என் மலர்
சென்னை
- அவரது ஆதங்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.
- நான் அவரோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
சென்னை:
சென்னையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவரது ஆதங்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அவரை எங்கள் கூட்டணிக்கு மீண்டும் கொண்டு வர டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
நான் அவரோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். ஓ.பன்னீர் செல்வம் தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் என்றார். பேட்டியின் போது, முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மற்றும் கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்கள் ஒன்றாக நிற்பார்கள்.
- நீங்கள் தொடர்ந்து வலிமை, மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
சென்னை:
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னட மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மொழி உரிமைகளைப் பாதுகாப்பதிலும் சமூக நீதியை முன்னெடுப்பதிலும் உங்கள் வலுவான குரல் உண்மையான கூட்டாட்சி மற்றும் உள்ளடக்கிய ஜனநாயகத்தின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. இந்த மதிப்புகள் இன்றைய இந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை; மேலும் அவற்றை நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்கள் ஒன்றாக நிற்பார்கள். நீங்கள் தொடர்ந்து வலிமை, மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர அவரிடம் ஆதாரம் ஏதும் இருக்காது.
- அவர் என்னை குறை கூறுகிறார். நான் அவரைப்பற்றி குறை கூற மாட்டேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் 3 முறை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகா நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக 6 முறை அழைத்தும் நயினார் நாகேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு நயினார் நாகேந்திரன், ஓ பன்னீர்செல்வம் என்னை அழைக்கவில்லை, நான் தான் அவரை செல்போனில் அழைத்தேன். ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர அவரிடம் ஆதாரம் ஏதும் இருக்காது. அவர் என்னை குறை கூறுகிறார். நான் அவரைப்பற்றி குறை கூற மாட்டேன். ஏற்கனவே ஏற்பட்ட தொடர்பை அடுத்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். ஒரு முடிவு எடுத்துவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஒரு காரணத்தை கூறுகிறார் என்றார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் காண்பித்தார். அதில் கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி மற்றும் ஏப்.12 ஆகிய தேதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.
- தீரன் சின்னமலை படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஓடாநிலைக் கோட்டையின் ஒப்பற்ற விடுதலைப் போராளி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள்!
சென்னை:
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம் என ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஓடாநிலைக் கோட்டையின் ஒப்பற்ற விடுதலைப் போராளி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள்!
சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, நம் உரிமைகளில் எவர் கை வைத்தாலும் வெகுண்டெழுவோம் என்ற தன்மான உணர்வை இம்மண்ணில் விதைத்துச் சென்ற வீரப்பெருஞ்சுடரான தீரன் சின்னமலை அவர்களின் புகழ் ஓங்குக! என்று பதிவிட்டுள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர அவரிடம் ஆதாரம் ஏதும் இருக்காது.
- ஒரு முடிவு எடுத்துவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஒரு காரணத்தை கூறுகிறார்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக 6 முறை அழைத்தும் நயினார் நாகேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு நயினார் நாகேந்திரன், ஓ பன்னீர்செல்வம் என்னை அழைக்கவில்லை, நான் தான் அவரை செல்போனில் அழைத்தேன்.
ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர அவரிடம் ஆதாரம் ஏதும் இருக்காது. அவர் என்னை குறை கூறுகிறார். நான் அவரைப்பற்றி குறை கூற மாட்டேன். ஏற்கனவே ஏற்பட்ட தொடர்பை அடுத்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். ஒரு முடிவு எடுத்துவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஒரு காரணத்தை கூறுகிறார் என்றார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 2 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கியது.
- தற்போது பொதுப்பிரிவு கலந்தாய்வு 2-ம் சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியானது. பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கியது.
தற்போது பொதுப்பிரிவு கலந்தாய்வு 2-ம் சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பி.இ., பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இவர்களுக்கான முதலாம் செமஸ்டர் வகுப்புகள் வரும் டிசம்பர் 10-ம் தேதி முடிவடைகிறது.
முதல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது. 2-ம் செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
- மதன் பாப் அனைவரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகக் கூடியவர்.
- கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர் என்றார்.
சென்னை:
சினிமா குணச்சித்திர நடிகர் மதன் பாப் (71), சென்னையில் காலமானார்.
இந்நிலையில், மதன் பாப் மறைவுக்கு தே.மு.தி.க. இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். கேப்டன் உடன் இணைந்து ஆனஸ்ட் ராஜ், தமிழ்செல்வன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர், கேப்டனின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அனைவரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகக் கூடியவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான ஒரு மனிதர். நகைச்சுவை உணர்வோடு பேசி அனைவரையும் மகிழ்விப்பவர். அவரது இழப்பு திரை உலகிற்கே பேரிழப்பு, அவருடைய ஆன்மா சாந்தியடையவும் அவரை இழந்து வாடும் திரையுலகத்தினருக்கும், குடும்பத்தாருக்கும் தே.மு.தி.க. சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.
- கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
- இதில் பேசிய சுருதிஹாசன், லோகேஷ் அமைதியாக செயல்படக்கூடிய ஒரு இயக்குனர் என்றார்.
சென்னை:
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகை சுருதிஹாசன் பேசியதாவது:
இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். ரஜினி (சாரு)க்கு நன்றி.
கூலி படத்தில் சத்யராஜின் மகளாக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு ப்ரீத்தி என்ற கேரக்டரை கொடுத்ததற்கு நன்றி.
என் அப்பாவுக்கு விக்ரம் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி.
அந்தப் படத்தில் இருந்து நான் உங்கள் (லோகேஷ்) ரசிகையாகி விட்டேன்.
லோகேஷ் அமைதியாக செயல்படக்கூடிய ஒரு இயக்குனர்.
அமீர்கானுடன் நடித்ததும் பெருமையாக இருக்கிறது.
அனிருத்தின் இளமைக் காலத்திலிருந்து அவரை பார்த்துவருகிறேன். உங்களுடைய ஸ்பெஷலான பின்னணி இசை படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறது என தெரிவித்தார்.
- கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
- இதில் பேசிய ரஜினி, லோகேஷ் கனகராஜ் தான் கூலி படத்தின் உண்மையான ஹீரோ என்றார்.
சென்னை:
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
லோகேஷ் கனகராஜ் தான் கூலி படத்தின் உண்மையான ஹீரோ.
ஒரிஜினால் ஆக நான் வில்லன்மா. எத்தனை நாள் தான் நான் நல்லவனாக நடிப்பது? வெங்கட் பிரபு அஜித்துக்கு எழுதிய டயலாக் போலவே, நாகார்ஜுனா கேரக்டர் பண்ணி இருக்காரு.
எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து முரண்பாடு இருக்கலாம். ஆனா அவர் மனசுல பட்டதை சொல்லிட்டு போயிருவாரு. மனசுல பட்டதை நேரடியாக சொல்லுறவங்களை நம்பலாம். ஆனா மனசுல் வச்சுக்கிட்டு வெளியில் எதுவும் காட்டாதவங்களை நம்ப முடியாது.
நான் 1950 மாடல், லட்சம் கிலோமீட்டர் ஓடி இருக்கிறேன்.பார்ட் எல்லாம் உடலில் மாற்றி இருக்கிறார்கள். எனவே, என்னை பார்த்து ஆட வையுங்கள் என டான்ஸ் மாஸ்டரிடம் கூறினேன்.
இந்தப் படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும் என தெரிவித்தார்.
- உடலுறுப்புகளை ஈந்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள்.
- உடலுறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு!
அதனால்தான், துணை முதலமைச்சராக இருந்தபோது, எனது உடலுறுப்புகளைக் கொடையளித்தேன்; முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், உடலுறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும் என்று அறிவித்தேன்.
2023 செப்டம்பர் 23-இல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், இதுவரையில் 479 பேர் (கடந்த ஆண்டு மட்டும் 268 பேர்) தங்களது உடலுறுப்புகளை ஈந்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள்! அவர்களுக்கு எனது வணக்கம்!
#OrganDonation-இல் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.
- பாரதப் பிரதமர் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன்.
"தன்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்ததில் எள்ளளவும் உண்மை இல்லை என்று NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள்,"தன்னிடம் சொல்லியிருந்தால் மாண்புமிகு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்"என்று தெரிவித்துள்ளார்.
இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை.
நயினார் நாகேந்திரன் அவர்களை ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.
எனவே, நயினார் நாகேந்திரன் அவர்களிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும், நயினார் நாகேந்திரன் அவர்கள் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. வைத்திலிங்கம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பாரதப் பிரதமர் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன்.
அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.
உண்மையிலேயே, நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பிரதமர் அவர்களை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம்.
அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை.
இதிலிருந்து, நான் பிரதமர் அவர்களை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பிரதமர் அவர்களைச் சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரன் அவர்களிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது.
நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






