search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு"

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • சாலைகளை சீரமைப்பதுடன் உரிய எச்சரிக்கை விளம்பரப்பலகை வைக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் முக்கிய சந்திப்பு சாலைகளில் உரிய பாதுகாப்பு எச்சரிக்கை விளம்பரங்களை வைத்து கண்காணித்திட வேண்டும். அதேபோல் காவல்துறை, வட்டாரப் போக்கு வரத்துத்துறை, நெடுஞ்சா லைத்துறை ஒருங்கிணைந்து தேசிய சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து விபத்துகளை தடுக்கும் வகையில் சாலைகளை சீரமைப்பதுடன் உரிய எச்சரிக்கை விளம்ப ரப்பலகை வைக்க வேண்டும்.

    மக்கள் அதிகம் பயன்ப டுத்தும் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி தேவையான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோல் கிராம சாலைகளுக்கும், தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் உரிய எச்சரிக்கை பலகை வைத்திட வேண்டும். மாலை நேரங்களில் வட்டாரப் போக்கு வரத்துத்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து கால ஆய்வு செய்து அதிக வேகத்தில் வரும் வாகன ஓட்டிகளை எச்சரிப்பதுடன் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு எவ்வித விபத்தும் ஏற்படாத வகையில் பயணம் செய்ய போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) மாரிச்செல்வி, வருவாய் கோட்டாட்சியர் கோபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பிரேம் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.
    • ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கக் கூடாது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் போக்கு–வரத்து காவல்துறையின் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பென்னாகரம் அரசு மருத்துவமனை எதிரே அம்பேத்கர் சிலை பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் தலைமை வகித்து, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.

    ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கக் கூடாது. இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது, சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கக் கூடாது.

    கனரக வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது, உரிமம் இல்லாத வாகனத்தை இயக்கக் கூடாது என பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள கட்டண விவரம் குறித்து வாகன ஓட்டிகள் இடையே எடுத்துரைத்தார்.

    இதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மாதப்பன், முருகன், காவலர் மூர்த்தி மற்றும் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்துபேரணியைதுவக்கிவைத்தார். உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் உடுமலை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கம் ,உடுமலை இருசக்கரம் பழுதுபார்க்கும் உரிமையாளர்கள் சங்கம் ,உடுமலை புதிய இருசக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேரணி உடுமலை தளி ரோடு வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட சென்று பைபாஸ் ரோடு, ராஜேந்திரா சாலை, ராமசாமி நகர் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    • பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஊட்டி,

    தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்தநிலையில் ஊட்டி ஊரக போலீஸ் நிலையம் சார்பில் முத்தொரை பஜாரில் இருந்து முத்தோரை பாலாடா வரை போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஊட்டி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி விஜயலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மணமேல்குடி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    மணமேல்குடி:

    மணமேல்குடி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மணமேல்குடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கடை வீதி வழியாக மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் முடி வடைந்தது.

    ஊர்வலத்தில் மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது. செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டக் கூடாது. ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பன உள்பட விழிப்புணர்வு வாசகங்கள்அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் சாலை பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி அறிவுறுத்தலுக்கு இணங்க ஜெயங்கொண்டம் போலீசார் சார்பில் ஜெயங்கொண்டம் 4 ரோடு, கடைவீதி, விருத்தாசலம் ரோடு, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் சாலை பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

    இதற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிக்கக் கூடாது. ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. பஸ்சில் படியில் நின்று பயணம் செய்யக்கூடாது. சரக்கு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது. வேகத்தை குறைத்து, சாலை விதிகளை மதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் போலீசார் பலர் கலந்து கொண்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.  
    ×