என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூரில் தேசிய கோ-கோ போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
    • விளையாட்டுத் திறன்அடிப்படையில் 12 மாணவர்கள் தமிழக அணிக்காக தேர்தெடுக்கப்பட்டனர்

    அரியலூர்,

    இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நவம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடத்தப்படவுள்ள 17 வயது பிரிவு மாணவர்களுக்கான தேசிய கோ-கோ போட்டியின் தமிழக அணிக்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றறது.அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் சென்னை, வேலூர், கோயம்புத்தூர், கடலூர் என 8 மண்டலங்களில் இருந்து 38 மாவட்டங்களைச் சேர்ந்த 72 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் உடன் திறன், விளையாட்டுத் திறன், முழு விளையாட்டு அடிப்படையில் 12 மாணவர்கள் தமிழக அணிக்காக தேர்தெடுக்கப்பட்டனர்.உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் தலைமையில் , உறுப்பினர்களாக அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி, அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் திருமூர்த்தி, பொய்யாதநல்லூர் ரவி, கௌரவப்பாளையம் செல்வகுமார் ஆகியோர் தேர்வுக் குழு உறுப்பினர்களாக செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் செய்திருந்தார். 

    • அரியலூர் மின் ஊழியர் வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை நடந்துள்ளது
    • அரியலூர் நகர காவல் துறையினர் வழககு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல். உதவி மின் பொறியாளரான இவர், விபத்தில் காயமடைந்து திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி ரேவதி(வயது 41) வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளேச் சென்று பார்த்த போது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் அரியலூர் நகர காவல் துறையினர் வழககு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜெயங்கொண்டம் கோ ஆப்டெக்ஸ்-சில் தீபாவளி விற்பனை தொடங்கியது
    • மாவட்ட கலெக்டர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    ஜெயங்கொண்டத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டமாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்,

     இது குறித்து கலெக்டர் கூறும் போது, நிகழாண்டு ரூ.55 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு, புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, கைலி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் வந்துள்ளன.

    • அரியலூரில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது
    • 38 மாவட்ட ங்களில் இருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நவம்பர் மாதம் டெல்லியில் நடத்தப்படவுள்ள 14 வயது பிரிவு மாணவர்களுக்கான தேசிய கைப்பந்து போட்டிக்கு தமிழக அணிக்கானத் தேர்வு அரியலூரில் நடைபெற்றது.அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வீரர் தேர்வு க்கான போட்டியில் 38 மாவட்ட ங்களில் இருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 16 மாணவர்கள் தேர்ந்தெடுக்கபட்டு தமிழக அணிக்காக விளையா டவுள்ளனர்.முன்னதாக போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பொன்பரப்பி திருமூர்த்தி, விளாங்குடி வீரபாண்டி யன்,கல்லாத்தூர் விஜய்ஆனந்த், ஆண்டிமடம் நிர்மலா மேரி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலை ப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் த. ரவி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், கீழப்பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி, அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் ,சேகர் ,இளங்கோவன், குமார், ராஜசேகர், தினேஷ்குமார், இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே 2 பைக் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் காயமடைந்தனர்
    • ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

     ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் இலையூர் கிராமத்திற்கு வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து இலையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பைக் மோதியது. இதில் சுரேஷ் மற்றும் எதிரே பைக் ஓட்டி வந்த குவாகம் வெட்டித்தெருவை சேர்ந்த சூர்யா (18) என்பவர் மற்றும் அவரது பைக்கில் உட்கார்ந்து வந்த அதே ஊரை சேர்ந்த சிந்தாமணி (22), அவரது ஒரு வயது மகள் அட்சயா. மேலும் அதே ஊரை சேர்ந்த ஐயம்பெருமாள் மனைவி அசோதை (52) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் 5 பேரும் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • குடிநீர் வழங்க கோரி கல்லாத்தூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    அரியலூர்,

    ஜெயங்கொண்டம் -ருத்தாசலம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் நடைபெற்ற பணியின் போது, பிராதன சாலையில், துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புக் குழாய்கள் இதுவரை பொருத்தப்படவில்லை. இதனால் குடிநீருக்காக ஒரு மாதமாக அவதிப்பட்டு வந்த கல்லாத்தூர் மக்கள், அப்பகுதியில் கடந்த 24-ந்தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கடுகூரில்வெறிநோய் தடுப்பூசி முகாம்
    • கோட்ட உதவி இயக்குநர் சொக்கலிங்கம் தொடக்கி வைத்தார்

    அரியலூர்,  

    உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், கடுகூர் கால்நடை மருந்தக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

    முகாமை கால்நடை பராமரிப்புத் துறை கோட்ட உதவி இயக்குநர் சொக்கலிங்கம் தொடக்கி வைத்தார். கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், ஓட்டகோயில் கால்நடை உதவி மருத்துவர் வேல்முருகன், அரியலூர் மாவட்ட கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி பிரிவு கால்நடை உதவி மருத்துவர் விஜயராஜ், பயிற்சி கால்நடை மருத்துவர் ஜெயபாரதி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாரிமுத்து ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்ட 53 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர். முகாமில் கலந்து கொண்ட செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன.

    • ஜெயங்கொண்டம் அருகேஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர்
    • 18 பேரைய கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்,  

    அரியலூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் சபரிராஜனை எவ்வித காரணமும் இன்றி போலீசார் கைது செய்ததுடன், பொய்யான வழக்குகளை பதிவு செய்து அதில் இந்து முன்னணி திருச்சி கோட்ட பொறுப்பாளர் ராஜசேகர் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதை கண்டித்தும், உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு அருகே இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திருச்சி கோட்ட பொறுப்பாளர் குணா, மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் ஐயம்பெருமாள், மாவட்ட செயலாளர் திருமூர்த்தி உள்ளிட்ட இந்து முன்னணியை சேர்ந்த 18 பேரைய கைது செய்தனர்.

    • திருமானூர் அருகேகல்வி திட்ட விழிப்புணர்வு முகாம்
    • மகளிர் சுய உதவிக் குழுவி னர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரியலூர், 

    மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள தூத்தூர் மற்றும் குலமாணிக்க த்திலு ள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளில், மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம் மற்றும் அரியலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் இணை ந்து நடத்தும் உறுப்பினர் கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இம்முகாம்களுக்கு கூட்டு றவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் தீபாச ங்கரி தலைமை வகித்து, வங்கியில் வழங்கப்படும் கல்வி கடன், வங்கியின் சேவைகள், மகளிர் சுய உதவிக் குழுக் கடன், பயிர்க் கடன், கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக எடுத்து ரைத்து, அனைவரும் மேற்க ண்ட கடன் பெற்று பயன்பெ றுமாறு கேட்டுக் கொண்டார்.

    சரக துணைப்பதிவாளர் த.அறப்பளி. விரிவுரை யாளர் அழகுபாண்டியன் மற்றும் கூட்டுறவு சார்பதி வாளர்கள், சங்க செயலா ளர்கள் உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுவி னர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • செந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா
    • கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார்.

    செந்துறை, 

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் 5 வகையான கலவை சாதங்களை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து அமைச்சர் பேசும் போது,

    கருணாநிதி பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    அந்த வகையில் தற்போ தைய முதலமைச்சர் பெண் கள் கல்லூரியில் படிக்கும் பொழுது மாதம் 1000 வழங்கப்படும் என்ற சிற ப்பானத் திட்டத்தை செய ல்படுத்தி உள்ளார். பெண்க ளின் முன்னேற்றமே குடும்ப த்தின் முன்னேற்றம். குடும்ப த்தின் முன்னேற்றம் சமுதா யம் மற்றும் நாட்டின் முன் னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு இதுபோன்றத் திட்டங்கள் செயல்படுத்த ப்படுவதுடன், தமிழகத்தில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்ப ட்டு வருகிறது.

    இதன் பயனாக அனைத்துத்தரப்பு பெண்களும் மிகுந்த பயன்பெறுவதுடன் தினசரி 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவியாக உள்ளது.

    இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டத்தினை செயல்படுத்தியது நம்மு டைய முதலமைச்சர்தான் அதனைப் பின்பற்றியே தற்போது பிற மாநிலங்கள் இதுபோன்ற சிறப்புத்தி ட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

    மேலும், இச்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி சத்தான உணவுகளை சாப்பிட்டு நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதுடன் கல்வியே அழியாத செல்வம் என்பதை உணர்ந்து தங்களது குழந்தைகளை நல்ல முறையில் கல்வி கற்க வைத்து, சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    • அரியலூரில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது
    • அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அழைப்பு

    அரியலூர்,

    பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரியலூர் மாவட்டம் தோட்டக்கலை மற்றும்ம லைப்பயிர்கள் துறை மூலம் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்வி வசாயிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்தில் காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பாரம்பரிய ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, மண்வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகள் குறித்து மாவட்ட அளவிலான நிபுணர் குழு மூலம் விவசாயிகள் தேர்தெடுக்கப்படுகின்றனர். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் செப்.30-க்குள் தோட்டக்கலைதுறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கடன் தொகை கட்டி முடிந்தவருக்கு, மீண்டும் பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி
    • அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள இரவாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 50). கடந்த 2020-ம் ஆண்டு இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் வங்கி கிளையை அணுகி ரூ.53 ஆயிரத்திற்கு வாகன கடன் வாங்கினார். வங்கி கூறியப்படி இதை வட்டியுடன் மாதம் ரூ.2,800 வீதம் 24 தவணைகளாக அவர் திரும்ப செலுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த 2022-ம் வருடம் ஆகஸ்ட் 20-ந்தேதி, ரத்தினசாமிக்கு வங்கி தரப்பில் அனுப்பட்ட அறிவிப்பில் மொத்தம் 31 தவணைகள் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தொகை 19 ஆயிரத்து 838 ரூபாயை, உடனடியாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அதே வருடம் அக்டோபர் மாதம் 10-ந்தேதி அன்று வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட மற்றொரு அறிவிப்பில் ரூ.20 ஆயிரத்து 708 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.அனைத்து தவணைகளையும் செலுத்தி விட்ட நிலையில் இவ்வாறு அறிவிப்புகள் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரத்தினசாமி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த மே மாதம் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்து வந்த ஆணையத் தலைவர் தமிழச்செல்வி மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் கொண்ட அமர்வு புதன்கிழமை தீர்ப்பளித்தது.அதில் தனியார் வங்கி, ரத்தினசாமிக்கு 30 நாள்களுக்குள் தடையில்லாச் சான்று வழங்க வேண்டும் என்றும், சட்டவிரோத வர்த்தக நடைமுறையைக் கடைப்பிடித்தற்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரமும், வழக்குச்செலவாக ரூ.5 ஆயிரமும் ரத்தினசாமிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    ×