என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும்  அ.தி.மு.க. ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம்- முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி அறிக்கை
    X

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம்- முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி அறிக்கை

    • கட்சி ஆரம்பித்து 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.
    • ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கான ஆட்சி நடத்தினார்.

    கோவை,

    முன்னாள் அமைச்சரும், கோவை முன்னாள் மேயருமான செ.ம. வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க.

    தன் இதயத்தில் தெய்வமாக இருக்கும் அண்ணாவை நினைவு கூறும் வகையில் அவரது பெயரையே கட்சி பெயராகவும், அவரது படத்துடன் கொடியையும் உருவாக்கினார்.

    கட்சி ஆரம்பித்த 6 மாதத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்து மாபெரும் வெற்றியுடன் வரலாறு படைத்தார் அ.தி.மு.க. வேட்பாளர்

    இதேபோல் கோவை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் செ.அரங்கநாயகம் வெற்றிய டைந்து முதல் எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

    1977-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக அ.தி.மு.க. 133 இடங்களை கைப்பற்றி ஜூன்.30-ல் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக பதவியேற்றார்.

    11 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் ஆறாத சோறு, சத்துணவு திட்டம் உள்பட பல திட்டங்களையும், 8-வது உலக தமிழ் மாநாட்டையும் நடத்தினார்.

    எம்.ஜி.ஆருக்கு பிறகு இந்த கட்சியையும், ஆட்சியை யும் திறம்பட நடத்தியவர் ஜெயலலிதா. 1991-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிக பெரிய வெற்றி பெற்று ஜூலை 24-ந் தேதி முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து 2001, 2011, 2016-ம் ஆண்டுகளிலும் வெற்றி முதல்-அமைச்சரானார்.

    ஜெயலலிதா, முதல் அமைச்சராக இருந்த போது இலவச அரிசி திட்டம் உள்பட பல திட்டங்களை கொண்டு வந்தார்.

    இந்தியாவிலேயே எந்தமாநிலத்திற்கு இல்லாத வகையில் தமிழ்நாட்டிற்கு 69 சதவீத இடஒதுக்கீடு பெற்று தந்தவர். 13-வது உலக தமிழ் மாநாட்டை நடத்திய பெருமைக்குரியவர்.

    ஜெயலலிதா இறந்த பின்னும் இந்த இயக்கம் 50 ஆண்டுகளை கடந்து ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருந்து மக்களுக்கு பணியாற்றி வருகிறது.

    கட்சி ஆரம்பித்து 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.

    புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழியில் அவர்களின் வழி தோன்ற லாக எடப்பாடியார் ஆட்சி யையும், கட்சியையும் திறம்பட நடத்தி வருகிறார்.

    ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கான ஆட்சி நடத்தினார். குறிப்பாக, குடிமராமத்து திட்டம், ரூ.2,500 பொங்கல் பரிசு, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவீத இடஒதுக்கீடு, அவினாசி-அத்திக்கடவு திட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தார்.நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்று தொண்டர்களுடன் எளிமையாக பழகி அரவணைத்து செல்கிறார்.

    தற்போது எதிர்கட்சி தலைவராக இருந்து அரசு செய்யக்கூடிய அனைத்து தவறுகளையும் திறம்பட மக்களிடம் எடுத்து கூறி வருகிறார்.

    4 ஆண்டு காலம் மக்களுக்காக பணியாற்றி, மக்கள் முதல்வராக திகழ்ந்த நமது எடப்பாடியார் கூடல் மாநகரமான மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடத்தும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அனைவரும் பங்கேற்று பொதுச்செயலாளர் கரத்தை வலுப்படுத்துவோம்.

    மதுரையில் நடக்கும் மாநாடு அ.தி.மு.கவுக்கு திருப்பு முனையாக அமையும். புரட்சித்தலைவர், புரட்சி தலைவி வழியில் ஆட்சி நடத்திய நமது பொதுச்செயலாளரை மீண்டும் தமிழகத்தின் முதல்-அமைச்சராக அரியணை ஏற்றி மக்களாட்சி நடத்த இந்நாளில் சபதம் ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×