search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்; கலெக்டர்
    X

    ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேசினார். அருகில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளனர்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்; கலெக்டர்

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • சாலைகளை சீரமைப்பதுடன் உரிய எச்சரிக்கை விளம்பரப்பலகை வைக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் முக்கிய சந்திப்பு சாலைகளில் உரிய பாதுகாப்பு எச்சரிக்கை விளம்பரங்களை வைத்து கண்காணித்திட வேண்டும். அதேபோல் காவல்துறை, வட்டாரப் போக்கு வரத்துத்துறை, நெடுஞ்சா லைத்துறை ஒருங்கிணைந்து தேசிய சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து விபத்துகளை தடுக்கும் வகையில் சாலைகளை சீரமைப்பதுடன் உரிய எச்சரிக்கை விளம்ப ரப்பலகை வைக்க வேண்டும்.

    மக்கள் அதிகம் பயன்ப டுத்தும் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி தேவையான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோல் கிராம சாலைகளுக்கும், தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் உரிய எச்சரிக்கை பலகை வைத்திட வேண்டும். மாலை நேரங்களில் வட்டாரப் போக்கு வரத்துத்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து கால ஆய்வு செய்து அதிக வேகத்தில் வரும் வாகன ஓட்டிகளை எச்சரிப்பதுடன் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு எவ்வித விபத்தும் ஏற்படாத வகையில் பயணம் செய்ய போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) மாரிச்செல்வி, வருவாய் கோட்டாட்சியர் கோபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பிரேம் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×