search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியபோது எடுத்த படம்.
    X
    முன்னாள் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியபோது எடுத்த படம்.

    விண்வெளி ஆய்வுகள் குறித்த படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் - விஞ்ஞானி மயில்சாமி பேச்சு

    விண்வெளி ஆய்வுகள் குறித்த படிப்புகளையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என முன்னாள் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம், விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், மாணவ- மாணவிகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கல்லூரி மாணவ- மாணவிகள் கல்வியை நன்றாக படித்து, தங்களது குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக கல்வி திறன்களை வளர்த்துக்கொண்டு, கல்வி தகுதியின் அடிப்படையில் ஏதேனும் ஒரு துறையினை தேர்வு செய்து, உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

    அதேபோல விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் உள்ளன. அதில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் நாட்டின் பங்கீடாக விண்வெளி மையத்தில் சேர்ந்து படித்து எதிர்காலத்தில் நமது நாட்டினை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு முன்வர வேண்டும் என்றார்.

    பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விண்வெளியில் நாம் அனுப்பிய தொலைத்தொடர்பு, நிலம் மற்றும் கடல்சார்ந்த ஆராய்ச்சி என பலவற்றை ஆராய 60-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் ஆயுள்காலம் உள்ளது. மண்ணிலிருந்து மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. சந்திராயன் 2 மூலம் நிலவு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ராக்கெட் ஏவுதளம் புதிய தொழில்நுட்பத்துடன் குறைந்த செலவில் அமையவுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவை விட தொழில் நுட்பத்தில் சிறப்பாக அமைய வாய்ப்புள்ளது என்றார்.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×