என் மலர்
அரியலூர்
- தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
- புதிதாக அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிவகாசி, விருதுநகர், அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் உடல் பாகங்களை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் ஒன்று சேர்த்து பின்னர் அவர்கள் யார்? யார்? என அடையாளம் கண்டனர்.
தொடர்ந்து காயம் அடைந்த 13 பேரில் 7 பேர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியிலும், 6 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் ஆலையை நடத்தி வந்த அவரது மருமகன் அருண்குமார் ஆகியோர் மீது விபத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், ஆபத்தான வெடி பொருட்களை வைத்து இருந்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில மாதங்களாக பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், புதிதாக அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு வேகமாக வேலை நடைபெற்று வந்த நிலையில், இவர்களுக்கு அங்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என தெரியாமல் அமோனியம் பாஸ்பேட் இருந்த பெட்டியை வேகமாக இழுத்ததாக தெரிகிறது. அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு வேலை செய்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவரும் உறுதி செய்துள்ளார். மேலும் இங்கு பாதுகாப்பு இல்லாமல் குப்பைகளை போல வெடி மருந்துகளை குவித்து வைத்திருந்ததும் ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
- அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், சி.வி.கணேசன் ஆகியோர் காயமடைந்தோரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல்
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
- அரியலூரில் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- மகப்பேறு மருத்துவர்களின் பணியிடங்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
அரியலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்ய வேண்டும். மகப்பேறு மருத்துவர்களின் பணியிடங்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். கூடுதல் மகப்பேறு மருத்துவர்களை உடனடியாகபணியமர்த்தப்பட வேண்டும். அரசு மகப்பேறு மருத்துவர்களை மென்டாரிங் முகாம்கள் போன்றவற்றில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். மகப்பேறு இறப்பு தணிக்கையில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சை சம்பந்தமான தணிக்கையை மாநில அளவில் மூத்த மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் உயர்மட்ட குழுவை கொண்டு முறையாக நடத்த வேண்டும்.தற்போது நடைமுறையில் உள்ள ஆறு விதமான தணிக்கைகளை மாற்றி ஒரு தணிக்கை மட்டுமே நடத்தப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மருத்துவர் கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார். அரசு மருத்துவர்கள் கண்மணி, அறிவுச் செல்வன், ஷபி, மகப்பேறு மருத்துவ துறைத் தலைவர் பிரசன்னா, மருத்துவர் சுகந்தி, பிரியா சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் நடைபெறறது
அரியலூர்,
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும் ,மாணவர் சேர்க்கைக்கும் தடை ஏற்படுத்தி கல்வி உரிமையை மத்திய அரசு பறித்துள்ளதாக கூறி அரியலூர் அண்ணாசிலை அருகே திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, திராவிடர் கழகத்தின் அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மு.கோபாலகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார்.தலைமை பேச்சாளர் க.சிந்தனைச்செல்வன் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர்கள் இரா.திலீபன், ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞரணித் தலைவர் வி.ஜி.மணிகண்டன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 146 பா.ஜ.க.வினர் கைது
- டால்மியா சுண்ணாம்புக் கல் சுரங்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலீசார் நடவடிக்கை
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், பனங்கூர் கிராம சாலை சேதமடைய காரணமான டால்மியா சுண்ணாம்புக் கல் சுரங்கத்தைக் கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபா.ஜ.க.வினர் 146 பேர் கைது செய்யப்பட்டனர்.
டால்மியா சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் பெரியதிருக்கோணம் கிராமத்தில் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுவதால் அங்குள் பனங்கூர் கிராமச் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பா.ஜ.க. மாநில துணைச் செயலர் கருப்பு.முருகானந்தம் தலைமையில், மாவட்டத் தலைவர் அய்யப்பன் முன்னிலையில், அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி, அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பா.ஜ.க.வினரை பெரம்பலூர் சாலையில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 146 பேரை கைது செய்யப்பட்டனர்.
- 11 பேரை பலி கொண்ட அரியலூர் வெடி விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் அதிரடி கைது செய்யப்பட்டு உள்ளனர்
- 4 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போலீஸ் விசாரணை
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருமா னூர் அருகே உள்ள வெற்றி யூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் யாழ் அன்ட் கோ என்ற பெயரில் நாட்டு வெடி தயாரிப்பு ஆலை நட த்தி வருகிறார்.இந்த ஆலையை ராஜேந்தி ரனின் உறவினர் அருண்கு மார் (வயது 35) என்பவர் நிர்வகித்து வருகிறார். ஆலையில் தீபாவளி பண் டிகை நெருங்குவதை யொட்டி நாட்டு வெடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்றது.பட்டாசுகள் தயாரிப்பு பணியில் நேற்று காலை 2 பெண்கள் உள்பட சுமார் 40 பேர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆலையில் தயா ரித்து வைத்திருந்த வெடிகள் திடீரென வெடித்து நாலா புறமும் சிதறின.இதில் பெண்கள் உள்பட 11 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். பலர் படுகாயங்களுடன் உயிரு க்கு போராடிக்கொண்டு இருந்தனர்.இந்த விபத்தின்போது பட்டாசுகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்தன. காயமடைந்த வர்கள் தஞ்சாவூர்,அ ரியலூர் அரசு மருத்துவமனைகள்ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர்கள் சிவசங்கர், சி.வி.கணேசன், எம்.எல்.ஏ. கு.சின்னப்பா, அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு பெரோஸ்கான் அப்து ல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.மேலும் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகா ரிகள் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் அரசு சார்பில் தலா ரூ.50 ஆயிரம் உதவி த்தொகை வழங்கினர்.இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆலை உரிமையாளர் ராஜே ந்திரன், அவரது மருமகன் அருண்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தின்போது பட்டாசுகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்தன.
- காயமடைந்தவர்கள் தஞ்சாவூர், அரியலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் யாழ் அன்ட் கோ என்ற பெயரில் நாட்டு வெடி தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார்.
இந்த ஆலையை ராஜேந்திரனின் உறவினர் அருண்குமார் (வயது 35) என்பவர் நிர்வகித்து வருகிறார். ஆலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி நாட்டு வெடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்றது.
பட்டாசுகள் தயாரிப்பு பணியில் நேற்று காலை 2 பெண்கள் உள்பட சுமார் 40 பேர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆலையில் தயாரித்து வைத்திருந்த வெடிகள் திடீரென வெடித்து நாலாபுறமும் சிதறின.
இதில் பெண்கள் உள்பட 11 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.
இந்த விபத்தின்போது பட்டாசுகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்தன. காயமடைந்தவர்கள் தஞ்சாவூர், அரியலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர்கள் சிவசங்கர், சி.வி.கணேசன், எம்.எல்.ஏ. கு.சின்னப்பா, அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் அரசு சார்பில் தலா ரூ.50 ஆயிரம் உதவி த்தொகை வழங்கினர்.
இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆலை உரிமையாளர் ராஜேந்திரன், அவரது மருமகன் அருண்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியலூரில் அரசு பேருந்து லாரி மோதிய விபத்தில் 11 பேர்கள் காயமடைந்தனர்
- மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களை மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ நேரில் பார்த்து ஆறுதல் கூறினர்
அரியலூரிலிருந்து கும்பகோணம் செல்லும் அரசு பேருந்து உடையார்பாளையம் அருகே சுந்தரேசபுரம் திருப்பத்தில் எதிர்புறம் வந்த லாரி எதிர்பாரதவிதமாக மோதியதில் அரசு பேருந்து சாலை ஓரம் பள்ளத்தில் இரங்கி மின்மாற்றியில் மோதி நின்றது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது, இந்த விபத்தில் டிரைவர் தனசாமி(50), நடத்துனர்(35), பாக்கியா, மங்கையர்க்கரசி, பரணிதரன், சூர்யா, தனம், பெரியசாமி, மணிமேகலை உட்பட 11 பேர்கள் காயமடைந்தனர், காயமடைந்த அனைவரும் அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர், தகவலறிந்த அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, அரியலூர் எம்எல்ஏ வக்கில் கு.சின்னப்பா நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்கள், தீவிரமாக கண்காணித்து தேவையான மருத்துவசிகிச்சை அளிக்கவேண்டும் என மருத்துவரிடம் அறிவுறுத்தினார்கள், இந்த சாலை விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
- திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என்று அரியலூரில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது
- திருக்குறல் கூட்டமைப்பு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
அரியலூர்,
அரியலூரில் உலக திருக்குறல் கூட்டமைப்பு மண்டல நிர்வாகிகள் அறி முகம் மற்றும் ஆலோ சனைக் கூட்டம் நடைபெ ற்றது.கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்து க்கும், அதே போல் சிதம்பர த்தில் இருந்து ஜெயங்கொ ண்டம், அரியலூர், பெரம்ப லூர் வழியாக சேலத்துக்கும் புதிய ெரயில் பாதை அமை க்க வேண்டும்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அதற்கு தமிழக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். திருக்குறளை உலக பொது நூலாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்து க்கு மத்திய, மாநில அரசுகள் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மா னங்கள் நிறைவேற்றப்ப ட்டன.
கூட்டத்துக்கு, அந்த கூட்டமைப்பின் அரியலூர் மாவட்ட துணை தலைவர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார்/ அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பா ளர் ஞானமூர்த்தி, பொதுச் செயலர் ஆதிலிங்கம், மகளிர் அணிச் செயலர் சாந்தி, அறக்கட்டளை தலை வர் தமிழரிமா சம்பத் மற்றும் கடலூர், பெரம்ப லூர், தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை மாவட்ட தலைவர்கள் கலந்து கொண் டனர்.
முன்னதாக மண்டலத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். முடிவில் மாவட்டத் தலைவர் சின்ன துரை நன்றி தெரிவித்தார்.
- ஆண்டிமடம் அருகே ஆடு திருடிய 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது
- ஆடு திருடும் கும்பலிடம் இருந்து மூன்று ஆடு, இரண்டு பைக் பறிமுதல்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தஞ்சாவூர் சாவடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராயர் (78) ஜோஸ்பின் மேரி (75) தம்பதியினர் ஆடு வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு இரவு தங்கள் வீட்டின் முன் ஆடுகளை கட்டி வைத்துள்ளனர்.இந்நிலையில் நேற்று ஆடு சத்தம் போடுவதைப் பார்த்து தம்பதியினர் வெளியே வந்து பார்த்தபோது ஒரு மர்ம நபர் ஆட்டை திருடி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து ஆட்டுடன் மர்ம நபரை பிடித்தனர்.இதைப் பார்த்து மறைவில் இருந்த 2 பேர் இரண்டு ஆடுகளுடன் தங்களது பைக்கை ஸ்டார்ட் செய்துள்ளனர். அவர்களையும் கிராம பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மர்ம நபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் கொழை- சாவடிக்குப்பம் கிராம பகுதியைச் சேர்ந்த ஹரி விஜய் (23), மனோஜ் குமார் (18), அன்புமணி, ஜெயசூர்யா (20), சூர்யா (19) என்பதும், ஏற்கனவே அகரம் கிராமம் பட்டிதெரு சுதாகர் வீட்டில் 2 ஆடுகளை திருடியதும் தெரியவந்தது.இதையடுத்து 5 பேரயும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 ஆடுகள், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- ஆலையின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள், மினி வேன்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.
- சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மீட்பு பணிகளை விரைவுபடுத்த துரித நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.
திருமானூர்:
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருமானூரை சேர்ந்தவர் அருண். இவருக்கு விரகாலூர் கிராமத்தில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது.
இந்த ஆலையில் நாட்டு வெடிகள், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வாணவெடிகள் மற்றும் தீபாவளி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் இங்கு தீவிரமாக நடந்து வந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
வழக்கம் போல் இன்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் வெடித்து சிதறிய பட்டாசுகளுக்கிடையே தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனா்.
அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மண்டலம் கிளம்பி பட்டாசு ஆலை முழுவதும் கரும்புகை மூட்டமாக மாறியது. வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது போல பட்டாசுகளின் சத்தம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை வீரர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சை பலனின்றி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை என்ன என்று தற்போது வரை தெரியவில்லை. தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகுதான் துள்ளியமாக தெரியவரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆலையின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள், மினி வேன்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.
சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மீட்பு பணிகளை விரைவுபடுத்த துரித நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.
பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் தீயை அணைக்க முடியவில்லை. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டும் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பொக்லைன் எந்திரம் மூலம் பழமையான ஆலமரத்தை வேருடன் அகற்றிய கொடூரம்
- பொதுமக்கள் செந்துறை தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நிண்ணியூர் பெரிய ஏரியின் வடிகால் வாய்க்காலில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது.இந்த மரம் அப்பகுதியில் ஆடுமாடு மேய்ப்பவர்களுக்கும் வழிப்போக்கர்களும் இளைப்பாறும் இடமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த ஆலமரத்தை அப்பகுதியில் உள்ள சிலர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வேருடன் வெட்டி அப்புறப்படுத்திவிட்டனர்.பசுமையான ஆலமரத்தை கும்பல் எந்த அனுமதியும் இல்லாமல் வெட்டியது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபற்றி நிண்ணியூர் மேலத்தெரு ஊராட்சி உறுப்பினர் கவிவண்ணியா, பார்வதி மற்றும் பொதுமக்கள் செந்துறை தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்.ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






