என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமண விழாவுக்கு வந்த தொழிலாளி மீது தாக்குதல்
    X

    திருமண விழாவுக்கு வந்த தொழிலாளி மீது தாக்குதல்

    • சத்யாவை சூர்யா,கேசவன் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
    • மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சத்யா புகார் செய்தார்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டம் கவரட்டி சக்தி நகரைச்சேர்ந்தவர் மாரசாமி. இவரது மகன் சத்யா (23). கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ரங்கராஜ் என்பவரது வீட்டு திருமணம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதனால் சத்யா தனது குடும்பத்தினருடன் திருமணத்திற்கு வந்துள்ளார். கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச்சேர்ந்தவர்கள் சூர்யா (20), கேசவன் (22). கூலித்தொழிலாளர்கள். இவர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.

    அப்போது அங்கு வந்த சத்யாவை சூர்யா,கேசவன் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட சத்யாவை அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சத்யாவை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சத்யா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×