என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீபாவளி அன்று குடிபோதையில் தகராறு செய்த கணவரால் இளம்பெண் தற்கொலை
- விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
புதுக்கோட்டை மாவட்ட ம் விராலிமலையை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 23). இவர்களு க்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ள னர். இவர்கள் குடும்பத்துடன் தற்போது கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடி யில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அவர்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில் வடிவேல் தனது மனைவியிடம் ஊருக்கு செல்லலாம் என கூறி இருந்தார். ஆனால் அவர் இந்த வருடம் ஊருக்கு அழைத்து செல்ல வில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று வெளியே சென்ற வடிவேல் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் போதையில் படுத்து தூங்கினார். அப்போது உமா மகேஸ்வரி தனது தாயிடம் செல்போனில் சத்தமாக பேசிக்கொண்டு இருந்தார். இதில் வடிவேலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஏன் கத்துகிறாய் என கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு உமா மகேஸ்வரி தினமும் தான் குடித்து விட்டு வருகிறாய். இன்று தீபாவளி பண்டிகை, இன்றுமா குடித்து விட்டு வருவாய். உன்னுடன் வாழ்வதற்கு நான் என் அம்மா வீட்டிற்கே சென்று விடுவேன் என கூறினார்.
பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வடிவேல் தனது மனைவியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமான 5 வருடத்தில் உமாமகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.






