என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் மறியல்
    X

    பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் மறியல்

    • அரியலூரில் இருந்து விக்கிரமங்கலத்துக்கு கூடுதல் பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அரியலூர் போக்குவரத்து கழகத்தில் பேசி பேருந்து வருவதற்கு ஏற்பாடு செய்தனர்

    அரியலூர்,

    அரியலூரில் இருந்து விக்கிரமங்கலத்துக்கு கூடுதல் பேருந்துகள் வசதிக் கேட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விக்கரமங்கலம், முத்துவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரியலூரிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரி முடிந்து ஊருக்குச் செல்வதற்காக அரியலூர் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக 2 மணி நேரமாக காத்திருந்தும், பேருந்துகள் வராததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அரியலூர் போக்குவரத்து கழகத்தில் பேசி பேருந்து வருவதற்கு ஏற்பாடு செய்தனர்.

    Next Story
    ×