என் மலர்
அரியலூர்
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த அரியலூர் ராணுவ வீரருக்கு அவரது குடும்பத்தார் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சொகுசு வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே அவரது குடும்பத்தார் சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சமாதியில் மணிமண்டபம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அங்கு சிவச்சந்திரன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய அவரது மனைவி காந்திமதி நிருபர்களிடம் கூறுகையில்,

கலெக்டர் அலுவலகத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள் சிலையை உடனே நிறுவ வேண்டும். அப்போதுதான் அந்த மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் இருந்தார்கள் என்பது குறித்தும் அவர்கள் தாய் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள் என்பது குறித்தும் தெரியவரும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சிலை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
கணவனை இழந்ததால் மிகவும் சிரமப்படுகிறோம். எனது கணவர் இறக்கும் போது நான் கர்ப்பமாக இருந்தேன். தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளேன். எனது மகனை ராணுவ வீரராகவும், மகளை ஐ.ஏ.எஸ். ஆக்குவதுதான் எனது கனவு என்றார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சொகுசு வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே அவரது குடும்பத்தார் சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சமாதியில் மணிமண்டபம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அங்கு சிவச்சந்திரன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய அவரது மனைவி காந்திமதி நிருபர்களிடம் கூறுகையில்,
நாட்டை காக்க ராணுவ வீரர்கள் செய்த தியாகத்தை ஒவ்வொருவருக்கும் அறிய செய்ய வேண்டும். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீரமரணம் அடைந்த எனது கணவர் சிவச்சந்திரனின் சிலை திறக்கப்படும் என்று அறிவித்து ஒரு ஆண்டுகள் ஆகியும், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

கணவனை இழந்ததால் மிகவும் சிரமப்படுகிறோம். எனது கணவர் இறக்கும் போது நான் கர்ப்பமாக இருந்தேன். தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளேன். எனது மகனை ராணுவ வீரராகவும், மகளை ஐ.ஏ.எஸ். ஆக்குவதுதான் எனது கனவு என்றார்.
ஆர்.எஸ். மாத்தூர் பகுதியில் 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறைஅருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகள் தமிழரசி (வயது 18). இவர் தத்தனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற தமிழரசி அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து காசிநாதன் செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதேபோல் பொய்யாத நல்லூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி ரஞ்சிதா (வயது 24) என்பவர் வீட்டில் இருந்து மாயமாகி விட்டார்.
இது குறித்த புகார்களின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரும் கடத்தப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் 131 பயனாளிகளுக்கு ரூ.6¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரத்னா வழங்கினார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வஞ்சினபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 131 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்து 910 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முகாமில், வேளாண்மைத்துறை, கால் நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆகிய துறைகளின் சார்பாக பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
முகாமில், திட்ட இயக்குனர்கள் சுந்தரராஜன் (ஊரக வளர்ச்சி முகமை), ஜெயராமன் (மகளிர் திட்டம்), ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தேன்மொழி சாமிதுரை, ஒன்றிய வார்டு உறுப்பினர் கலா குருசாமி, துணை இயக்குனர் (தோட்டக்கலை) அன்புராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி குமார், மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சாவித்திரி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க மாவட்ட கலெக்டர் ரத்னா அறிவுரை வழங்கியுள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கீழ்கண்டவாறு விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் என்பது சீனா நாட்டில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவ தொடங்கிய ஒரு வைரஸ் நோய் ஆகும். இந்த வைரஸ் நோய்க்கு புளு காய்ச்சல் போன்று காய்ச்சல், இருமல் மூச்சு விடுதலில் சிரமம், போன்ற அறிகுறிகள் காணப்படும். நீங்கள் சீனாவின் வுகான் மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் 15-ந் தேதிக்கு பின் நாடு திரும்பியவராக இருந்தால் நீங்களாகவே முன் வந்து உடல் நல பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
பரிசோதனை மையங்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்திய மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பு எண் 91-11-23978046 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளவும்.
நீங்கள் சீனாவில் இருந்து நாடு திரும்பியவராக இருந்தாலோ அல்லது கொரோனா வைரஸ் தாக்கிய நபருடன் தொடர்பில் இருந்தாலோ நீங்கள் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்த்திடவும், மற்ற நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்த்திடவும் வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் எவரும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல். அடுத்த 14 நாட்களுக்கு தனி அறையில் ஓய்வு எடுக்க வேண்டும். தும்மல் மற்றும் இருமலின் போது வாய் மற்றும் மூக்கினை நன்றாக கைக்குட்டை அல்லது உள்ளங்கையால் மூடிக்கொள்ளவும். இருமல் மற்றும் தும்மல் வந்த பின்பும், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் உள்ள நபர்களிடமிருந்து தனித்து இருக்கவும்.
நீங்கள் சீனாவில் இருந்து நாடு திரும்பியவராக இருந்தால் உங்களுக்கு காய்ச்சல், இருமல், தும்மல் மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்தால் மக்கள் நல்வாழ்வு அமைச்சகத்தினை உடன் தொடர்புகொள்வதுடன், தங்களுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும். காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வெளியிடங்களுக்கு பயணம் செய்ய நேர்ந்தால் அதன் விபரத்தினை தங்கள் கிராமத்தில் உள்ள சுகாதார பணியாளர்களிடம் தெரிவித்து விட்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் இருமல் மற்றும் தும்மல் வந்த பின்பும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களை தொடுவதற்கு முன்பும் தொட்ட பின்பும், சமையல் செய்வதற்கு முன்பும் சமையல் செய்த பின்பும், உணவு உண்பதற்கு முன்பும் உணவு உண்ட பின்பும், கழிவறைகளை உபயோகப்படுத்திய பின்பும், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

விண்வெளி ஆய்வுகள் குறித்த படிப்புகளையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என முன்னாள் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம், விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், மாணவ- மாணவிகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கல்லூரி மாணவ- மாணவிகள் கல்வியை நன்றாக படித்து, தங்களது குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக கல்வி திறன்களை வளர்த்துக்கொண்டு, கல்வி தகுதியின் அடிப்படையில் ஏதேனும் ஒரு துறையினை தேர்வு செய்து, உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
அதேபோல விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் உள்ளன. அதில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் நாட்டின் பங்கீடாக விண்வெளி மையத்தில் சேர்ந்து படித்து எதிர்காலத்தில் நமது நாட்டினை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு முன்வர வேண்டும் என்றார்.
பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விண்வெளியில் நாம் அனுப்பிய தொலைத்தொடர்பு, நிலம் மற்றும் கடல்சார்ந்த ஆராய்ச்சி என பலவற்றை ஆராய 60-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் ஆயுள்காலம் உள்ளது. மண்ணிலிருந்து மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. சந்திராயன் 2 மூலம் நிலவு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ராக்கெட் ஏவுதளம் புதிய தொழில்நுட்பத்துடன் குறைந்த செலவில் அமையவுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவை விட தொழில் நுட்பத்தில் சிறப்பாக அமைய வாய்ப்புள்ளது என்றார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி பெற ஆதார் அட்டையில் உள்ளவாறு இணையதளத்தில் பெயரை மாற்றம் செய்து பயனடையலாம்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கான உதவித்தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது விவசாயிகள் 4-ம் தவணை பெற ஆதார் அட்டையில் உள்ளவாறு இணையதளத்தில் தங்களது பெயர் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இதுவரை மூன்று தவணைகள் பெற்று, 4-ம் தவணை பெறாத விவசாயிகள் உடனடியாக தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தினை அணுகி ஆதார் அட்டையில் உள்ளவாறு தங்களது பெயரை மாற்றம் செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கோப்பையுடன் சொந்த ஊருக்கு வந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ளது சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 3-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம், தென்னமநாடு தனியார் பள்ளி மாணவிகள் அணியும், சோழன்குடிக்காடு அரசு பள்ளி மாணவிகள் அணியும் மோதின. போட்டியின் முடிவில் 44 புள்ளிகள் பெற்று தனியார் பள்ளி மாணவிகள் முதல் இடத்தையும் 38 புள்ளிகள் பெற்று சோழன்குடிக்காடு அரசு பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.
மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஒரே அரசு பள்ளி மாணவிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கோப்பையுடன் சொந்த ஊருக்கு வந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு கிராம மக்கள் திரண்டு சென்று ஆர்.எஸ்.மாத்தூர் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளி மைதானத்தில் கபடி வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி தலைமை தாங்கினார். மணப்பத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியை பேபிகீதா மாணவிகளை பாராட்டி பேசினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவஞானம் அறக்கட்டளை தலைவர் சோழன் குமார் வாண்டையார் வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டி பேசினார். முன்னதாக பள்ளி ஆசிரியர் மணிமுத்து வரவேற்றார். முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமை தாங்கி, மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்லக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. காரில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும்.
சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து காவலன் செயலி குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார், வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர் அருகே எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிடக்கோரி எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர், அகில இந்திய முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிடக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர், வளர்ச்சி அதிகாரி சங்கத்தினர், அதிகாரிகள் சங்கம் சார்பில் 1மணி நேரம் வெளிநடப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க தலைவர் செல்வி தலைமை தாங்கினார். முதல் நிலை அதிகாரிகள் சங்க கார்த்திகேயன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க நந்தகுமார், அகிலஇந்திய முகவர்கள் சங்க ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
இதேபோல் அரியலூர் எல்.ஐ.சி.கிளை அலுவலகம் முன்பு எல்.ஐ.சி.யின் பங்குகளை தனி யாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்தும், ஜி.எஸ்.டி. வரியை நீக்க கோரியும், பாலிசிதாரர்களுக்கு போனஸ் உயர்த்தி கொடுக்க கோரியும், ஆன்லைன் வர்த்தகத்தை கைவிடக்கோரியும் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்க தலைவர் ராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் கிருஷ்ணன் முன்னிலையில் வகித்தார். இதில் அருமைகண்ணு, மணவாளன், நந்தகுமார், ராம்ஜி, சந்திரகுமார், நெடுஞ்செழியன், சுகவனேஸ்வரர், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரிலூர் மாவட்டம் செந்துறை அருகே பஸ் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செந்துறை:
அரிலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவர் குழுமூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் குழுமூர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்தவழியாக வந்த பஸ் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதி அமைச்சருக்கு தெரியாமல் பட்ஜெட் தயாரித்துள்ளனர் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயங்கொண்டம்:
அறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் பிரதமர் சுற்றினாலும் போதிய முதலீடுகள் இங்கு வந்ததாகவும் வேலை வாய்ப்புகள் புதிதாக கொடுத்ததாகவும் இல்லை. இதுவரை 7 துறைகளில் 3 கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு துறையாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் வேதனை குறையவில்லை. படித்த பட்டதாரிகளுக்கு வேலை இன்மை என்பது படமெடுத்து ஆடுகிறது. எந்த பிரச்சனைக்கும் அடிப்படையில் தீர்வு கொடுக்காமல் இருக்கிறார்கள். புதிய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பிரதமர் ஒரு கூட்டம் கூட்டினார். அதற்கு நிதி அமைச்சர் இல்லாமல் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. எனவே நிதிஅமைச்சருக்கு தெரியாத ஒரு பட்ஜெட் தயாராகியிருக்கிறது. படித்தது அவர் பங்கு. எழுதியது தயாரித்தது யாருடைய பங்கு என்பது பின்னால் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 5 கடைகளில் இருந்து ரூ.2 ஆயிரத்து 800அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் ரோட்டில் அமைந்துள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து மீன், இறைச்சி கழிவுகளை மழைநீர் செல்லும் கால்வாய் மற்றும் சாலையில் கொட்டுவது போன்ற செயல்களால் சுகாதாரகேடு ஏற்படுகிறது என கிடைத்த தகவலின் பேரில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அறச்செல்வி தலைமையில், சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களிடம் மீன், இறைச்சி கழிவுகளை மூடியிட்ட பேரல் தொட்டியில் வைத்து நகராட்சி வாகனம் வரும் நேரத்தில் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதற்காக அவர்களுக்கு நகராட்சி மூலம் நோட்டீசும் வழங்கப்பட்டது. பின்னர் கடை மற்றும் வியாபாரிகளிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வாழை இலை, தேக்க இலை, துணி பைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 5 கடைகளில் இருந்து ரூ.2 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.