என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்கள் திடீர் பணி நீக்கம்
    X

    தூய்மை பணியாளர்கள் திடீர் பணி நீக்கம்

    • ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்
    • மீண்டும் பணி வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தூய்மை பணி மேற்கொள்ள தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் உள்ளது. இந்நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட, 120 தூய்மை பணியாளர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணி மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் அந்நிறுவனம் திடீர் என்று 30 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்து அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் அளிக்கவில்லை. எனவே இதனை கண்டித்தும், மீண்டும் தூய்மை பணியாளர்களுக்கு பணி வழங்க கோரியும் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் குழு தலைவி சிலம்பு செல்வி கூறும்போது, எந்தவித முன்னறிவிப்பும் இன்று நேற்றிரவு ஆண், பெண் என 30 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்து உள்ளனர். ஏற்கனவேதூய்மை பணியாளர்களுக்கு 61 மாத அரியர் நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது. எனவே மீண்டும் பணி வழங்க கோரியும், 61 மாத அரியர் நிலுவை தொகை வழங்க கோரியும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×