என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை வாலிபரை ஏமாற்றிய ஆன்லைன் மோசடி கும்பல்
- ஹரியை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் டெலிகிராம் மூலமாக அதிக அளவில் பணம் பெறலாம் என்று கூறியுள்ளார்.
- சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை,
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி பிரகாஷ் (30). இவர் பட்டப்படிப்பு முடித்து தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.டெலிகிராம் மூலமாக ஹரியை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் டெலிகிராம் மூலமாக அதிக அளவில் பணம் பெறலாம் என்று கூறியுள்ளார்.
முதலில் தயங்கிய ஹரி, மீண்டும் வற்புறுத்தவே ரூ.5,49,720 பணத்தை கட்டியுள்ளார். பணம் கட்டியது குறித்து தொடர்ந்து கேட்டதால் டெலிகிராமில் மேலும் ரூ.12 லட்சம் கட்டினால் மட்டுமே உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
பணம் கட்டவில்லை என்றால் முதலில் கட்டிய பணமும் திருப்பி கிடைக்காது என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி பிரகாஷ் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.புகாரை பெற்றுக் கொண்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






