யக்கூடிய அனைத்து தவறுகளையும் திறம்பட மக்களிடம் எடுத்து கூறி வருகிறார்.
4 ஆண்டு காலம் மக்களுக்காக பணியாற்றி, மக்கள் முதல்வராக திகழ்ந்த நமது எடப்பாடியார் கூடல் மாநகரமான மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடத்தும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அனைவரும் பங்கேற்று பொதுச்செயலாளர் கரத்தை வலுப்படுத்துவோம்.
மதுரையில் நடக்கும் மாநாடு அ.தி.மு.கவுக்கு திருப்பு முனையாக அமையும். புரட்சித்தலைவர், புரட்சி தலைவி வழியில் ஆட்சி நடத்திய நமது பொதுச்செயலாளரை மீண்டும் தமிழகத்தின் முதல்-அமைச்சராக அரியணை ஏற்றி மக்களாட்சி நடத்த இந்நாளில் சபதம் ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






