search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்காநல்லூர் அருகே தெருக்களில் வழிந்தோடும் சாக்கடை நீர்
    X

    சிங்காநல்லூர் அருகே தெருக்களில் வழிந்தோடும் சாக்கடை நீர்

    • வீதிகளில் நீர் தேங்கும்போது கொசுக்கள் உற்பத்தி ஆகிறது
    • டெங்கு, மலேரியா நோய் பரவும் அபாயம்- பொதுமக்கள் அச்சம்

    குனியமுத்தூர்,

    கோவை சிங்காநல்லூர் அருகே கோவை மாநகராட்சி 53-வது வார்டுக்குட்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை சுற்று வட்டார பகுதிகளில் ஜீவா வீதி, பெரியார் வீதி, நேதாஜி வீதி, காமராஜர் ரோடு, கம்பன் நகர், கல்லுக்குழி வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகள் உள்ளது.

    இப்பகுதிகளில் ஏராள மான குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இப்பகுதிகளில் உள்ள சாக்கடை அடிக்கடி அடைப்பு ஏற்படு வதால் கழிவு நீர்கள் வீதியில் வழிந்தோடி கொண்டி ருக்கிறது. இதனால் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிய வண்ணம் உள்ளது. இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் இந்த கழிவு நீரில் மிதித்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    ஒரு சிலர் கட்டிடக் கழிவு களையும், குப்பைகளையும் சாக்கடையில் போட்டு விடுகின்றனர். இன்னும் ஒரு சிலர் தங்களது வீடுகளில் உள்ள கழிவு நீரை சாக்கடை பக்கம் திருப்பி விட்டு விடுகின்றனர். இதனால் சாக்கடையில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. ஒரு அளவுக்கு மேல் நீர் தேங்கும் போது அது, நிரம்பி வீதிகளில் ஓடும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. வீதிகளில் நீர் தேங்கும் போது கொசுக்கள் உற்பத்தி ஆகிறது.

    இதனால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களும் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அன்றாடம் வந்து மேற்பார்வை யிட்டு,இதனை சரி செய்தால் நன்றாக இருக்கும். நோய் பரவும் அபாயத்திலிருந்து பொது மக்கள் தப்பிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×