என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லியோ படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு கட்டுப்பாடுகள்- கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    லியோ படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு கட்டுப்பாடுகள்- கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

    • வாகனம் நிறுத்தும் இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரின் உதவியை கேட்டுப்பெற வேண்டும்
    • அரசு நிர்ணயித்த தைவிட கூடுதல் கட்டணத்தை பார்வையாளரிடம் வசூலிக்கக்கூடாது

    கோவை,

    நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகிற 19-ந் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு கோவை கலெக்டர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்துக்கு வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஒருநாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் வெளியிட அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணிவரை காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம்.

    அதே நேரத்தில் தமிழ்நாடு சினிமா ஒழுங்கு முறை விதிகளின்படி புதிய திரைப்படங்களை வெளியிடும்போது சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் முறையான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்

    .

    மேலும் தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் திரையிடும்போது சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்டநெரிசலை சரியாக கையாள வேண்டும். வாகனம் நிறுத்தும் இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரின் உதவியை கேட்டுப்பெற வேண்டும்.

    பார்வையாளர்கள் சிரமமின்றி தியேட்டருக்கு வந்திருந்து வெளியேறும் வகையில் வசதிகள் அமைய வேண்டும். மேலும் தியேட்டரில் இருக்கைகள் மற்றும் சுற்றுப்புற வளாகம் தூய்மையாக இருக்க வேண்டும். தியேட்டர்களில் சுத்தம்-சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் போதிய கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சிகளை திரையிட வேண்டும். மேலும் அரசு நிர்ணயித்த தைவிட கூடுதல் கட்டணத்தை பார்வையாளரிடம் வசூலிக்கக்கூடாது. வாகன நிறுத்த கட்டணமும் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும்.

    மேற்கண்ட விதிமுறைகளை திரையரங்குகள் மீறினால் இதுகுறித்து பொதுமக்கள் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×