என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ஆனைமலையில் உள்ள தென்னை மட்டை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.
    • ஆனைமலை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சோனுவை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பாலக்காடு ரெயில்வே தண்டவாளத்தில் மீனாட்சிபுரம் அருகே தலை, உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிணம் கிடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ரத்தக்கறைகள் தென்பட்டன. இதனால் பிணமாக கிடந்தவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதனால் ரெயில்வே போலீசார் ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனைமலை போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சத்யேந்திரகோல் (வயது 33) என்பது தெரியவந்தது. ஆனைமலையில் உள்ள தென்னை மட்டை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    கடைசியாக சத்யேந்தி ரகோலுடன் வெளியே சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரித்தபோது அவருடன் பணியாற்றிய சோனு என்ற ஷில்பா (33) என்ற வாலிபர் சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது சத்யேந்திரகோலை அடித்துக் கொலை செய்ததை சோனு ஒப்புக் கொண்டார்.

    சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மீனாட்சிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி உள்ளனர். பின்னர் மீனாட்சிபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகே மது குடித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சோனுவின் மனைவியிடம் சத்யேந்திரகோலின், தம்பி முறையுள்ளவர் தவறாக நடக்க முயன்று உள்ளார். இதுபற்றி பேசியபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சோனு, மது போதையில் இருந்த சத்யேந்திர கோலை ரெயில்வே தண்டவாளம் அருகே கீழே தள்ளினார். பின்னர் அங்கு கிடந்த கல்லை எடுத்து தலையில் தாக்கினார். இதில் படு காயம் அடைந்து நிலைகுலைந்த சந்யேந்திர கோல் தண்டவாளத்தில் மயங்கி விழுந்தார்.

    போதையில் இருந்த சோனு அவரை அப்படியே விட்டு அங்கிருந்து சென்றார். தண்ட வாளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த சத்யேந்திரகோல் மீது அதிகாலையில் அந்த வழியாக சென்ற ரெயில் மோதியதில் அவரது தலை துண்டானது தெரிய வந்தது.

    இதையடுத்து ஆனை மலை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சோனுவை கைது செய்தனர். தற்போது அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஆம்புலன்சு ஊழியர்கள் மம்தாவை பரிசோதனை செய்த போது குழந்தையின் தலை வெளியே வந்தது தெரிய வந்தது.
    • ஆம்புலன்சில் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    கோவை,

    கோவை நல்லாம்பாளையம் ரோடு, ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிமுருகன். இவரது மனைவி மம்தா (வயது 29). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இவருக்கு நேற்று இரவு வீட்டில் இருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் மம்தா வலியால் துடித்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பிரசவத்துக்கு அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்சு ஊழியர்கள் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் ஆம்புலன்சு ஊழியர்கள் மம்தாவை பரிசோதனை செய்த போது அவர்களுக்கு வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து ஆம்புலன்சு மருத்துவ நிபுணர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பைலட் ஜெயக்குமார் உதவியுடன் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்தனர்.

    அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து ஆம்புலன்சு ஊழியர்கள் மம்தாவையும், அவரது குழந்தையையும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாய், சேயை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

    அவசரம் கருதி ஆம்புலன்சில் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • வேறு வாலிபருடன் பழகியதால் ஆத்திரம்
    • இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி செல்போன் மூலமாக இளம்பெண் அவருடன் பேசி வந்தார். இது இளம்பெண்ணின் கணவருக்கு மனைவி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியுடன் பேசும் வாலிபருக்கு தொடர்பு கொண்டு நீ எப்படி எனது மனைவியிடம் பேசலாம் என கேட்டார். அதற்கு அந்த வாலிபர் உன் மனைவியிடமே இதனை கேள் என கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனையடுத்து இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் கணவர் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து தனது மனைவியின் கழுத்தில் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம் பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • பூவன் ரக வாழை மரங்களை மிதித்து நாசமாக்கியது.
    • ரேஷன் பொருட்களை காலால் உதைத்தும் சேதப்படுத்தியது.

    பேரூர்:

    பேரூர் அருகே தீத்திபாளையம், பச்சாபாளையம், குப்பனூர், கரடிமடை ஆகிய மலையடிவார கிராமங்கள் உள்ளன.

    கடந்த சில நாட்களாக வனப்பகுதியிலிருந்து, காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் ஊடுருவுவது அதிகரித்து வருகிறது.

    இன்று அதிகாலை, வனத்திலிருந்து வெளியேறிய, காட்டு யானைகள் குருநாதன் என்பவர் 4 ஏக்கரில் பயிர் செய்திருந்த வாழைத் தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு பயிரிட்டு இருந்த 300-க்கும் மேற்பட்ட பூவன் ரக வாழை மரங்களை மிதித்து நாசமாக்கியது.

    இதேபோல் இன்று அதிகாலை தீத்திபாளையம் ரேஷன் கடைக்கு சென்று, அங்கிருந்த ஷட்டரை உடைத்து உள்ளிருந்த அரிசி, பருப்பு, கோதுமை மூட்டைகளை வெளியே எடுத்து போட்டு ருசி பார்த்தது. தொடர்ந்து ரேஷன் பொருட்களை காலால் உதைத்தும் சேதப்படுத்தியது.

    மேலும் பெருமாள்சாமி தோட்டத்தின் வழியே ரேஷன் கடைக்கு வரும் போது, தோட்டத்தில் இருந்த தக்காளி பயிர்களை மிதித்து சேதப்படுத்தியதோடு கேட்வால்வு பைப் குழாய்களை மிதித்து சேதமாக்கியது.

    இதுகுறித்து, மாவட்ட விவசாய சங்க துணை தலைவர் கொங்கு பெரியசாமி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பெயரில் மதுக்கரை வனச்சரக அலுவலர் சந்தியா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

    கடந்த ஒரு வாரமாக, பச்சாபாளையம், தீத்திபாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால், இப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே, இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், வனத்துறையினர் ரோந்து சுற்றிவர வேண்டும்  எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மற்றொரு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரம்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வர் 26 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் தனது கணவரை பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வரு கிறார். இளம்பெண்ணுக்கு கேரள மாநிலம் கோழிக்கோ ட்டை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இளம்பெண் அவரது மகளுடன் வாடகை வீட்டில் கள்ளக்காதலனுடன் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலன் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலன் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் இரவு முழுவதும் ஜாலியாக இருந்தார்.

    மறுநாள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய காதலனுக்கு அக்கம் பக்கத்தினர் மூலம் இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர் இளம்பெண்ணை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காதலன், இளம்பெண் கழுத்தில் அணிந்து இருந்த தாலி கயிற்றால் இறுக்கி அவரை கொலை செய்ய முயன்றார். அப்போது அவரிடம் இருந்து தப்பிய இளம்பெண் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • படு காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    நாடு முழுவதும் தீபா வளி பண்டிகை நேற்று உற்சா கமாக கொண்டா டப்பட்டது. தீபாவளி பண்டிகையை யொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    அதனையும் மீறி பாதுகாப்பின்றி பட்டாசு வெடித்து பலர் காயம் அடைந்துள்ளனர். கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகன் ஆதர்ஸ் வித்யாதரன் (வயது 12). 6-ம் வகுப்பு மாணவர்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி இவர் தனது வீட்டு முன்பு பட்டாசு வெடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் ஒரு பட்டாசை பற்ற வைத்தார். அது வெடி க்கவில்லை. இதனையடுத்து ஆதர்ஸ் வித்யாதரன் அருகே சென்று பார்த்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசு வெடித்தது.

    இதில் சிறுவனின் வலது கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவை துண்டானது. இதில் படு காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறா ர்கள். இது குறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • இது குறித்து பேரூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் செங்கணம்பள்ளி ஆதிநாராயணன். இவர் பேரூர் அருகே உள்ள கோவை- சிறுவாணி ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது செங்கணம்பள்ளி ருசிக் (வயது 2).

    சம்பவத்தன்று சிறுவன் வீட்டு முன்பு சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக சென்ற சித்ரைசாவடி வாய்க்கால் அருகே சிறுவன் சென்றுள்ளான். வாய்க்கா லில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தண்ணீர் சென்று கொண்டு இருந்தது. அப்போது சிறுவன் சைக்கிளுடன் வா ய்க்காலில் தவறி விழுந்தான்.

    குழந்தையை நீண்ட நேரமாக காணாததால் அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது சைக்கிள் வாய்க்காலில் மிதந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அருகில் சென்று பார்த்த போது செங்கணம்பள்ளி ருசிக் நீரில் மூழ்கி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் தங்களது குழந்தையை மீட்டு அந்த பகுதியில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோ தனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பேரூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தினசரி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்வார்கள்.
    • அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள் ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன.

    இங்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தினசரி 100 முதல் 1200 டன் குப்பை தேங்கும். இதனை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தினசரி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்வார்கள்.

    தூய்மைப் பணியாளர்கள் வீடு, வீடாக சேகரிக்கும் குப்பைகளையும், பொது இடங்களில் சேகரிக்கும் குப்பைகளை குறிப்பிட்ட இடங்களில் குவித்து வைத்து பின்னர் அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாகனங்கள் மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று கொட்டும் பணியை மேற்கொள்வார்கள்.

    நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் கடந்த 2 நாளாக கோவை மாநகரில் 100 வார்டுகளிலும் வழக்கத்தைவிட குப்பை 250 டன் கூடுதலாக சேர்ந்தது. தீபாவளி நாளில் மட்டும் மொத்தம் 1,350 டன் குப்பை சேர்ந்தது. இந்தக் குப்பைகளை இன்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தூய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு ஓய்வில்லாமல் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது சில தூய்மை பணியாளர்கள் விடுமுறையில் இருப்பதால் ஒரு சில இடங்களில் குப்பைகள் அகற்றும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாளை பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்து விடுவார்கள் என்பதால் நாளை அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள் ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புறநகரில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 3 பேர் என மாவட்டம் முழுவதும் 69 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில் குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தடையை மீறி பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

    கோவை,

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் பட்டாசு வெடிப்பது வழக்கம். பட்டாசு அளவுக்கு அதிகமாக வெடிப்பதனால் காற்றுமாசு ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள் மற்றும் மூச்சு திணறல் பாதிப்பு உள்ளவர்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு வெடி க்கப்படும் பட்டாசுகளினால் காற்று மாசு ஏற்படாமல் தடுக்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பொதுமக்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது.மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில் குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தடையை மீறி பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மாநகரில் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை தவிர்த்து எங்காவது பட்டாசு வெடிக்கப்படு கிறதா? என போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்தனர்.

    அப்போது அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து தடை செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்ததாக ஆர்.எஸ்.புரத்தில் 6 பேர் மீதும், வடவள்ளியில் 6 பேர் மீதும், சிங்காநல்லூரில் 7 பேர் மீதும், செல்வபுரத்தில் 5 பேர் மீதும், துடியலூர், உக்கடம், சாய்பாபா காலனியில் தலா 4 பேர் மீதும், குனியமுத்தூர், சுந்தராபுரம், பெரியக்கடை வீதியில் தலா 3 பேர் மீதும், வெரைட்டிஹால் ரோடு, ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், போத்தனூர், சரவணம்பட்டியில் தலா 2 பேர் மீது என மாநகரில் மொத்தம் 66 பேர் மீது 66 வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. புறநகரில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 3 பேர் என மாவட்டம் முழுவதும் 69 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    • விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    புதுக்கோட்டை மாவட்ட ம் விராலிமலையை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 23). இவர்களு க்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ள னர். இவர்கள் குடும்பத்துடன் தற்போது கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடி யில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அவர்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில் வடிவேல் தனது மனைவியிடம் ஊருக்கு செல்லலாம் என கூறி இருந்தார். ஆனால் அவர் இந்த வருடம் ஊருக்கு அழைத்து செல்ல வில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று வெளியே சென்ற வடிவேல் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் போதையில் படுத்து தூங்கினார். அப்போது உமா மகேஸ்வரி தனது தாயிடம் செல்போனில் சத்தமாக பேசிக்கொண்டு இருந்தார். இதில் வடிவேலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஏன் கத்துகிறாய் என கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு உமா மகேஸ்வரி தினமும் தான் குடித்து விட்டு வருகிறாய். இன்று தீபாவளி பண்டிகை, இன்றுமா குடித்து விட்டு வருவாய். உன்னுடன் வாழ்வதற்கு நான் என் அம்மா வீட்டிற்கே சென்று விடுவேன் என கூறினார்.

    பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வடிவேல் தனது மனைவியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணமான 5 வருடத்தில் உமாமகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    • பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
    • மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    கோவை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மக்கள் கூடும் கடை வீதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்துக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்றுமுன்தினம் இரவில் ஒரு மிரட்டல் இ-மெயில் சென்றது. அதில் கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. மத்திய அரசுக்கு எதிராகவும், கண்டன வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. கோவை உள்பட மேலும் சில மாவட்டங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு மிரட்டல் அனுப்பப்பட்டு இருந்தது.

    இந்த தகவல் கோவை மாநகர போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். இரவு விடிய, விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சந்தேக நபர்கள் யாரும் சிக்கவில்லை.

    இதற்கிடையே மிரட்டல் மெயில் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இறங்கினர். அந்த இ-மெயில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக அவரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர் தனக்கும், மிரட்டலுக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார்.


    இசக்கியின் இ-மெயில் ஐ.டி.யை மர்ம நபர்கள் அவருக்கு தெரியாமல் பயன்படுத்தி மிரட்டல் விடுத்து இருந்தது தெரியவந்தது. அவ்வாறு மிரட்டல் விடுத்த நபர் யார், எதற்காக இவ்வாறு மிரட்டல் விடுத்தனர் என்பது பற்றி விசாரித்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கோவையில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என வந்த இ-மெயில் வெறும் வதந்தி. பண்டிகை காலங்களில் பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கில் யாராவது இப்படி மிரட்டல் இ-மெயிலை அனுப்பி இருக்கலாம். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டு வெடித்தது. கோவையில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்டு காரில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த முபின் என்ற வாலிபர் குண்டுவெடிப்பில் சிக்கி பலியானார்.

    இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருக்கும் நிலையில் அதேபோல தீபாவளிக்கு முந்தைய நாள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். கோவையில் பா.ஜ.க. அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • ஈஷா தன்னார்வலர்களும் திரளாக பங்கேற்றனர்.
    • ஈஷா சார்பில் புத்தாடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆதியோகி முன்பு ஒன்றாக இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதில் தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, நல்லூர்பதி, சீங்கபதி, சாடிவயல்பதி உள்ளிட்ட ஏராளமான மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அவர்கள் மாலை 4 மணியளவில் சர்ப்பவாசலில் இருந்து தாம்பூல தட்டுக்களை ஏந்தி ஆதியோகிக்கு ஊர்வலமாக நடந்து சென்றார்கள்.

    பின்னர், ஆதியோகி முன்பு இருக்கும் சப்தரிஷிகளின் திருமேனிகளுக்கு பூ, பழங்களை படைத்து ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். மேலும், அங்கு சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு பழங்குடி மக்கள் தங்கள் கரங்களாலேயே தீர்த்தங்களை அர்ப்பணித்தனர். இதை தொடர்ந்து பழங்குடி மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான ஈஷா தன்னார்வலர்களும் திரளாக பங்கேற்றனர்.

    முன்னதாக, தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி ஆகிய மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுகணக்கான குழந்தைகளுக்கு ஈஷா சார்பில் புத்தாடைகள்  இலவசமாக வழங்கப்பட்டது. இதுதவிர, ஈஷா யோக மையத்தில் இருந்து இருட்டுப்பள்ளம் வரை உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று நேற்றும் இன்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை பரிமாற உள்ளனர்.

    ×