என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் தேங்காய் வியாபாரிடம் ரூ.19.96 லட்சம் மோசடி
- காசோலையை வங்கியில் செலுத்தியபோது வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்து விட்டது.
- புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் அன்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
நாகர்கோவிலை சேர்ந்தவர் விஷால் கிருஷ்ணன் (24). இவர் ரத்தினபுரி போலீசில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் நாகர்கோவிலில் தேங்காய் மொத்த விற்பனை வியாபாரம் செய்து வருகிறேன். என்னிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த அன்வர் சதாத் (52) என்பவர் 17 ஆயிரம் கிலோ தேங்காய் வாங்கினார்.
இதற்கான முன்பணமாக ரூ.3 லட்சம் கொடுத்து உள்ளார். மீதம் உள்ள பணத்துக்கு 2 காசோலை கொடுத்தார். அதனை வங்கியில் செலுத்தியபோது வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்து விட்டது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அவர் ரூ.74 ஆயிரம் தந்து விட்டு, மீதி பணமான ரூ.19.96 லட்சத்தை திருப்பி தர மறுத்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் அன்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






