அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இலவச கண் பரிசோதனை முகாம்
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்
Published on

 அரியலூர்,

அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமை அக்கல்லூரியின் முதல்வர் பெ. செந்தமிழ்ச் செல்வன் தொடங்கி வைத்தார். திருச்சி பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு,400 மாணவர்கள், 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர். இதில் 50 பேர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆ. ஆதிலட்சுமி மற்றும் வேதியியல் துறை பேராசிரியர் ந. ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com