என் மலர்
கோயம்புத்தூர்
- போலீசுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதியதால் தாக்குதல்
- பீளமேடு போலீசார் சாமிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்
பீளமேடு,
கோவை காளப்பட்டி, நேரு நகரை சேர்ந்தவர் அஜய் (வயது36). இவர் கோவையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நீலம்பூரை சேர்ந்த சாமிநாதன் (52) என்பவர் மீது பீளமேடு போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதில் அஜய் சாட்சியாக உள்ளார். எனவே அவர் போலீசுக்கு ஆதரவாக செயல்படுவதாக சாமிநாதன் கருதி வந்தார்.இந்த நிலையில் அஜய் சம்பவத்தன்று டைட்டல் பார்க் அருகே காரை நிறுத்தி விட்டு சவாரிக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த சாமிநாதன் காருக்குள் இருந்த அஜயை வெளியே இழுத்து வந்து தகாத வார்த்தைகள் பேசி காலால் எட்டி உதைத்து தாக்கினார். இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்
- போலீசார் பிரஷேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
கோவை,
கோவையை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து டாக்டர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோதுஅவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
சிங்காநல்லூர் போலீசார் இந்த வழக்கை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரஷேஷ்(வயது19)என்பது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:
எனக்கும், மாணவிக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை அங்கு அழைத்துச் சென்றேன்.
அப்போது அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தேன். இதில் அவர் கர்ப்பமானார். இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட பிரஷேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்துறை முதன்மை செயலர் அமுதா வெளியிட்டார்
- கோவை சாலைகளில் ரூ.4.5 கோடி செலவில் போக்குவரத்து சந்திப்புகளில் சி.சி.டி.வி. கேமராக்கள்
கோவை,
கோவை மாநகராட்சி கலையரங்கில் உயிர் அமைப்பின் குட்டி காவலர்கள் சாலை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டுக்கான 3 லட்சம் மாணவர்கள் பயிற்சியேடு மற்றும் ஆசிரியர் கையேடு வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக உள்துறை முதன்மை செயலர் அமுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்ட கையேடுகளை வெளி யிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, துணை தலைவர் சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போக்குவரத்து இணை இயக்குநர் எஸ்.கே.எம்.சிவகுமரன், உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.ராஜசேகரன், அறங்கா வலர்கள் மலர்விழி, எஸ்.வி.பாலசுப்பிரமணியம், வி.மோகன், சந்திரசேகர், ரவிசாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் உயிர் அமைப்பு அறங்காவலர் பாலசுப்ரமணியம் பேசுகையில், கோவை மாநகர சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2018-ம் ஆண்டு உயிர் அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பு சார்பில் கோவை சாலைகளை பாதுகாப்பானதாக மாற்ற ரூ.4.5 கோடி செலவில் போக்குவரத்து சந்திப்புகளில் ஏராளமான சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது என கூறினார். பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்ட தற்காக உயிர் அமைப்பின் அறங்காவலர்களை அமுதா பாராட்டினார்.
முடிவில் உயிர் அமைப்பின் அறங்காவலர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் தலைவர் எஸ். மலர்விழி நன்றி கூறினார்.
- வாகனம் நிறுத்தும் இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரின் உதவியை கேட்டுப்பெற வேண்டும்
- அரசு நிர்ணயித்த தைவிட கூடுதல் கட்டணத்தை பார்வையாளரிடம் வசூலிக்கக்கூடாது
கோவை,
நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகிற 19-ந் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு கோவை கலெக்டர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்துக்கு வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஒருநாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் வெளியிட அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணிவரை காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் தமிழ்நாடு சினிமா ஒழுங்கு முறை விதிகளின்படி புதிய திரைப்படங்களை வெளியிடும்போது சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் முறையான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்
.
மேலும் தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் திரையிடும்போது சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்டநெரிசலை சரியாக கையாள வேண்டும். வாகனம் நிறுத்தும் இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரின் உதவியை கேட்டுப்பெற வேண்டும்.
பார்வையாளர்கள் சிரமமின்றி தியேட்டருக்கு வந்திருந்து வெளியேறும் வகையில் வசதிகள் அமைய வேண்டும். மேலும் தியேட்டரில் இருக்கைகள் மற்றும் சுற்றுப்புற வளாகம் தூய்மையாக இருக்க வேண்டும். தியேட்டர்களில் சுத்தம்-சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் போதிய கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சிகளை திரையிட வேண்டும். மேலும் அரசு நிர்ணயித்த தைவிட கூடுதல் கட்டணத்தை பார்வையாளரிடம் வசூலிக்கக்கூடாது. வாகன நிறுத்த கட்டணமும் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும்.
மேற்கண்ட விதிமுறைகளை திரையரங்குகள் மீறினால் இதுகுறித்து பொதுமக்கள் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல்
- கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடந்தது. மோட்டார் சைக்கிள்களை பறிகொடுத்தவர்கள் இது குறித்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னராஜ் (வயது 27), கருமத்தம்பட்டியை சேர்ந்த விஜய் (30), சோமனுரை சேர்ந்த விக்ரம் (22) என்பது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தபோது இடியுடன் கனமழை
- பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். சந்தராபுரத்தை சேர்ந்த வீரமுத்து என்பவரது மகள்டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். (வயது 20) செவிலியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று இவர் பணிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றார். அப்போது இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென நித்யாவை மின்னல் தாக்கியது.
இதில் அதிர்ச்சியடைந்த நித்யா மயங்கி கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பிரதமர் மோடி எந்தவித பின்னணியும் இல்லாமல் மகளிருக்காக இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார்.
- தமிழகத்தில் பா.ஜ.கவை வளர்ப்பது மட்டுமே எனது குறிக்கோளாக உள்ளது.
கோவை:
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் நாளை தனது நடைபயணத்தை தொடங்க உள்ளார்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவினாசியில் காலையிலும், மேட்டுப்பாளையத்தில் மாலையிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தில் மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக இன்று காலை அண்ணாமலை விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தி.மு.க சார்பில் நேற்று சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடத்தி உள்ளனர். அதில் மகளிர் உரிமை குறித்து பேசியுள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பு மகளிர் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து தி.மு.க.வினர் அங்கிருந்த போலீசாரை மிரட்டி உள்ளனர். இப்படி போலீசாரையே மிரட்டும் தி.மு.க.வினர் மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை.
பிரதமர் மோடி எந்தவித பின்னணியும் இல்லாமல் மகளிருக்காக இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியானது தனது கட்சியை வளர்ப்பதை விட தி.மு.க.வை வளர்ப்பதில் தான் அதிக குறிக்கோளாக வைத்து அதற்கு ஏற்பவே செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் தெரிவித்த கருத்தில் இருந்தே தமிழகத்தில் பா.ஜனதா எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியை கேள்வி கேட்பது எங்களின் கடமை. அதற்கேற்றவாறே நாங்கள் கேள்விகணைகளை தொடுத்து வருகிறோம்.
அதற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும். தொடர்ந்து நாங்கள் கேட்டு கொண்டே இருப்போம்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என கூறுகிறார்.
அப்படி என்றால் அவர் தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டியது தானே. அதை விடுத்து ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார். அதற்கு அவர் பதில் சொல்லட்டும்.
தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை தேசிய தலைவர்கள் தான் மேற்கொள்வார்கள். எனது ஒரே வேலை தமிழகத்தில் பா.ஜ.கவை வளர்ப்பது மட்டுமே எனது குறிக்கோளாக உள்ளது. அதனை நோக்கி நான் பயணித்து கொண்டிருக்கிறேன்.
இந்தியா கூட்டணி முழுவதும் ஒன்று சேர்ந்தாலும் வருகிற 5 மாநில தேர்தல்களில் பா.ஜனதாவை அவர்களால் வீழ்த்த முடியாது.
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பதற்கு கவர்னர் கையெழுத்து போட மாட்டார் என நம்பிக்கை இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பீக் அவர் மின் கட்டணத்தால் இங்குள்ள தொழிற்சாலைகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். தொழிற்சாலைகளை குழியில் போட்டு மூடும் வேலையை அரசு பார்த்து வருகிறது.
தமிழக சட்டசபையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசும்போது மைக் நிறுத்தப்பட்டுள்ளது. சபாநாயகர் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுற்றுலா முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி வந்த பிரசாத் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- கொள்ளை குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத்(வயது55).
இவர் கடந்த 4-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மத்தியபிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றார்.
அப்போது பிரசாத் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கேமிரா, வெள்ளி நாணயம், தங்க நாணயம், வைர கம்மல், மூக்குத்தி, வெள்ளி டம்ளர் உள்பட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்தனர்.
பின்னர் கொள்ளையர்கள் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று விஸ்கி, ஒயின் ஆகியவற்றை வாங்கி விட்டு மீண்டும் பிரசாத்தின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு வைத்து அவர்கள் மது குடித்தனர். மது குடிக்கும் போது சாப்பிடுவதற்காக வீட்டில் உள்ள பிரிட்ஜை திறந்து அதில் இருந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு மது குடித்தனர்.
பின்னர் போதையில் படுத்து தூங்கி விட்டு போதை தெளிந்ததும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் தப்பிச் சென்றனர்.
சுற்றுலா முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி வந்த பிரசாத் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டில் கொள்ளையர் பயன்படுத்திய மதுபாட்டில் கிடப்பதை கண்டார். இது குறித்து அவர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாலிபரின் செல்போனில் அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் பெண்களின் குளியல் வீடியோ காட்சிகள் இருந்தது.
- செல்போனில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் குளிக்கும் வீடியோ காட்கிகள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது.
வடவள்ளி:
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் 38 வயது பெண்.
இவர் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பெண் வீட்டில் உள்ள குளியல் அறை அருகே வாலிபர் ஒருவர் செல்போனுடன் நின்று கொண்டு இருந்தார். பெண்ணை பார்த்ததும் வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார்.
இதனை பார்த்த பெண் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். வாலிபர் மீது சந்தேகம் அடைந்த பெண் அவர் பயன்படுத்திய செல்போனை வாங்கி பார்த்தார். அதில் தான் குளிக்கும் வீடியோ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அந்த வாலிபரின் செல்போனில் அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் பெண்களின் குளியல் வீடியோ காட்சிகள் இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 21) என்பது தெரிய வந்தது. இவர் அந்த பகுதியில் குடியிருக்கும் பெண்கள் குளிக்க செல்லும் போது அதனை மறைந்து இருந்து வீடியோ எடுத்து ரசித்தது தெரிய வந்தது.
அவரது செல்போனில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் குளிக்கும் வீடியோ காட்கிகள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சந்தோஷை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- வீதிகளில் நீர் தேங்கும்போது கொசுக்கள் உற்பத்தி ஆகிறது
- டெங்கு, மலேரியா நோய் பரவும் அபாயம்- பொதுமக்கள் அச்சம்
குனியமுத்தூர்,
கோவை சிங்காநல்லூர் அருகே கோவை மாநகராட்சி 53-வது வார்டுக்குட்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை சுற்று வட்டார பகுதிகளில் ஜீவா வீதி, பெரியார் வீதி, நேதாஜி வீதி, காமராஜர் ரோடு, கம்பன் நகர், கல்லுக்குழி வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகள் உள்ளது.
இப்பகுதிகளில் ஏராள மான குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இப்பகுதிகளில் உள்ள சாக்கடை அடிக்கடி அடைப்பு ஏற்படு வதால் கழிவு நீர்கள் வீதியில் வழிந்தோடி கொண்டி ருக்கிறது. இதனால் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிய வண்ணம் உள்ளது. இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் இந்த கழிவு நீரில் மிதித்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ஒரு சிலர் கட்டிடக் கழிவு களையும், குப்பைகளையும் சாக்கடையில் போட்டு விடுகின்றனர். இன்னும் ஒரு சிலர் தங்களது வீடுகளில் உள்ள கழிவு நீரை சாக்கடை பக்கம் திருப்பி விட்டு விடுகின்றனர். இதனால் சாக்கடையில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. ஒரு அளவுக்கு மேல் நீர் தேங்கும் போது அது, நிரம்பி வீதிகளில் ஓடும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. வீதிகளில் நீர் தேங்கும் போது கொசுக்கள் உற்பத்தி ஆகிறது.
இதனால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களும் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அன்றாடம் வந்து மேற்பார்வை யிட்டு,இதனை சரி செய்தால் நன்றாக இருக்கும். நோய் பரவும் அபாயத்திலிருந்து பொது மக்கள் தப்பிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வலிப்பு நோய்க்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது உண்மை வெளியானது
- டாக்டர்கள்-பெற்றோர் அதிர்ச்சி
கோவை,
கோவை நீலிகோணாம்பாளையம் அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
ஆனால் மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து டாக்டர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது இதனையடுத்து சிங்காநல்லூர் போலீசார் இந்த வழக்கை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.
கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது போலீசார் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவையில் தற்போது 6 அரசு, 7 அரசு உதவிபெறும், 58 சுயநிதி கலைஅறிவியல் கல்லூரிகள் உள்ளன
- வடவள்ளியில் புதிதாக பெண்கள் கலைஅறிவியல் கல்லூரி அவசியல்லையென பொன்முடி தகவல்
கோவை,
தமிழக சட்டசபையில் கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் பேசும் போது, கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளியில் புதிய பெண்கள் கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். இதற்கு அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்து உள்ள பதில் வருமாறு:-கோவை மாநகராட்சி பகுதியில் அமைந்து உள்ள வட வள்ளிக்கு உட்பட்ட கோவை மாவட்டத்தில் தற்போது 6 அரசு கலைஅறிவியல் கல்லூரி களும், 7 அரசு உதவிபெறும் கலைஅறிவியல் கல்லூரிகளும், 58 சுயநிதி கலைஅறிவியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர ஒரு அரசு பொறியியல் கல்லூரி, 2 அரசு உதவிபெறும் கல்லூரிகளும், 62 சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், ஒரு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும், 3 அரசு தொழில்நுட்ப கல்லூரிகளும், 6 அரசு உதவிபெறும் தொழில்நுட்ப கல்லூரிகளும், 21 சுயநிதி தொழில்நுட்ப கல்லூரி களும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் இந்த தொகுதி மாணவ-மாணவிகளின் உயர்கல்வி க்கான தேவைகளை நிறைவு செய்வதால் வடவள்ளியில் புதிதாக ஒரு பெண்கள் கலைஅறிவியல் கல்லூரி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.






