என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • பங்காரு அடிகளாரின் நினைவிடத்திற்கு கடந்த 9 நாட்களாக முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • எடப்பாடி பழனிசாமி பங்காரு அடிகளாரின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த 19-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு ஆலயத்தின் புற்று மண்டபத்தில் சித்தர் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. பங்காரு அடிகளாரின் நினைவிடத்திற்கு கடந்த 9 நாட்களாக முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இன்று காலை 9 மணிக்கு மேல்மருவத்தூருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வந்தார். அதன் பின்னர் கோயிலின் எதிரே உள்ள ஓம் சக்தி பீடத்தை வணங்கி கோயிலுக்கு உள்ளே சென்று ஆதிபராசக்தி அம்மனை வணங்கினார். பின்னர் கோயிலின் அருகே உள்ள புற்று மண்டபத்தில் பங்காரு அடிகளாரின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து கோயிலுக்கு அருகே உள்ள பங்காரு அடிகளாரின் இல்லத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த அவரது மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    • ரஞ்சித்குமார் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மறைமலைநகர்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 25). இவர் மகேந்திரா சிட்டி பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் பஸ் மூலம் சிங்கப்பெருமாள் கோவிலில் வந்து இறங்கினார். பின்னர் தங்கி இருக்கும் இடத்திற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ரஞ்சித் குமாரை வழிமறித்து கத்தியால் அவரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து ரஞ்சித்குமார் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காண்டீபன் இரவு வீட்டில் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கினார்.
    • காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து காண்டீபன் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கீரப்பாக்கம், துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காண்டீபன் (வயது36). காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    காண்டீபன், இரவு வீட்டில் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கினார். அதிகாலை மனைவி பார்த்தபோது காண்டீபன் படுக்கையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காயார் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இரவு படுக்க செல்வதற்கு முன்பு உடல்நிலை பாதிப்புக்காக காண்டீபன் கீரப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இதன் பின்னர் அவர் மர்மமாக இறந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து காண்டீபன் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளவி கூட்டின் ஒரு பகுதி உடைந்து தஸ்வின் தலையில் விழுந்தது.
    • கிருத்திகா, பழனிசாமி ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகமங்கலம் கிராமம், முத்துமாரியம்மன் கோவில் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். தொழிலாளி. இவரது மனைவி நித்யா. இவர்களது மகன் தஸ்வின்(8), மகள் கிருத்திகா (4). இவர்களில் தஸ்வின் கீரப்பாக்கத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் ஆனந்தனும், அவரது மனைவி நித்யாவும் வேலை சம்பந்தமாக வெளியில் சென்று விட்டனர்.

    இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த தஸ்வினும், அவரது தங்கை கிருத்திகாவும் வீட்டின் வெளியே விளையாடினர். அப்போது அங்கிருந்த பனைமரத்தில் குளவிகள் பெரிய கூடு கட்டி இருந்தது.

    அந்த கூட்டின் மீது தஸ்வின் கல் வீசியதாக தெரிகிறது. மேலும் கம்பாலும் தட்டிவிட்டு விளையாடினர்.

    இதில் குளவி கூட்டின் ஒரு பகுதி உடைந்து தஸ்வின் தலையில் விழுந்தது. அப்போது ஏராளமான விஷ குளவிகள் பறந்து வந்து தஸ்வின் மற்றும் அருகில் நின்று கொண்டு இருந்த கிருத்திகாவை தலை, முகம் மற்றும் உடல் முழுவதும் கொட்டின. இதில் அவர்கள் இருவரும் அலறி துடித்தனர்.

    சத்தம் கேட்டு வீட்டில் இருந்த ஆனந்தனின் தந்தையான பழனிசாமியும் அங்கு வந்தார். அவரையும் குளவிகள் கொட்டின.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் குளவிகள் கொட்டியதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தஸ்வின், அவரது தங்கை கிருத்திகா, தாத்தா பழனிசாமி ஆகிய 3 பேரையும் மீட்டு ரத்தின மங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தஸ்வின் பரிதாபமாக இறந்தான். கிருத்திகா, பழனிசாமி ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா வளர்ச்சி கழகம் 7,736 சதுர அடி இடத்தை தேர்வு செய்து உள்ளது.
    • விரைவில் அர்ச்சுனன் தபசு பற்றியும் அதில் உள்ள சிற்பங்கள் பற்றியும் 3டி லேசர் ஒலி, ஒளி காட்சியில் ரசிக்கலாம்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள புராதன சின்னங்களை பார்த்து வியந்து செல்கிறார்கள். அர்ச்சுனன் தபசு சிற்பத்தில் உள்ள சிலைகளில் ஆன்மீக வரலாறு, இயற்கை, கால்நடைகள் மற்றும் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர் காலத்து நிகழ்வுகள் சிற்பக்கலை மூலமாக சிலையாக செதுக்கப்பட்டு இருக்கும். இதை பார்த்து ரசிக்கவும், கதையை அறிந்து கொள்ளவும், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவர்.

    இவர்களின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அர்ச்சுனன் தபசு அருகே உள்ள தலசயன பெருமாள் கோவில் இடத்தில் ரூ.5கோடி மதிப்பீட்டில் "3டி" லேசர் ஒளி-ஒலி காட்சிக்கூடம் அமைக்க முடிவு செய்து உள்ளது. இதற்காக சுற்றுலா வளர்ச்சி கழகம் 7,736 சதுர அடி இடத்தை தேர்வு செய்து உள்ளது. எனவே விரைவில் அர்ச்சுனன் தபசு பற்றியும் அதில் உள்ள சிற்பங்கள் பற்றியும் 3டி லேசர் ஒலி, ஒளி காட்சியில் ரசிக்கலாம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    • தந்தை மணி மது குடித்து ரகளையில் ஈடுபட்ட சந்துருவை திட்டினார்.
    • தந்தை-மகனுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரி, பஞ்சாயத்து காலனியை சேர்ந்தவர் மணி(வயது55).இவரது இளைய மகன் சந்துரு(19). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அவரது தந்தை கண்டித்து வந்தார். எனினும் சந்துரு தொடர்ந்து மதுகுடித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் சந்துரு மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது அண்ணன் கார்த்திக் கண்டித்தார். அவரிடம் சந்துரு தகராறில் ஈடுபட்டார். இதனை கவனித்த தந்தை மணி மது குடித்து ரகளையில் ஈடுபட்ட சந்துருவை திட்டினார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த சந்துரு திடீரென தந்தை மணியை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக மணியை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதுகுறித்து சேலையூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து தந்தையை அடித்து கொலை செய்ததாக சந்துரு மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியும் அவரது நண்பர் இளவரசனும் சேர்ந்து பீர் பாட்டிலால் ஹனிஷ்குமாரை தாக்கினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணி, இளவரசன் ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் அடுத்த கருமாரப்பாக்கத்தை சேந்ந்தவர் ஹனிஷ்குமார்(22). இவர் அப்பகுதியில் உள்ள கடையில் ரூ.10-க்கு தண்ணீர் பாட்டில் வாங்கிவிட்டு "கூகுள் பே" மூலம் பணம் அனுப்புவதாக கடைக்காரர் சுப்பிரமணியிடம் கூறினார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியும் அவரது நண்பர் இளவரசனும் சேர்ந்து பீர் பாட்டிலால் ஹனிஷ்குமாரை தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணி, இளவரசன் ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.

    • கடந்த 3 மாதங்களாக சதீஷ்குமாருடன் ஐஸ்வர்யா ஒரே வீட்டில் தங்கி இருந்தார்.
    • ஐஸ்வர்யாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் சதீஷ் குமார். தனியார் சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி, 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் திருச்சியை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது22) என்பவரும் காதலித்து வந்தனர்.

    அவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மேலும் அவர்களது திருமணத்தை விரைவில் நடத்தவும் முடிவு செய்து இருந்தனர்.

    இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக சதீஷ்குமாருடன் ஐஸ்வர்யா ஒரே வீட்டில் தங்கி இருந்தார். நேற்று இரவு வெளியில் சென்று இருந்த சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு ஐஸ்வர்யா பேசியபோது திடீரென இணைப்பை துண்டித்து விட்டார். அப்போது அவர் மன உளைச்சலில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தேகமடைந்த சதீஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் தனது தங்கையிடம் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார். சதீஷ்குமாரின் தங்கை வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சென்றனர்.

    அங்கு ஐஸ்வர்யா புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஐஸ்வர்யாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது தொடர்பாக சதீஷ்குமாரிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தை 3 பேரும் கவனிக்காமல் சென்று கொண்டிருந்தனர்.
    • சுரேஷ், ரவி, மஞ்சு நாதா ஆகிய 3 சிறுவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது.

    செங்கல்பட்டு:

    ஊரப்பாக்கம் ரெயில் நிலைய பகுதி விடுமுறை தினமான இன்று பரபரப்பாக காணப்பட்டது. காலை 11 மணி அளவில் 3 சிறுவர்கள் தண்டவாளத்தை கடந்தனர். மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தை 3 பேரும் கவனிக்காமல் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற மின்சார ரெயில் 3 பேர் மீதும் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 சிறுவர்களும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதைப் பார்த்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்டவாள பகுதியில் சிதறி கிடந்த 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினார்.

    இதில் சுரேஷ், ரவி, மஞ்சு நாதா ஆகிய 3 சிறுவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. 3 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    சுரேசுக்கு 15 வயது ஆகிறது. ரவிக்கு வயது 12. அண்ணன்-தம்பிகளான இருவரும் வாய் பேச முடியாதவர்கள். 15 வயதான சிறுவன் மஞ்சுநாதாவுக்கு காது கேட்காது.

    3 சிறுவர்களும் பெற்றோர்களுடன் வந்திருந்தபோதுதான் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தை கடந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    • கொலைகும்பல் திட்டமிட்டு அன்பரசுவை தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
    • கொலை வழக்கு தொடர்பாக சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    திருப்போரூர்:

    வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி கல்யாணி. இவர் தற்போது ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். இவர்களது மகன் அன்பரசு(வயது28). இவர் வேங்கடமங்கலம் ஊராட்சியின் 9-வது வார்டு கவுன்சிலராகவும், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளராகவும் இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்பரசு கீரப்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் நண்பர்களுடன் கலந்து விட்டு காரில் வந்து கொண்டு இருந்தனர். கீரப்பாக்கம் சுடுகாடு அருகே காரை நிறுத்திவிட்டு அனைவரும் இருந்தபோது மர்ம கும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் அன்பரசுவை கொடூரமாக கொலை செய்தனர்.

    இதுகுறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் 3 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் கொலையில் தொடர்புடைய 2 பேர் மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி மேலும் 2 பேரை போலீசார் பிடித்தனர்.

    இந்த கொலை வழக்கில் கேளம்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி (வயது 23) ஒத்திவாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுனில் (19) கீரப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் (18) நெடுங்குன்றம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினம் (24) ஆகிய 4 பேர் பிடிபட்டு உள்ளனர். கடந்த ஆண்டு நல்லம்பாக்கத்தைச் சேர்ந்த தேவகுமார் என்பவரை இந்த கும்பல் கொலை செய்து உள்ளது. இதற்கு பழிக்கு பழி வாங்க தேவகுமாரின் நண்பரான வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் திட்டமிட்ட வந்ததாகவும் இதற்கு பல்வேறு வகைகளில் அன்பரசு உதவி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனை அறிந்த கொலைகும்பல் திட்டமிட்டு அன்பரசுவை தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அன்பரசு தனது நண்பர்களுடன் காரை நிறுத்திவிட்டு மது அருந்தும்போது அங்கு பதுங்கி இருந்த கும்பல் வெடிகுண்டை வீசி அவர்களை நிலை குலைய செய்து விட்டு பின்னர் அன்பரசுவை மட்டும் விரட்டி சென்று அரிவாளால் வெட்டி தீர்த்து கட்டி உள்ளனர்.

    கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • ரூபன் மாமல்லபுரம் கடற்கரையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • சுற்றுலா பயணிகளிடம் சவாரி பிடிப்பதற்காக உடும்பன் கட்டணம் குறைவாக வாங்கியதாக தெரிகிறது.

    மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் ரூபன் என்கிற உடும்பன் (வயது23). மாமல்லபுரம் கடற்கரையில் குதிரை ஓட்டும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரூபன் மாமல்லபுரம் கடற்கரையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை தொடர்பாக செய்யாறை சேர்ந்த பாலாஜி, மாமல்லபுரம் சதீஷ்குமார், பட்டிபுலம் கார்த்திக், அருலேசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் மாமல்லபுரம் கடற்கரையில் வாடகைக்கு குதிரையை வாங்கி ஓட்டும் தொழில் செய்து வந்தனர். சுற்றுலா பயணிகளிடம் சவாரி பிடிப்பதற்காக உடும்பன் கட்டணம் குறைவாக வாங்கியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை.
    • ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் கீரப்பாக்கம் பகுதியில் அன்பரசன் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    முன்பகை காரணமாக கொலை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    கொலை வழக்கில் சுதர்சன், பாலாஜி ஆகிய இருவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×