என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டுறவுத் துறை சார்பில் உறுப்பினர் கல்வி திட்ட விழிப்புணர்வு முகாம்
- திருமானூர் அருகேகல்வி திட்ட விழிப்புணர்வு முகாம்
- மகளிர் சுய உதவிக் குழுவி னர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர்,
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள தூத்தூர் மற்றும் குலமாணிக்க த்திலு ள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளில், மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம் மற்றும் அரியலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் இணை ந்து நடத்தும் உறுப்பினர் கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாம்களுக்கு கூட்டு றவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் தீபாச ங்கரி தலைமை வகித்து, வங்கியில் வழங்கப்படும் கல்வி கடன், வங்கியின் சேவைகள், மகளிர் சுய உதவிக் குழுக் கடன், பயிர்க் கடன், கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக எடுத்து ரைத்து, அனைவரும் மேற்க ண்ட கடன் பெற்று பயன்பெ றுமாறு கேட்டுக் கொண்டார்.
சரக துணைப்பதிவாளர் த.அறப்பளி. விரிவுரை யாளர் அழகுபாண்டியன் மற்றும் கூட்டுறவு சார்பதி வாளர்கள், சங்க செயலா ளர்கள் உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுவி னர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






