என் மலர்
செய்திகள்

கி.வீரமணி
நிதி அமைச்சருக்கு தெரியாமல் பட்ஜெட் தயாரித்துள்ளனர்- கி.வீரமணி குற்றச்சாட்டு
நிதி அமைச்சருக்கு தெரியாமல் பட்ஜெட் தயாரித்துள்ளனர் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயங்கொண்டம்:
அறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் பிரதமர் சுற்றினாலும் போதிய முதலீடுகள் இங்கு வந்ததாகவும் வேலை வாய்ப்புகள் புதிதாக கொடுத்ததாகவும் இல்லை. இதுவரை 7 துறைகளில் 3 கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு துறையாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் வேதனை குறையவில்லை. படித்த பட்டதாரிகளுக்கு வேலை இன்மை என்பது படமெடுத்து ஆடுகிறது. எந்த பிரச்சனைக்கும் அடிப்படையில் தீர்வு கொடுக்காமல் இருக்கிறார்கள். புதிய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பிரதமர் ஒரு கூட்டம் கூட்டினார். அதற்கு நிதி அமைச்சர் இல்லாமல் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. எனவே நிதிஅமைச்சருக்கு தெரியாத ஒரு பட்ஜெட் தயாராகியிருக்கிறது. படித்தது அவர் பங்கு. எழுதியது தயாரித்தது யாருடைய பங்கு என்பது பின்னால் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






