என் மலர்
அரியலூர்
- அரியலூரில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
- கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அழைப்ப விடுத்துள்ளார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் "யுனிவர்சல் சோம்ப்போ ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்" என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறப்பு பருவத்தில், நெல், பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலூர், நாகமங்கலம், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூர், ஆர்.எஸ்.மாத்தூர் ஆகிய பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கும் பயிர் காப்பீடு செய்துகொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே பருத்தி பயிருக்கு அக்.31 ஆம் தேதி வரையிலும், நெல் மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு நவ.15 ஆம் தேதி வரையிலும், உளுந்து பயிருக்கு நவ.30 ஆம் தேதி வரையிலும், நிலக்கடலை பயிருக்கு பிப்.15 ஆம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
- அரியலூரில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்
- ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி ஆணை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன
அரியலூர்,
அரியலூர் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் திருச்சி கோட்டம் சார்பில் அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்தில், ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி பென்ஷன் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதிதாக பணியில் சேர்ந்திடும் ஊழியர்களுக்கு 2-ம்கட்ட டி.ஆர்.சி.ஏ. வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த ஜி.டி.எஸ். ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் கோட்டத் தலைவர் என்.கோபாலகி ருஷ்ணன் தலைமை வகி த்தார் செயல் தலைவர் வி.ஜெயக்குமார், கோட்டச் செயலர் கே.மருத முத்து, பொருளாளர் ஏ.பரமசிவம் மற்றும் சங்கத்தை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.
- ஜெயங்கொண்டம் அருகே செல்போன் டவர்களில் ரூ.1 லட்சம் கருவிகள் திருட்டு
- ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் அடுத்து உள்ள சோழமாதேவி கிராமத்தில் தனியார் செல்போன் டவர் உள்ளது. இதில்திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த அலெக்சாண்டர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இதேபோல கரடிகுளத்தில் மற்றொரு செல்போன் டவர் உள்ளது. இதில் கும்பகோணம் தாலுகா தேவனாம்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் டவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்த 2 டவர்களிலும் முக்கிய கருவியான ரிமோட் ரேடியல் யூனிட்டை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சம். இதுகுறித்து அலெக்சாண்டர், பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியலூர் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
- கூட்டுறவு சங்கங்களில் வேளாண் கருவிகள் வாங்க வலியுறுத்தும் நடவடிக்கை யைக் கண்டித்து, போராட்டம்
அரியலூர்,
கூட்டுறவு சங்கங்களில் வேளாண் கருவிகள் வாங்க வலியுறுத்தும் நடவடிக்கை யைக் கண்டித்து, அரியலூர் மாவட்டத்தில் அச்சங்கப் பணியாளர்கள் விடுப்பெ டுத்து போராட்டத்தை தொடங்கினர்.அனைத்து கூட்டுறவு சங்கங்களும் ரூ.10 லட்ச த்துக்கு குறையாமல் வேளா ண் கருவிகள் வாங்க வேண் டும் என்று தமிழக அரசு அறிவிப்பு சங்கங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படும்,நலிவடைந்த சங்கங்கள் இழுத்து மூடப்படும் நிலை ஏற்படும். இந்த நடவடி க்கையை கைவிட வேண்டும். இது ஏற்கப்படாவிட்டால் அனைத்து சங்கங்களிலும் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள கருவி களை இணைப் பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு,
சங்க பணியாளர்கள் அனைவரும் தொடர் விடு ப்பு எடுத்து போராட்டம் நடத்துவோம் என்று தமி ழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர்அ றிவித்திருந்தனர்.அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 64 கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் 400 பணியாளர்கள் விடுப்பெடுத்து போரா ட்டத்தை தொடங்கினர்.அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டிருந்த பணி யாள ர்கள் கோரிக்கைகளை வலிறுத்தி பேசினர்.பின்னர் அவர்கள் அங்கி ருந்து ஊர்வலமாக சென்று, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதி வாளர் தீபாசங்கரிடம் தங்க ளது கோரிக்கை மனு மற்றும் அலுவலக சாவி களை ஒப்படைத்து விட்டுச் சென்றனர்.போராட்டத்துக்கு அரியலூர் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க பணியாளர்க ளின் போராட்டத்தினால் விவசாய மற்றும் நகைக் கடன் வழங்கும் பணி, உரம், பூச்சி மருந்து விநியோகம் மற்றும் அதன் சார்பு பணிகள் அனைத்து பாதிக்க ப்பட்டன.
- குறிச்சி கிராம மக்கள் அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் பொது மக்கள் மனு
- அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மனு அளித்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே குறிச்சி கிராம மக்கள், அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில், சோழாமதேவி ஊராட்சிக்கு உட்பட்ட குறிச்சி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு கட்டி கொடுத்த தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது ஒரு வீட்டில் மூன்று, நான்கு குடும்பமாக இருப்பதால், இடநெருக்கடியில் தவித்து வருகிறோம்.மேலும் தற்போது தொகுப்பு வீடுகள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்கக் கூட போதுமான நிதி எங்களிடம் இல்லை. எனவே கலெக்டர் எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். மேலும் எங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
- அரியலூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- விவசாயிகள் மீது காரை ஏற்றிய, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பினர்
அரியலூர்,
அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில், உத்தரபிரதேசம் மாநிலம் லக்கீம்பூர்கெரி என்ற இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய உள்துறை இணை அமைச்சரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத போக்கினை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலர் தண்ட பாணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலர் துரைசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் மணிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கருப்பு கொடிகளுடன் கலந்து கொண்டனர்.
- அரியலூர் பகுதியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொ ண்டம், தா.பழுர், ஆண்டி மடம் ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களில் உள்ள 201 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.வாரணவாசி ஊராட்சி யில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.
இலந்தைகூடம் ஊரா ட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ. சின்னப்பா கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.அரியலூர் ஒன்றியம் தாமரைக்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.
எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் கிராமச பைக்கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் சிவா(எ)பரமசிவம் தலைமையிலும் ஒட்டக்கோ வில் ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக்கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் செங்கமலை தலைமை யிலும், வாலாஜா நகரம் ஊராட்சி யில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் அபிநயா இளையராஜா தலைமையிலும் நடைபெற்றது.ஆங்காங்கே நடைபெற்ற கிராமசபைக்கூட்டங்களில் அரசுத்துறை அதிகாரிகள் ஊராட்சிமன்ற துணை தலைவர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம சுயஉதவிக்குழுக்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டனர்
- அரியலூர் காதி கிராப்ட்டில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது
- தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தொடக்கி வைத்தார்
அரியலூர்,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரியலூர் கதர் மற்றும் கிராம பொருள்கள் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தொடக்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு அரியலூரில் கதர் மற்றும் கிராம பொருள்கள் ரூ.33.59 லட்சத்துக்கு விற்பனையாகின. நிகழாண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.55 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முன்னதாக அவர் அங்குள்ள மகாத்மாகாந்தி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து கு.சின்னப்பா எம்.எல்.ஏ., காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் விற்பனையாளர்கள் நாகராஜன், பூதபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வட மாநில தொழிலாளகளிடம் பணம் பறித்த 2 பேர்
- அரசு மருத்துவமனையில் வட மாநில தொழிலாளகளிடம் பணம் பறித்த 2 பேர் கைது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் வட மாநில தொழிலாளர்கள் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சார்ந்த வசீகரன் (21), மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்த முகமது யாசிக் (20), ஆகியோர் அங்கு பணியில் ஈடுபட்டு வரும் 2 வட மாநில தொழிலாளர்களிடம் பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர் லட்சுமண சாமி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வசீகரன் மற்றும் முகமது ஆசிக் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- அரியலூரில் 612 பயனாளிகளுக்கு ரூ.46.14 கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்டது
- மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் வசதியாக்கல் முகாம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், தாட்கோ திட்டம் , மகளிர் திட்டம் மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை அரசு அலுவலகங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டு வங்கி கிளையில் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை வங்கி மேலாளர்களின் மூலம் பரிசீலினைச் செய்யப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு கடன் ஆணையும், பட்டுவாடா ஆணையும் வழங்கப்பட்டது. இம்முகாமில் பயிர்கடன், தனிநபர் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், கால்நடை பராமரிப்பு கடன், கல்விக்கடன், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உள்ளிட்ட 612 பயனாளிகளுக்கு ரூ.46.14 கோடி கடன் உதவிக்கான ஆணையினை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். மேலும், 2023-24ஆம் ஆண்டில் மாவட்ட தொழில் மையம், அரியலூர் மூலம், செயல்படுத்தப்படும் திட்டங்களின்கீழ் சிறப்பாக கடனுதவி வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி போன்ற வங்கி கிளை மேலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் லட்சுமி, முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் லாயனல் பேனிடிக்ட், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி தாசில்தாரிடம் கம்யூனிஸ்டு சார்பில் மனு அளிக்கப்பட்டது
- மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சீனிவாசன் நினைவு தினத்தையொட்டி ஜெயங்கொண்டம் பகுதி பழங்குடி மற்றும் தலித் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் தாசில்தார் துரையை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.பத்மாவதி, எஸ்.மீனா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் எ.ராதா, கே.எம்.பசுபதி மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்
- மீண்டும் பணி வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தூய்மை பணி மேற்கொள்ள தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் உள்ளது. இந்நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட, 120 தூய்மை பணியாளர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணி மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் அந்நிறுவனம் திடீர் என்று 30 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்து அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் அளிக்கவில்லை. எனவே இதனை கண்டித்தும், மீண்டும் தூய்மை பணியாளர்களுக்கு பணி வழங்க கோரியும் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் குழு தலைவி சிலம்பு செல்வி கூறும்போது, எந்தவித முன்னறிவிப்பும் இன்று நேற்றிரவு ஆண், பெண் என 30 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்து உள்ளனர். ஏற்கனவேதூய்மை பணியாளர்களுக்கு 61 மாத அரியர் நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது. எனவே மீண்டும் பணி வழங்க கோரியும், 61 மாத அரியர் நிலுவை தொகை வழங்க கோரியும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தார்.






