என் மலர்
அரியலூர்
- அரியலூரில் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கோகோ போட்டி
- போட்டிகளில் 15 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில், குறுவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் ஆக.2 ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், அரியலூர் குறுவட்டத்துக்கான கோகோ போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியினை மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் லெனின் தொடக்கி வைத்தார். இதில் 14,17,19 வயது என 3 பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் 15 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
போட்டிகளுக்கு நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், இளவரசன், செல்வம், தினேஷ்குமார், கலையரசி, ஜோஸ்பின் மேரி உள்ளிட்டோர் பணியாற்றினர்.
- மகளிர் உரிமை ெதாகை விண்ணப்பிக்க 3நாள் சிறப்பு முகாம்
- மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது-
அரியலூர் மாவட்டத்தில் இரண்டு கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்கள் 466 நியாய விலைக் கடைப் பகுதிகளில் நடத்தப்பட்டன. இந்த இரண்டு கட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களில், விடுப்பட்டவர்களுக்கான சிறப்பு விண்ணப்ப பதிவு முகாம்கள் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் அறிவிப்பில், வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத்திட்டம், முதல் அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.
தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்ய வருகிற இன்று(ஆக18), நாளை19, 20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
எனவே, அரியலூர் மாவட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காத தகுதிவாய்ந்த பயனாளிகள் அனைவரும் 3நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களில் தங்களது விண்ணப்பங்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.
- பொய்யான தகவல்களைக் கூறி வாடிக்கையாளரை ஏமாற்றிய எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனம் ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவு
- காப்பீடு கட்டாயம் என்று கூறி அவரிடமிருந்து ரூ.63,911 யை பெற்றுக்கொண்டு காப்பீடு வழங்கியுள்ளது
அரியலூர்
அரியலூர் அருகே பொய்யான தகவல்களைக் கூறி வாடிக்கையாளரை ஏமாற்றிய எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனம் ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
ஆண்டிமடம் அருகேயுள்ள அணிக்கு றிச்சான் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுதாகர் மனைவி ராசாத்தி(வயது33). கடந்த ஆண்டு நம்பர் மாதம் திருச்சியிலுள்ள எல்.ஐ.சி. வீட்டுக் கடன் நிறுவனத்தை அணுகி ரூ.8 லட்சம் வீட்டுக் கடன் கேட்டு விண்ண ப்பித்திருந்தார். அதற்கு அந்த நிறுவனம், கடன் பெற வேண்டும் என்றால் காப்பீடு கட்டாயம் என்று கூறி அவரிடமிருந்து ரூ.63,911 யை பெற்றுக்கொண்டு காப்பீடு வழங்கியுள்ளது.
மேலும் இந்நிறுவனம், ராசாத்திக்கு ரூ.8 லட்சம் கடன் கொடுத்தது போல், அவரது பெயரில் உள்ள வீட்டுப் பத்திரத்தை தங்களது பெயரில் அடமானம் பதிவுக் செய்துக் கொண்டது.
ஆனால் ஒப்பந்தப்படி அந்நிறுவனம், வீட்டுக் கடனை வழங்காமல் இருந்து வந்தது. இது குறித்து ராசாத்தி அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தார். இதனை விசாரித்து வந்த ஆணையத் தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் கொண்ட குழுவினர்,
பொய்யான தகவல்களைக் கூறி ஏமாற்ற நினைத்த எல்.ஐ.சி வீட்டுக் கடன் நிறுவனம், ராசாத்திக்கு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும், பதிவு செய்த அடமானத்தை நிறுவனத்தின் செலவிலேயே ரத்து செய்து அசல் பத்திரத்தைத் திருப்பித்தரவும், பத்திரப் பதிவு கட்டணம் ரூ.10,210 மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.63,911 ஐ வட்டியுடன் ஒரு மாதத்துக்கு தர வேண்டுமெனவும், வழக்கு செலவுக்காக ரூ.10,000 வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தனர்.
- நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
- கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
அரியலூர்
அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் , நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி முதல்வர் டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, சாலை பாதுகாப்பு திட்ட கோட்டப் பொறியாளர் ஸ்ரீகாந்த், காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு, அனைவரும் கட்டாயம் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைப்பிடித்தால் விபத்தை தவிர்க்கலாம். மேலும் மது அருந்திவிட்டு
வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்வதை தவிர்க்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் தலைக்
கவசமும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட்டும் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன்,
சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவிக் கோட்டப் பொறியாளர் சிட்டிபாபு, உதவிப் பொறியாளர் இளையபிரபு ராஜன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பொய்யாத நல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக மிளகாயை யாகத்தில் இட்டனர்
அரியலூர்
அரியலூர் அடுத்த பொய்யாத நல்லூர் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசயை முன்னிட்டு அக்கோயில் சன்னதியிலுள்ள ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி அமாவாசயை முன்னிட்டு நடைபெற்ற மகா சண்டியாகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், தங்கள் கொண்டு வந்துள்ள புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்துப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- அரியலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற மன்ற பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
- சட்ட பிரிவுகளின் பெயர்கள் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு
அரியலூர்,
மத்திய அரசைக் கண்டித்து, அரியலூரில் வழக்குரைஞர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றறவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர்களை மாற்றறம் மற்றும் திருத்தம் கொண்டு வர சட்ட மசோதாவை தாக்கல் செய்தது, தொடர்ந்து ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மேற்கண்ட சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.போராட்டத்துக்கு அரியலூர் வழக்குரைஞர்கள் அச்சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக்குமரன், அரசு வழக்குரைஞர்கள் கதிரவன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செந்துறை குற்றவியல் நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். வழக்குரைஞர் சங்க பொறுப்பாளர்கள் காரல்மார்க்ஸ்,ஜெயபால், செல்வநம்பி, சிராஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
- அடைக்கல அன்னை ஆலயத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது
- ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
அரியலூர்
சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள அடைக்கல அன்னை ஆலாயத்தில் விளக்குப் பூஜை நடைபெற்றது.
வீரமாமுனிவர் கட்டியதும், தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில்
ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று விளக்குப் பூஜை நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான ஆண்டுக்கான விளக்குப் பூஜை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தி விளக்குப் பூஜையை தொடக்கி வைத்தார். விளக்குப் பூஜைக்கு பங்கு தந்தை தங்கசாமி, உதவி பங்கு தந்தை சுவைக்கின் ஆகியோர் சுதந்திர தின சிறப்பு திருப்பலி நடத்தினர். இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அன்னையை வழங்கினர்.
படவிளக்கம்: ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின குத்துவிளக்குப் பூஜை
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலாயத்தில் நடைபெற்ற குத்துவிளக்குப் பூஜையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்திய குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி.
- அரியலூரில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்க கோரிக்கை விடப்பட்டு உள்ளது
- காங்கிரஸ் கூட்டத்தில் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அரியலூர்
அரியலூர் நகரத்திலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்க: அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வகுப்பறைகளை ஆக்கிரமித்து அலுவலகமாக செயல்பட்டு வரும் கல்வி அலுவலகங்களை, பயன்படுத்த படாமல் உள்ள பழைய பயணியர் மாளிகை வளாகத்தில் புதிய கட்டடம் கட்டி அங்கு ஒருங்கிணைந்த கல்வி வளாகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்க குழிகளை சமன்படுத்தி மரங்களை வளர்க்க வேண்டும். ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அரசு சிமென்ட்டை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அக்கட்சியின் நகரத் தலைவர் மா.மு.சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சங்கர் பங்கேற்று மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார். மாவட்டத் துணைத் தலைவர் எஸ் .பழனிச்சாமி , வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகரச் செயலர் ஏ.ஆர்.செந்தில் நன்றி தெரிவித்தார்.
- அரியலூர் இருக்கையூர் கிராம பொதுமக்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க தாசில்தார் அலுவலகம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
- ஆக்கிரமிப்பில் உள்ள பொது இடத்தை மீட்டு தர பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை என்று குற்றச்சாட்டு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இருக்கையூர் கிராமத்தில் 23 ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1975-ம் ஆண்டு இலவச வீட்டு மனை மற்றும் பொது பயன்பாட்டிற்காக 1 ஏக்கர் 63 சென்ட் இடம் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1986-ம் ஆண்டு மேற்கண்ட 23 குடும்பத்தினருக்கும் இலவச தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த 23 பேரில் ஒருவர் தனது இடத்துடன் சேர்த்து பொதுஇடமான 41 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பொது காரியங்களுக்காக இவ்விடத்தை பயன்படுத்த முயலும்போது பிரச்சினை ஏற்பட்டு வருகிறதாம். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த இப்பகுதி மக்கள் இதனை கண்டித்தும், ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத்தரக்கோரியும் தங்களின் ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டையை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாரிடம் ஒப்படைக்க உடையார்பாளையம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அவர்களிடம் உடையார்பாளையம் தாசில்தார் ஆனந்தவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்துவோம் என கூறி கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- வி.கைகாட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் கயர்லாபாத் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விளாங்குடி மேலத்தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 27), தேளூர் ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டை சேர்ந்த அன்பழகன் ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் ஊராட்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
- ஒன்றிய பெருந்தலைவர் கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காடுவெட்டி ரவி சங்கர் தேசிய கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தி,காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
- நகர காங்கிரஸ் சார்பில் இனிப்புகளும் வழங்கப்பட்டது
அரியலூர்,
சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் செட்டிஏரிக்கரையிலுள்ள மகாத்மா காந்தி, காமராஜர் சிலைகளுக்கு நகர காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பின்னர் மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நகர தலைவர் மா.மு.சிவகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.பி. எஸ்.பழனிசாமி, மாவட்ட பொதுச் செயலர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர்கள் செந்தில்வேல் ,பொன் முத்துக்குமரன், வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் சிமென்ட் ஆலையில், ஹெச்.எம்.எஸ் தொழிற்சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அச்சங்க தலைவர் மா.மு.சிவகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். தொழிற்சங்க பொறுப்பாளர்கள் தென்னரசு, நாகராஜன், ஆனந்தன், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






