என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • வீட்டுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை சேதப்படுத்துகிறது
    • குடியிருப்புக்குள் வராமல் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    வால்பாறை, 

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் புதுத்தோட்டம் பி.ஏ.பி.நகர், காமராஜர் நகர், துளசிங்க நகர், கூட்டுறவு காலனி, அண்ணா நகர், வால்பாறை டவுன் பகுதி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக 100க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் சுற்றி வருகிறது.

    இந்த சிங்கவால் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதோடு அங்குள்ள வீடுகளின் ஜன்னல் வழியாக சமையலறைக்குள் நுழைந்து, அங்கு வைத்திருக்க கூடிய உணவுப் பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது.

    சிங்கவால் குரங்குகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிங்கவால் குரங்குகளை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூட்டுறவு காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வந்தது.

    இதில் ஜெபா என்பவர் வீட்டில் நுழைந்த குரங்குகள் கூட்டம் வீட்டிற்குள் இருந்த உணவு பொருட்கள் சாப்பிட்டு கண்ணாடி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது. நீண்ட நேரம் போராட் டத்திற்கு பின்பு சிங்கவால் குரங்குகளை அப்பகுதியில் இருந்து சென்றது. குரங்குகள் குடியிருப்பு பகுதியில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்

    • பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்
    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு செயற்கைகால் வழங்க நிதி திரட்டும் வகையில் நிர்வாகிகள் ஏற்பாடு

    கோவை, 

    ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் சேக்புரோ சார்பில் மாரத்தான் போட்டி இன்று கோவை அவினாசி சாலையில் உள்ள பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

    8 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு செயற்கை கால் வழங்க நிதி திரட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இந்த மாரத்தான் ஓட்ட த்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகி ருஷ்ணன் தொடங்கி வைத்து, மக்களுடன் மார த்தான் ஓடினார். செல்லா கே.ராகவேந்தர் முன்னிலை வகித்தார். இதில் 200-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியானது 3 பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள், டி-சர்ட், சாக்ஸ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. திட்டத்த லைவர் லட்சுமி நாராய ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவையில் நீரிழிவு நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படு த்தும் வகையில் குழந்தை களை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற "கிட்ஸ் வாக்க த்தான் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கோவை ரேஸ்கோர்சில் நடந்த நிகழ்ச்சியை கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். பந்தய சாலை மீடியா டவரில் தொடங்கிய வாக்க த்தான் பந்தய சாலை முழுவதும் சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்தடை ந்தது. இதில் குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விழிப்பு ணர்வு பதாகை களை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.இதில் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் மற்றும் ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் தலைவர் ரேஷ்மா ரமேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • கோவை உள்பட 3 மாவட்டங்களில் அதிகாரிகள் தணிக்கை சோதனை
    • போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை

    கோவை, 

    கோவை, திருப்பூர், நீலகிரியில் உள்ள 11 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 5 பகுதி அலுவலகங்களை சேர்ந்த போக்குவரத்து துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு தணிக்கை குழுவி னர் நேற்று காலை முதல் மாலை வரை தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொ ண்டனர்.

    இதில் மொத்தம் 296 வாகனங்களுக்கு அபராத மாக ரூ.25.22 லட்சம் விதிக்கப்பட்டு ள்ளது.

    இது தொடர்பாக கோவை மண்டல போக்கு வரத்து இணை ஆணையர் சிவகுமரன் கூறியதாவது:-

    அதிகம் பாரம் ஏற்றிய 53 வாகனங்கள், அதிக ஆட்களை ஏற்றிய 38 வாகனங்கள், வாகன காப்பீடு இல்லாத 45 வாகனங்கள், தகுதிச்சா ன்று இல்லாத 49 வாகனங்கள், புகை பரிசோதனை சான்று இல்லாத 13 வாகனங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாத 41 வாகனங்கள், அனுமதி ச்சீட்டு இல்லாத 2 வாக னங்கள் என மொத்தம் 296 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்ப ட்டுள்ளது.

    இதில் பெரும்பாலா னவை லாரி, மேக்சி கேப், ஆட்டோ, சரக்கு ஆட்டோ, சுற்றுலா வேன் ஆகியவை ஆகும். தகுதிச்சான்று இல்லா மல் வாகனத்தை இயக்கி, வித்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு கிடை க்காது. அதோடு உரிய ஓட்டுநர் உரிமம் பெற்ற வர்கள் தான் வாகனத்தை இயக்க வேண்டும்.

    அதிக பாரம் ஏற்றி சென் றால் அபராத தொகை விதிக்கப்படும். எனவே அனுமதிக்கப்பட்ட எடையோடு தான் வாக னத்தை இயக்க வேண்டும்.

    இவ்வாறு இயக்குவது வாகனத்துக்கும், சாலை க்கும் பாதுகாப்பாக இரு க்கும்.

    விபத்துக்களையும் தவிர்க்க முடியும். இதுபோ ன்று தொடர்ச்சி யாக சோதனைகள் நடைபெறும் என்பதால், வாகன ஓட்டி கள் உரிய அனைத்து ஆவணங்களையும் வைத்தி ருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காரமடை-மஞ்சூர் சாலையில் கூட்டமாக சுற்றி திரிகிறது

    மேட்டுப்பாளையம், 

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மேட்டுப்பா ளையம் காரமடை சிறுமுகை பகுதியில் எண்ணற்ற வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக காட்டுயானை, மான், கரடி, சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சாலை யை கடக்கும் யானைகள் விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் காரமடை- வெள்ளியங்காடு சாலையில் ஓரமாக யானை கூட்டம் ஒன்று குட்டியுடன் உலா வந்தது.

    இதனை வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ க்கள் சமூக வலைத்த ளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • மதுவை பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.
    • அடுத்த தலைமுறை கஞ்சா என்னும் போதை பொருளால் பாதிப்பதை தடுக்க வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்திற்காக இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரிக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள நீர்பாசன திட்டங்களை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தொடர் விபத்துக்கள் நடைபெற்று வரும் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையை பகுதியை உடனடியாக சீர்படுத்த வேண்டும். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அல்லது சேலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசு மருத்துவமனையில் நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு மருத்துவர்கள் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    மொரப்பூர்-தருமபுரி ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை அரசு விரைவு படுத்த வேண்டும். தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைவிடத்தில் தார்சாலை ஒன்று மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது. எவ்வித தொழிற்சாலைகளும் இதுவரை வரவில்லை.

    விவசாய விளை நிலங்களை அழித்து அங்கு தொழிற்சாலைகள் அமைத்து ஏற்படும் வளர்ச்சி தேவையில்லை. சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் தரிசு நிலங்களில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.

    மதுவை பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. ஆனால் இதுவரையில் இதை செயல்படுத்தவில்லை.

    பல்வேறு வடிவங்களில் கஞ்சா விற்பனை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த தலைமுறை கஞ்சா என்னும் போதை பொருளால் பாதிப்பதை தடுக்க வேண்டும். இதற்காக காவல்துறையில் உள்ள மது ஒழிப்பு பிரிவிற்கு கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும். பல்வேறு வடிவங்களில் கஞ்சா விற்பனை செய்வதை அரசு தீவிர நடவடிக்கை மூலம் தடுக்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் 5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளது. இதை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும்.

    பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 75 சதவீதமாக இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என தெரிவித்துள்ளது. தொடர்ந்து சமூக நீதி குறித்து பேசிவரும் தி.மு.க ஏன் சாதிவாரியை கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறது?

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும். கூட்டணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

    ஆவின் பால் விற்பனை குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானது எனில் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனியார் பால் கொள்முதலில் தொடர்ந்து ஊழல் நடைபெற்று வருகிறது. இதை அரசு உடனடியாக தடுக்க வேண்டும்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு மத்திய அரசு நேரடியாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு வழங்கும் நிதியை போல தமிழகத்திற்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் பணிகள் விரைவில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.
    • கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    கோவை,

    உலகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (26-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவதற்கா கவும், வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்வதற்காகவும் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் பொரி-கடலை ஆகியவற்றை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் பூக்கள் விற்பனை க்காக கொண்டு வரப்படுகி ன்றன. மேலும் வெளி மாவட்டம் -மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் சரக்கு லாரிகளில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் ஒட்டுமொத்த மாக சுமார் 5 டன் பூக்கள் விற்ப னைக்காக கொண்டு வரப்படுகி ன்றன. அங்கு அவை உள்ளூர் வியாபா ரிகளுக்கு ஏலமுறையில் விற்கப்ப்ப ட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களும் குடும்பத்து டன் வந்திருந்து கிலோக்க ணக்கில் பூக்களை கொள்மு தல் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் வாடிக்கை யாளர்களின் கூட்டம் அலைமோதியது. அதேநே ரத்தில் வெளியூர்-வெளி மாவட்டங்களில் இருந்து பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து இருந்தது.

    எனவே கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    மேலும் பொரி மற்றும் கடலை வகைகளின் விலை களும் சற்று அதிகரித்து உள்ளன. கோவை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலை ரூ.400 அதிகரித்து இன்று ஒரு கிலோ மல்லி ரூ.1600-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல முல்லைப்பூவின் விலை தற்போது ரூ.800-க்கு விற்பனை செய்யப்ப டுகிறது. அரளிப்பூவின் விலை மட்டும் ரூ.40 குறைந்து தற்போது ரூ.160-க்கு விற்கப்பட்டு வருகிறது.

    கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பூக்களின் விலைவிவரம் (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):

    ெசவ்வந்தி-120, அரளி-160 (200), சம்பங்கி-80, தாமரை ஒரு பூ-20, ஜாதிமல்லி-800 (600), கோழிக்கொண்டை-50, துளசி-30, மரிக்கொழுந்து ஒரு கட்டு-50, ரோஜா-120, வெள்ளை செவ்வந்தி-280, கலர் செவ்வந்தி-200 (160).

    கோவை பலசரக்கு மட்டும் ஒட்டுமொத்த கடைகளில் தற்போது பொரிகடலை மற்றும் அவல்பொரியின் விலை சற்று அதிகரித்து உள்ளது. நாளை திருக்கார்த்திகை என்பதால் பொதுமக்கள் விலைஉயர்வு பற்றி கவலைப்படாமல் பூக்கள் மற்றும் பலசரக்கு பொரு ட்களை வாங்கி செல்கின்ற னர்.

    • காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்
    • ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்தவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்

    சூலூர்,

    சூலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி தனது குடும்பத்துடன் தங்கி கூலிவேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார்.

    இதற்கிடையே காதலி கர்ப்பமானது தெரியவந்ததும் அந்த வாலிபர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு தப்பி சென்று விட்டார். இதுதொடர்பாக சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சிறுமியை கர்ப்பமாக்கி தப்பி சென்றது ஓம்பிரகாஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் ஜார்கண்ட் மாநிலத்துக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த ஓம்பிரகாஷை கைதுசெய்து கோவைக்கு அழைத்து வந்து, சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்

    • முக்கிய சந்திப்புகளில் சுற்றுவட்டப் பூங்காக்கள்
    • பஸ்கள் திரும்பும் இடங்களில் உள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் நெடுஞ்சாலை துறையினரிடம் கருத்துப்பரிமாற்றம்

    கோவை,

    கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விபத்துகளைக் குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு குறுந்தகடை(சிடி) மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.

    இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாநகரை சிக்னல் இல்லா மாநகராக்கும் முயற்சியில் காவல் துறை ஈடுப்பட்டுள்ளது.

    வட்ட பூங்கா, யூ-டர்ன் திருப்பம் அமைக்கப்பட்டதன் மூலம் பயணத்தின் போது காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதோடு, விபத்துகளும் குறைக்கப்பட்டுள்ளன.

    அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, பொள்ளாச்சி சாலை, வழித்தடங்களில் ஏராளமான தொழிற்சாலைகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன.

    போக்குவரத்தை சீர்ப டுத்த சந்திப்புகளில் சிக்னல்கள் நிறுவப்பட்டு செயல்படுத்த வந்தன. சிக்னல்களில் வாக னங்கள் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி, பயணத்தை எளிமையாக்க மாநகர காவல்துறை, தனியார் அமைப்புடன் இணைந்து ஆய்வு செய்தது.

    இதன் தொடர்ச்சியாக முக்கிய சந்திப்புகளில் சுற்று வட்டப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், யூ-டர்ன் திரு ப்பங்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து சோதனை நடத்தப்பட்டது.

    இதில், கோவை மாநகர போலீஸ், போக்குவரத்து நெரி சலைக் கட்டுப்படு த்துவதிலும், விபத்துகளைக் குறைப்பதிலும், வெற்றி கண்டுள்ளது.

    பஸ்கள் திரும்பும் இடங்க ளில் உள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் நெடுஞ்சா லைத் துறையினரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    பழைய சிக்னல்கள் ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்கள் ஆய்வு செய்ய ப்பட்டு மாற்றி அமைக்கப்படும்.

    முதற்கட்டமாக கோவை மாநகரில் ஏற்படுத்தப்ப டடுள்ள இந்த போக்குவரத்து மாற்றத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக, இந்த சாலைகளில் நாள்தோறும், பயணிக்கும் வாகன ஓட்டி கள் திருப்தி தெரிவித்துள்ள னர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வருவாய்த்துறை சார்பில் அறிக்கை தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்ப ஏற்பாடு
    • சேதம் அடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1 மாதமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் அதிகப்ப டியாக கனமழை பெய்கிறது.

    மேட்டுப்பாளையம் தாலுகாவில் மட்டும் 12 வீடுகள் கனமழை காரண மாக சேதம் அடைந்து உள்ள தாக மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் தெரி வித்து உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் தாலுகாவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 37 செ.மீ. மழை பெய்தது. இதனால் அங்கு உள்ள 100-க்கும் மேற்பட்ட குளம் -குட்டை கள், தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகின்றன. மேலும் பல விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி வெளியேற வழியின்றி முடங்கி உள்ளது.

    அதிலும் குறிப்பாக மேட்டுப்பாளையம் நகராட்சி, சிக்கதாசம்பா ளையம் ஊராட்சியில் 4 வீடுகள், சிக்காரம்பாளையம் ஊராட்சி யில் 4 வீடுகள், மூடுதுறை மற்றும் கெம்மா ரம்பாளையம் ஊராட்சி களில் தலா 1 வீடுகள், மருதூர் ஊராட்சியில் ஒரு வீடு என மொத்தம் 12 வீடுகள் சேதமாகி உள்ளன.

    இதுதொடர்பாக வருவா ய்த்துறை சார்பில் அறிக்கை தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சேதம் அடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்-ஆதிவாசி மக்கள் அவதி
    • சாலையை விரைவாக சீரமைத்து போக்குவரத்தை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்ட சாலக்குடி அருகே அதிர ப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது.

    அங்கு பல்வேறு மாநிலம் மற்றும் வெளி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கி றார்கள்.

    வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மழுக்க பாறை எஸ்டேட் வழியாக 80 கிலோமீட்டர் வனபகுதி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று வரு கின்றனர்.

    வன பகுதி வழியாக செல்லும் போது வனவி லங்குகளை பார்ப்பது சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தரும் என்பதால், அந்த சாலையில் பயணிக்க அதிகளவில் விரும்புவார்கள்.

    மழுக்கப் பாறை பகுதி தேயிலைத் தோட்ட தொழி லாளர்களும் ஆயிரக்கண க்கான ஆதிவாசி பழங்குடி மக்களும் அத்தியாவிசிய மான பொருட்கள் வாங்கு வது உள்பட பல்வேறு வேலைகளுக்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் முன்பு மழுக்குப்பாறை அதிரப்பள்ளி சாலை இடையே ஆம்பளபாறை என்ற இடத்தில் கன மழை பெய்து மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப் பட்டது.

    உடனடியாக சாலை தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வாகனங்கள் சென்று வந்தன. இந்த நிலையில் சாலையை முழுமையாக சீரமைக்க முடிவு செய்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாகன போக்குவரத்துக்கு நேற்று வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அந்த வழியாக பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டி ருந்தது.

    இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலை சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு பணி முடிவடையாமல் உள்ளது. பணி முற்றிலும் நிறைவ டையும் வரை வால்பாறை-சாலக்குடி இடையே போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்த னர்.

    இதனால் வால்பாறை தங்கும் விடுதி உரிமை யாளர்கள் ஹோட்டல்ஸ் மழுக்குப்பாறை எஸ்டேட் தொழிலாளர்கள், வனப்பகு தியில் இருக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்கள் ஆகி யோர் போக்குவரத்து இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே சாலையை விரைவாக சீரமைத்து போக்குவரத்தை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் குறித்து ஆய்வு
    • படித்த பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

    கோவை,

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால், மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதிலும், வேலை வாய்ப்பு பெறுவதிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    இந்நிலையில், தற்போது பிளஸ்-2 படிக்கும் மாண வர்கள் அடுத்த ஆண்டு கல்லூரிக்கு சேரும் ஆர்வத்தை தூண்டும் வகை யில் களப்பயணம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு தலா 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் 113 மேல்நி லைப்பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 4 ஆயிரத்து 45 மாணவர்கள் கல்லூரி களப்பயணத்திற்கு தேர்வாகியுள்ளனர். இந்த மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த பாடப்பிரிவுகளின் அடிப்படையில் அந்தந்த பாடப்பிரிவு உள்ள கல்லூரிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    இதற்காக, பாரதியார் பல்கலைக்கழகம் வேளாண் பல்கலைக்கழகம், கோவை, மேட்டுப்பாளையம், வால்பாறை அரசு கலைக்கல்லூரிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 24 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த களப்பயணத்தின் போது மாணவர்கள் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், நூலகம், ஆய்வகங்கள், உபகரணங்கள், விளையாட்டு மைதானங்கள், விடுதி அறைகள், உணவுகூடம், வகுப்பறைகள், அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் குறித்து பார்வையிட உள்ளனர்.

    மேலும், கல்லூரியில் உள்ள இளங்கலை படிப்புகள், உதவித் தொகை திட்டங்கள், போட்டி தேர்வுகள், வேலைவாய்ப்புகள், பயிற்சி வகுப்புகள், சான்றிதழ் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், படித்த பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ்கள் ஏற்பாடு செய்யபடவுள்ளது.

    மேலும், களப்பயணத்தின் போது மாணவர்கள் சீருடையில் தான் வர வேண்டும். மாணவர்களுக்கு மதிய உணவு, தேநீர் உள்ளிட்டவையும் வழங்கப்படும். இந்த கல்லூரி களப்பயணத்திற்கு மாணவர்களை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒப்பந்ததாரர் பிரகாசுக்கு, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மீது கோபம் ஏற்பட்டது.
    • கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை:

    கோவை ஒண்டிபு தூரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(வயது61). இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மேலும் இவர் கோவை மாநகராட்சியின் 56-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(39). இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்யும் பணியை ஒப்பந்த அடிப்படையில் எடுத்திருந்தார்.ஆனால் இவர் அந்த பொதுக்கழிப்பிடத்தை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றும், பராமரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்திக்கு புகார் வரவே அவர், ஒப்பந்ததாரர் பிரகாசிடம், சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். ஆனாலும் அவர் அதனை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார்.

    இதையடுத்து கவுன்சிலர், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்ததோடு, மாமன்ற கூட்டத்தில் இதுதொடர்பாக புகார் வைத்தார். இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஒப்பந்ததாரர் பிரகாசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனால் ஒப்பந்ததாரர் பிரகாசுக்கு, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மீது கோபம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் தனது நண்பரான மற்றொரு ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணன் என்பவரை அழைத்து கொண்டு கோவை ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன்பு மனித கழிவை வீசி சென்றார்.

    இதேபோல், சிங்காநல்லூர் மசக்காளிபாளையத்தில் உள்ள அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ள பன்னீர்செல்வம் என்பவரது வீட்டின் முன்பு மனித கழிவை வீசியுள்ளனர்.

    இதுதொடர்பாக கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் அ.தி.மு.க கிளை செயலாளர் வீட்டின் முன்பு மனித கழிவை வீசி சென்ற கழிவறை சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரர்களான பிரகாஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து பிரகாசிடம் மனித கழிவுகளை வீசியது குறித்து விசாரித்தனர். அப்போது, அ.தி.மு.க. கிளை செயலாளரான பன்னீர்செல்வத்திடம் நான் வேலை பார்த்தபோது அவர் தனக்கு முறையாக சம்பளம் தரவில்லை என்றும், காங்கிரஸ் கவுன்சிலர் தன் மீது புகார் தெரிவித்த ஆத்திரத்தில் தனது நண்பருடன் சேர்ந்து இதனை செய்ததாக தெரிவித்தார்.

    ×