என் மலர்tooltip icon

    அரியலூர்

    • தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரியலூர் பாமக வலியுறுத்தி உள்ளது
    • அரியலூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

    அரியலூர்,

    அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் நடைபெற்றது.மாநில வன்னியர்சங்க செயலாளர் வைத்தி, மாவட்ட தலைவர் அசோகன், மாவட்ட வன்னியர்சங்க செயலாளர் தர்மபிரகாஷ், பெரம்பலூர்மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராமதாஸ், மாவட்ட பொருளாளர் வெற்றிச்செல்வி, மகளிர் அணி துணை செயலாளர் செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை, மாணவர் அணி சங்கசெயலாளர் ஆளவந்தான், மாநிலபொதுக்குழு உறுப்பினர் ரவிசங்கர், ஒன்றிய செயலாளர் செம்மலை, நகரசெயலாளர் விஜய் உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரியலூர் அரசு மரு த்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் மற்றும் போதிய உயர்சிகிச்சை உபகரணங்கள் மற்றும் உபகரண கையாளுனர்களை உடனடியாக நியமனம் செய்திட வேண்டும். மாவட்டத்தில் இயங்கிவரும் சிமெண்ட் ஆலைக்கு அதிக பாரங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமப்புற பகுதிகளில் உள்ள மதுபான  கடைகளை உடனடியாக மூட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை அரியலூர் மாவட்டத்தில் முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களவைத் தேர்தலுக்காக பாமக மற்றும் அதன் துணை அமைப்புகள் கிராமம் கிராமமாகச் சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுவது.வாக்குச் சாவடி முகவர்கள், கிளை நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது மற்றும்சுண்ணாம்பு சுரங்கள் முறைகேடாக அதிக ஆழத்திற்கு வெட்ட படுவதைக் கண்டித்தும், சுரங்கங்களில் வெடி வைத்து தகர்த்து சுண்ணாம்பு பாறைகள் வெட்டப்படுவதைக் கண்டித்து, பாமக-வன்னியர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
    • மது போதையில் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதால் நடவடிக்கை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விரல் ரேகை பதிவு காவல் உதவி ஆய்வாளராக சுந்தர்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் உள்ள பாரில் மது அருந்தியு ள்ளார்.பின்னர் மது போதையில் அங்கு பணியாற்றும் ஊழி யர்ளுடன் தகராறில் ஈடு பட்டுளளார்.இச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் வந்திதா பாண்டே வுக்கு புகார் வந்துள்ளது.புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அவர், காவல் உதவி ஆய்வா ளர் சுந்தர்ராஜை பணியிடை நீக்கம் செய்ய திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவனிடம் பரிந்துரை செய்தார்.இதையடுத்து சுந்தர்ரா ஜை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி பகலவன் உத்தரவிட்டார்.மது போதையில் விரல் ரேகை பதிவு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தனியார் விடுதியில் உள்ள பாரில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • ஜெயங்கொண்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
    • அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல்

     ஜெய ங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் அடுத்து நாகல் குழி குறிசாலையில் தொடர்ந்து பணம் வைத்து பலர் சீட்டு விளையாடுவதாக ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் நடேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த வீரமணி, ராஜா, சுரேஷ் ,மன்னார், என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.3500 பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரியலூரில் இருந்து விக்கிரமங்கலத்துக்கு கூடுதல் பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அரியலூர் போக்குவரத்து கழகத்தில் பேசி பேருந்து வருவதற்கு ஏற்பாடு செய்தனர்

    அரியலூர்,

    அரியலூரில் இருந்து விக்கிரமங்கலத்துக்கு கூடுதல் பேருந்துகள் வசதிக் கேட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விக்கரமங்கலம், முத்துவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரியலூரிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரி முடிந்து ஊருக்குச் செல்வதற்காக அரியலூர் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக 2 மணி நேரமாக காத்திருந்தும், பேருந்துகள் வராததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அரியலூர் போக்குவரத்து கழகத்தில் பேசி பேருந்து வருவதற்கு ஏற்பாடு செய்தனர். 

    • அரியலூரில் ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது
    • 114 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 123 பேர் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், ஊர்க்காவல் படை வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுப்படி, மாவட்ட கூடுதல் எஸ்.பி. அந்தோணி ஆரி, டி.எஸ்.பி. வெங்கடேசன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி  ஜீவானந்தம் ஆகியோர் மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வில் 114 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 123 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் பங்கேற்றவர்களின் எடை, உயரம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் சுய விவரங்கள் போன்றவை சரிபார்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.ஊர்க்காவல் படைக்குத் தேர்வு செய்யப்படுப வர்களுக்கு காவல்துறை மூலமாக 45 நாள்கள் பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • அரியலூர் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • மாணவர்களுக்கு கஞ்சா விற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது

    அரியலூர், 

    அரியலூர், செந்துறை சாலையிலுள்ள ஒரு பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப் படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன் பேரில் அங்கு சென்ற அரியலூர் நகர போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் அங்கு நின்று கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதை உறுதி செய்தனர்.இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர், மெக்கா நகரை சேர்ந்த சம்சுதீன் மகன் ஆசிப்(வயது 19), மதுரை மாவட்டம், பழங்காந்த்தம், பழைய முருகன் டாக்கிஸ் பகுதியைச் சேர்ந்த ரவி பூமிநாதன் மகன் ராஜ்குமார்(வயது 25) என்பது தெரியவந்தது.மேலும் இவர்கள் அரியலூரில் தங்கி துணிக் கடையில் ஒன்றில் வேலைப் பார்த்து வருவதோடு , இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.

    அவர்களை போலீசார் சோதனையிட்டு, பாக்கெட்டில் இருந்த 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பான்மசாலா ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் இவர்கள், இதையடுத்து அரியலூர் நகர போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.

    • அரியலூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது
    • 11,14,17,19 வயதுக்குடைய மாணவ, மாணவிகள் 148 பேர் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட வருவாய் அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே செஸ் போட்டி நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் தலைமை வகித்தார். போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ்  தொடக்கி வைத்து பேசினார். போட்டியில், அரியலூர், செந்துறை, தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூர் ஆகிய ஒன்றிய அளவில் நடைபெற்ற குடியரசு தின சதுரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற 11,14,17,19 வயதுக்குடைய மாணவ, மாணவிகள் 148 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றிப் பெற்று முதல் இடங்களைப் பெறும் மாணவ,மாணவிகள் விழுப்புரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வர். மேற்கண்ட போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி, உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், கீழப்பழுவூர் உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி ஆகியோர் செய்திருந்தனர்.

    • 168 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
    • அரியலூர் மாவட்டத்தில் 168 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
    • சீர்வரிசை பொருள்கள் மற்றும் 5 வகையான உணவுகளை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.

    அரியலூர், அரியலூரிலுள்ள தனியார் திருமண மண்ட பத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்க ளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் சின்னப்பா கலந்து கொண்டு அரியலூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 168 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை பொருள்கள் மற்றும் 5 வகையான உணவுகளை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சுசிலா, வட்டார மருத்துவ அலுவலர் சத்யா, வாலாஜ நகரம் ஊராட்சி மன்றத் தலைவர் அபிநயா இளையராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் எழுதப் படிக்க தெரியாத குழந்தைகள் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும்
    • மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தல்
    • எழுதப் படிக்க தெரியாத குழந்தைகள் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும்

    அரியலூர், அரியலூர் மாவட்டத்தில் எழுதப் படிக்க தெரியாத குழந்தைகள் இல்லை என்ற நிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தெரிவித்துள்ார்.

    6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் இணைப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் ஆசிரியர்களுக்காக அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியிடைப் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் தெரிவித்த தாவது:-

    மெல்ல கற்கும் மாணவர்களை

    தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய படங்களில் அடி ப்படை திறன்களை அடை யச் செய்து அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மாவட்டத்தில்

    உள்ள அனைத்து பள்ளிகளிலும் எந்த குழந்தைக்கும் எழுதுவதிலும், வாசிப்பதிலும் இடையூறு இருக்கக் கூடாது. எழுதப் படிக்க தெரியாத குழந்தைகள் அரியலூர் மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

    பயிற்சியில், கீழப்பழூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மொழியரசி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, முதுநிலை விரிவுரை யாளர் மனமளர்ச்செல்வி, இடையக்குறிச்சி தலைமை ஆசிரியை வேல்ஒளி, சிறு வளூர் அரசு உயர்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, பள்ளி துணை

    ஆய்வாளர்கள் பழனி ச்சாமி, செல்வகுமார் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.

    • அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி
    • இலவச கண் பரிசோதனை முகாம்

     அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமை அக்கல்லூரியின் முதல்வர் பெ. செந்தமிழ்ச் செல்வன் தொடங்கி வைத்தார். திருச்சி பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு,400 மாணவர்கள், 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர். இதில் 50 பேர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆ. ஆதிலட்சுமி மற்றும் வேதியியல் துறை பேராசிரியர் ந. ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அரியலூர்அரசு கலைக் கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி நடைபெறுகிறது
    • 150 மாணவ, மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், வேலை வாய்ப்பு மையம், முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மத்திய, மாநில அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.இப்பயிற்சியை அக்கல்லூ ரியின் முதல்வர்டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசினார். மாவட்ட தேசிய தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் இளம் தொழிலர் எபினேசர் கலந்து கொண்டு, கல்வி பயிலும் காலத்திலேயே கிடைக்கும் இந்த வாய்ப்பி னை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையின் லட்சியத்தை அடைய வேண்டும் என்றார்.கல்லூரியில் தற்போது இறுதி ஆண்டு பயின்றுவரும் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளைச்சார்ந்த 150 மாணவ, மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் சங்கச் செயலர்கருணாகரன், பொருளாளர் பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்ப ினர்கள்தண்டபாணி, சிவக்குமார், ஜெயக்குமார், கென்னடி, கண்ணன், மேரி வயலட் கிருஸ்டி, ஆனந்த், காமஞ்சரி, நேசமதி உறுப்பினர்கள் மற்றும் பயிற்றுநர்கள் தர்மராஜ், ஸ்ரீதேவி, ஸ்வாதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    • ஜெயங்கொண்டம் அருகே 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
    • சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. கண்ணன் கலந்து கொண்டார்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கோவில் தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாருநிலா வரவேற்புரையாற்றினார். மாவட்ட திட்ட அலுவலர் அன்பரசி தலைமை வகி த்தார். சிறப்பு அழைப்பா ளராக எம்.எல்.ஏ. கண்ணன் கலந்து கொண்டு 150 கர்ப்பிணிகளுக்கு வளை யல் அணிவித்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் மீன்சுருட்டி வட்டார மருத்துவர் மேகநா தன், ஊராட்சி மன்ற தலைவர் முல்லைநாதன், ஒன்றிய குழு செயலாளர் மணிமாறன், ஊட்டச்சத்து நிபுணர் அருள் ஜோதி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் நிலை ஒன்று தமயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×