என் மலர்
கோயம்புத்தூர்
- ஹரியை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் டெலிகிராம் மூலமாக அதிக அளவில் பணம் பெறலாம் என்று கூறியுள்ளார்.
- சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை,
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி பிரகாஷ் (30). இவர் பட்டப்படிப்பு முடித்து தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.டெலிகிராம் மூலமாக ஹரியை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் டெலிகிராம் மூலமாக அதிக அளவில் பணம் பெறலாம் என்று கூறியுள்ளார்.
முதலில் தயங்கிய ஹரி, மீண்டும் வற்புறுத்தவே ரூ.5,49,720 பணத்தை கட்டியுள்ளார். பணம் கட்டியது குறித்து தொடர்ந்து கேட்டதால் டெலிகிராமில் மேலும் ரூ.12 லட்சம் கட்டினால் மட்டுமே உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
பணம் கட்டவில்லை என்றால் முதலில் கட்டிய பணமும் திருப்பி கிடைக்காது என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி பிரகாஷ் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.புகாரை பெற்றுக் கொண்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1200-க்கு விற்பனை
- பூக்கள் விலை உயர்ந்தாலும் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
கோவை,
கோவை பூ மார்க்கெ ட்டுக்கு கோபிச்செட்டி பாளையம், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருநது தினமும் 40 டன்னுக்கு மேல் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக பூக்கள் விலை குறைந்து இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் பூக்கள் விலை உயரத் தொடங்கி உள்ளது.
மல்லிகைப்பூ நேற்று ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனையானது. இன்று கிலோ ரூ.400 உயர்ந்து ரூ.1200-க்கு விற்கப்பட்டது.
இதேபோல மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. பூக்களின் விலை (ஒரு கிலோ) விவரம் வருமாறு:-
செவ்வந்தி - ரூ.100, செண்டுமல்லி - ரூ.80, ரோஜா - ரூ.100, அரளி - ரூ.160, வாடாமல்லி - ரூ.120, வெள்ளை செவ்வ ந்தி - ரூ.240, மரிக்கொழுந்து - ரூ.30, துளசி - ரூ.30, கோழிக்கொண்டை - ரூ.80, கலர் செவ்வந்தி- ரூ.100, சம்பங்கி - ரூ.80,
தாமரைப்பூ ஒன்று ரூ.40க்கும், அருகம்புல் ஒரு கட்டு ரூ.20-க்கும், வாழைக்கன்று ஜோடி - ரூ.20-க்கும், எலுமிச்சை ஒரு கிலோ ரூ.100, தேங்காய் ஒரு கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை உயர்ந்தாலும் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
- சில இடங்களில் காட்டாற்று வெள்ளத்தால் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.
- மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே 16-ந் தேதி வரை ரெயில்சேவை ரத்து
மேட்டுப்பாளையம்,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
குறிப்பாக ஊட்டி மலை ரெயில் செல்லும் தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மூடியது. சில இடங்களில் காட்டாற்று வெள்ளத்தால் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மலை ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து சேதம் அடைந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக சீரமைப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே வருகிற 16-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
கடந்த 3-ந் தேதி இரவு பெய்த மழைக்கு மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் 7-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பராமரிப்பு பணி முடிந்து கடந்த 8-ந் தேதி மீண்டும் ரெயில் இயக்கப்பட்டது.
இந்தநிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குன்னூர் மலை ரெயில் பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் ஜல்லிக்கற்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதனால் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை வருகிற 16-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்ற தகவலை தொடர்ந்து ஊட்டி- குன்னூர் இடையேயும் 13-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சிங்காநல்லூர், சூலூர் பஸ் நிலையங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
- பஸ்,ரெயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
கோவை,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி திங்கள்கிழமை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் கோவையில் இருந்து நேற்று மாலை முதல் பஸ்கள், ரெயில்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.
இதனால் பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிக ளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை, தேனி, மார்க்கமாக செல்லும் பஸ்கள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்தும். கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் சூலூர் பஸ் நிலையத்தில் இருந்தும். ஈரோடு, சேலம், நாமக்கல் மார்க்கமாக செல்லும் பஸ்கள் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும். ஊட்டி, கூடலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்த தற்காலிக பஸ் நிலையங்க ளுக்கு காந்திபுரம், உக்க டத்தில் இருந்து இணைப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை முதல் மதுரைக்கு 100 பஸ்களும், திருச்சிக்கு 80, தேனிக்கு 50, சேலத்துக்கு 60 என மொத்தம் 290 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
நேற்று மாலை முதல் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் பஸ்களின் இயக்கம் குறித்து பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்புகள் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் ரோந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு பஸ்கள், ரெயில்கள், கார்கள் மற்றும் விமானம் மூலமாக 4 லட்சம் பேர் வரை சென்றது தெரிய வந்துள்ளது. இது அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், சூலூர் பஸ் நிலையங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
இன்று பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னும் கூடுதலாக பஸ்கள் இயக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ரெயில்கள் இன்று முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன.
- கோவை- திண்டுக்கல் சிறப்பு ரெயில் (06077)கோவையில் இருந்து இன்று காலை 9.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.13 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.
கோவை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்டத்தை கருத்தில் கொண்டு கோவை- திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த ரெயில்கள் இன்று முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன. கோவை- திண்டுக்கல் சிறப்பு ரெயில் (06077)கோவையில் இருந்து இன்று காலை 9.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.13 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும். அங்கிருந்து 10.15 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு உடுமலைப் பேட்டை சென்றடையும். அங்கிருந்து 11.01 மணிக்கு புறப்பட்டு 11.38 மணிக்கு பழனியை சென்றடையும். அங்கிருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு மதியம் ஒரு மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.
திண்டுக்கல்- கோவை சிறப்பு ரெயில் (06078) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு 2.55 மணிக்கு பழனியை சென்றடையும்.
அங்கிருந்து 3 மணிக்கு புறப்பட்டு 3.33 மணிக்கு உடுமலைப்பேட்டையை சென்றடையும்.
அங்கிருந்து 3.34 மணிக்கு புறப்பட்டு 4.18 மணிக்கு பொள்ளாச்சியை சென்றடையும். அங்கிருந்து 4.20 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு கோவைக்கு வந்து சேரும்.
- திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால், கடைவீதிகளில் 3 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.
கோவை,
நாடு முழுவதும் நாளை (12-ந் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இறுதிக்கட்டமாக இன்று புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.
கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே கோவையில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்றும் ஏராளமான பொதுமக்கள் கடைவீதி களில் திரண்டு புத்தாடைகளை வாங்கினர். காலை முதலே கடைகளில் மக்கள் குவியத் தொடங்கினர்.
இதனால் ஜவுளிக்கடை கள், இனிப்பு, பட்டாசு, நகைக்கடைகள் முன் கூட்டியே திறக்கப்பட்டு விற்பனையை தொடங்கின. ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட அனைத்து கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அங்கு அவர்கள் ஆடைகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டு, தங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
இதனால் கடைவீதிகளில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமாகவே காட்சியளித்தது. மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால், கடைவீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக ஒப்பணக்கார வீதி, ராஜவீதி சந்திப்பு, டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரத்தில் நின்று கொண்டு பொதுமக்களிடம் தங்கள் உடமைகளை பத்திரமாக வைத்து கொள்ள அறிவுறுத்துவதுடன், கவனமாக இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் போலீசார் சாதாரண உடை அணிந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்கும் என்பதால் அனைத்து கடை வீதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிரா மூலம் கடைவீதிகள் கண்காணிக்கப்படுகின்றன.
இதுதவிர கடைவீதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். கோவையில் தீபாவளி பண்டிகையொ ட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கடைவீதிகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடைவீதிகளில் ஜவுளி எடுக்க மக்கள் குவிந்துள்ளதால், மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.
போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.
- இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றன.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி, சோமனூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் மேலும் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இப்பகுதி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற இந்த சாலையோரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பவர் ஹவுஸ் பகுதியில் தரைமட்டபாலம் கட்டப்பட்டது. கடந்த சில தினங்களாக சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
இப்பகுதியில் கடந்த ஒரு சில வருடத்திற்கு முன்பு வரை தொடர்ந்து மழைநீர் சாலையில் தேங்கி நின்று சாலை பழுதைடந்து அவ்வ ப்போது விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து தொடர்ந்து இப்பகு தியில் தரைமட்ட பாலம் கட்ட கோரிக்கை விடுத்து வந்தோம். இதனையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மழைநீர் செல்ல தரைமட்ட பாலம் கட்டப்பட்டது.
ஆனால் தரைமட்ட பாலம் கட்டப்பட்டு எவ்வித பயனும் இல்லை. கிருஷ்ணா புரம், பவர் ஹவுஸ், சோமனூர் போன்ற பகுதிகளில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. செந்தில் நகர் பகுதியில் இருந்து வரும் மழைநீர் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை யில் தேங்கி நின்றதால் அப்பகுதியில் இருந்த தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்தது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் செல்ல ஏதுவாக வடிகால் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கோவை,
கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே கரிச்சிபாளையத்தில் அட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளி ரவு கோவிலில் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் கள் ரூ.8 ஆயிரம் பணத்துடன் இருந்த உண்டியலை திருடி தப்பிச் சென்றனர்.
பின்னர் கொள்ளையர்கள் இந்த கோவிலில் அருகே உள்ள வீரமாஸ்தி அம்மன் கோவிலில் ரூ.2 ஆயிரம் பணத்துடன் இருந்த உண்டியலையும் திருடினர். இதனை தொடர்ந்து கொள்ளையர்கள் செந்தில் ஆண்டவர் கோவிலில் உண்டியல் மற்றும் அரிவாள் ஆகியவற்றையும் திருடி சென்றனர்.
மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளையர் உண்டியலை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்பு 2021-ம் ஆண்டு அமித் சவுத்ரி 5 நிமிடம் 28.28 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
- பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.
கோவை:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 38-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது.
16 வயதுக்குட்பட்ட 2 ஆயிரம் மீட்டர் ஆட்டத்தில் அரியானா வீரர் நிஷாந்த் 5 நிமிடம் 27.02 வினாடியில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு அமித் சவுத்ரி 5 நிமிடம் 28.28 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக வீரர்கள் மொத்தம் 170 புள்ளிகளை குவித்தனர். பெண்கள் பிரிவில் அரியானா 244 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அரியானா கைப்பற்றியது. அந்த அணி 411 புள்ளிகளை பெற்றது. தமிழ்நாடு 362 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், உத்தர பிரதேசம் 238 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.
- ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவனை ஆசிரியர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- மாணவனின் தற்கொலை முயற்சி குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை நீலாம்பூர் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்ததும் நண்பர்களுடன் வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்.
அப்போது மாணவன் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் ஜடையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி ஆசிரியையிடம் கூறினார். ஆசிரியை மாணவனை அழைத்து கண்டித்தார். பின்னர் இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் பயந்த மாணவன் பள்ளியில் உள்ள 2-வது மாடிக்கு சென்றார். அங்கு இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவனை ஆசிரியர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு மாணவனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் இந்த ரோட்டில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
- இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து வர வேண்டும்.
குனியமுத்தூர்,
கோவையில் எல்.அண்ட். டி பைபாஸ் ரோடானது அவினாசி ரோட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் முக்கிய ரோடாக உள்ளது. சேலம்-கொச்சின் பைபாஸ் ரோட்டில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன.
நள்ளிரவில் கேரளாவுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் லாரிகளும், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு சரக்குகளை ஏற்றி கொண்டு வரும் லாரிகளும் எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் வரிசையாக வந்து கொண்டிருக்கும். போத்தனூர், சுந்தராபுரம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் மக்களும் இருசக்கர வாகனத்தில் இந்த சாலை வழியாக தங்களது வீடுகளுக்கு செல்வது வழக்கம்.
இந்தநிலையில் சமீபகாலமாக நள்ளிரவில் பட்டாகத்தியுடன் சில மர்ம ஆசாமிகள் இந்தபகுதியில் வலம் வருகின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் தனியாக இருசக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளை வழி மறித்து, அவர்களை மிரட்டி ,தாக்கி வாகனத்தை மற்றும் உடைமைகளையும் பறித்து செல்கின்றனர்.
இதன் காரணமாக பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் இந்த ரோட்டில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எல்.அண்ட்.டி பைபாஸ் ரோட்டில் வலது புறமும், இடது புறமும் ஏராளமான குறுக்குச் சாலைகள் உள்ளது.
இதனை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் தூரத்தில் இருசக்கர வாகனம் வருவதை பார்த்து, திடீரென வழிமறிக்கின்றனர். அப்போது வாகன ஓட்டிகளுக்கு தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மர்ம ஆசாமிகள் மிரட்டி தாக்கி உடைமைகளை பறித்து செல்கின்றனர்.
கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் இந்த பகுதி வழியாக போத்தனூர் அண்ணாபுரத்தைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி டிரைவர் அப்துல் முஜீப் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பட்டா கத்தியுடன் வழி மறித்த 3 பேர் அப்துல் முஜீப்பை தாக்கி அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் அந்த வாலிபர் இது குறித்து செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். தினசரி தொடரும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
எல்.அண்ட். டி பைபாஸ் சாலையானது ஆள் நடமாட்டம் இல்லாத சாலையாகும். நான்கு சக்கர வாகனங்களும், கனரக வாகனங்களும் ஒரே நேர்கோட்டில் எதையும் பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருக்கும். சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவரை மடக்கி, யாராவது மிரட்டி பேசிக்கொண்டிருந்தால் கூட அதை கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டுதான் இருப்பார்கள்.
ஆனால் போலீசார் ரோந்து வந்தால் மட்டுமே தான், தேவையில்லாமல் நின்று கொண்டிருப்பவர்கள் யார்? என்று விசாரிப்பார்கள். எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து வர வேண்டும். இது போன்ற நபர்களை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே எல்.அண்ட்.டி பைபாஸ் ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் நிம்மதியாக பயணிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சிறுமியின் தந்தையிடம் உன் மகளை நான் தான் கட்டுவேன் என மிரட்டல்.
- மாணவியின் தந்தை பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமியை அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றார்.
மோட்டார் சைக்கிள் கோட்டூர் ரோட்டில் சென்ற போது ஜோதி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல் (வயது 19) என்பவர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். அவர் சிறுமியின் தந்தையிடம் உன் மகளை நான் தான் கட்டுவேன்.
உன்னால் என்ன பண்ண முடியுமோ அதை நீ பண்ணு என கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மாணவியின் தந்தை பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிறுமியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த சக்திவேல் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






