என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலை அருகே வடமாநில தொழிலாளி கொலை
    X

    ஆனைமலை அருகே வடமாநில தொழிலாளி கொலை

    • ஆனைமலையில் உள்ள தென்னை மட்டை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.
    • ஆனைமலை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சோனுவை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பாலக்காடு ரெயில்வே தண்டவாளத்தில் மீனாட்சிபுரம் அருகே தலை, உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிணம் கிடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ரத்தக்கறைகள் தென்பட்டன. இதனால் பிணமாக கிடந்தவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதனால் ரெயில்வே போலீசார் ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனைமலை போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சத்யேந்திரகோல் (வயது 33) என்பது தெரியவந்தது. ஆனைமலையில் உள்ள தென்னை மட்டை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    கடைசியாக சத்யேந்தி ரகோலுடன் வெளியே சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரித்தபோது அவருடன் பணியாற்றிய சோனு என்ற ஷில்பா (33) என்ற வாலிபர் சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது சத்யேந்திரகோலை அடித்துக் கொலை செய்ததை சோனு ஒப்புக் கொண்டார்.

    சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மீனாட்சிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி உள்ளனர். பின்னர் மீனாட்சிபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகே மது குடித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சோனுவின் மனைவியிடம் சத்யேந்திரகோலின், தம்பி முறையுள்ளவர் தவறாக நடக்க முயன்று உள்ளார். இதுபற்றி பேசியபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சோனு, மது போதையில் இருந்த சத்யேந்திர கோலை ரெயில்வே தண்டவாளம் அருகே கீழே தள்ளினார். பின்னர் அங்கு கிடந்த கல்லை எடுத்து தலையில் தாக்கினார். இதில் படு காயம் அடைந்து நிலைகுலைந்த சந்யேந்திர கோல் தண்டவாளத்தில் மயங்கி விழுந்தார்.

    போதையில் இருந்த சோனு அவரை அப்படியே விட்டு அங்கிருந்து சென்றார். தண்ட வாளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த சத்யேந்திரகோல் மீது அதிகாலையில் அந்த வழியாக சென்ற ரெயில் மோதியதில் அவரது தலை துண்டானது தெரிய வந்தது.

    இதையடுத்து ஆனை மலை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சோனுவை கைது செய்தனர். தற்போது அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×