என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூர் அரசு கலைக் கல்லூரி
    • கல்லூரியில் ரத்ததான முகாம்

    அரியலூர், அக். 13-

    அரியலூர் அரசு கலைக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட்கி ராஸ் மண்டலம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளை இணைந்து ரத்ததான முகாம் அரசு கலைக்கல்லூரியில் நடை பெற்றது.

    தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் தனராஜ், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பா ளர் வெற்றிவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

    இந்த முகாமில் அரசு கல்லூரி முதல்வர் டோமி னிக் அமல்ராஜ், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் அரியலூர் மாவட்ட தலை வர் ஜெயராமன், பொருளா ளர் எழில், துணைத் தலை வர் சந்திரசேகர், வட்டார மருத்துவ அலுவலர் கா ர்த்திகா, முன்னாள் மாவட்ட தலைவர் நல்லப்பன், நிர் வாக குழு உறுப்பினர்கள் வக்கீல் செல்வராஜ், நமச்சி வாயம், சத்யமூர்த்தி, அசோக்குமார், சக்கரவர்த்தி, மற்றும் கல்லூரியின் தாவர வியல் துறை பேராசிரியர்கள் ஜெயக்குமார், சேட்டு, தண்டபாணி, கௌரவ விரிவுரையாளர்கள் ராஜ்குமார், சிவலிங்கம், தாண்டவ மூர்த்தி, தமிழ் குமரன், தமிழ் துறை தலை வர் இளையராஜா, கல்லூரி கண்காணிப்பாளர் ஆரோ க்கியமேரி சுகாதார மேற்பா ர்வையாளர் சைமன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    அரியலூர் அரசு மருத்து வக் கல்லூரியின் ரத்த வங்கி மருத்துவர் சந்திரசேக ரன் தலைமையில் மருத்துவக் அலுவலர்கள் குழு மேற்பா ர்வையில் முகாம் நடை பெற்றது. இதில் 50 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

    அரியலூர் அரசு கலை க்கல்லூரியின் திட்ட அலுவ லரும் மாவட்ட ஒருங்கிணை ப்பா ளருமான பேராசிரியர் ஸ்டீபன் ஏற்பாடு செய்து இருந்தார்.

    ரத்ததனா முகாம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    • சுமார் 40 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் நோக்கி மும்பை ரெயில் புறப்பட்டு சென்றது.
    • உயர் அழுத்த மின் வயரில் சேலை சிக்கி கிடந்த இடத்தை ரெயில்வே உயர் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

    அரியலூர்:

    நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் அரியலூர் அருகே பழைய பாம்பன் ஓடை என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் பச்சை நிற சேலையில் கல்லை கட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்தது.

    இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளர்கள், பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி சேலை தொங்கிக்கொண்டு இருந்த இடத்திற்கு அருகில் சென்று பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக விருத்தாசலம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது, உயர் அழுத்த மின் வயரில் சேலை தானாக காற்றில் வந்து விழ வாய்ப்பில்லை என்றும், இது ரெயில் என்ஜினின் மேல் பகுதியில் உள்ள கம்பியும், மின்சார கம்பியும் உரசும்போது எளிதில் ரெயிலை தீ விபத்தில் சிக்க வைத்துவிடலாம் என்ற நோக்கில் சமூக விரோதிகள் செய்த சதியாக இருக்கலாம் என தெரிய வந்தது. இதற்கிடையில் சேலை தொங்கிய இடத்தில் இருந்து தீப்பொறி விழுவதை கண்ட பயணிகளும், அதிகாரிகளும் பதற்றம் அடைந்தனர்.

    பின்னர் ரெயில்வே ஊழியர்கள் நின்ற ரெயிலில் இருந்த நீண்ட கம்பியை எடுத்து வந்து சாதுரியமாக உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி இருந்த சேலையை அகற்றினர். இதையடுத்து சுமார் 40 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் நோக்கி மும்பை ரெயில் புறப்பட்டு சென்றது.

    சேலையில் கல்லை கட்டி ரெயிலை தீ விபத்தில் சிக்கவைக்க சதி திட்டம் தீட்டிய மர்ம ஆசாமிகளை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனிடையே உயர் அழுத்த மின் வயரில் சேலை சிக்கி கிடந்த இடத்தை ரெயில்வே உயர் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    சம்பவ இடம் காட்டுப்பகுதி என்பதால் அந்த வழியாக மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்று போலீசார் அந்த பகுதியில் முகமையிட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • உயர் அழுத்த மின் கம்பியில் பச்சை நிற சேலையில் கல்லை கட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்தது.
    • சேலை தொங்கிய இடத்தில் இருந்து தீப்பொறி விழுவதை கண்ட பயணிகளும், அதிகாரிகளும் பதற்றம் அடைந்தனர்.

    அரியலூர்:

    நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பைக்கு சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16352) இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று காலை 6.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் மதியம் 2.40 மணியளவில் அரியலூர் சென்றது. அங்கிருந்து புறப்பட்ட 30 நிமிடத்தில் பழைய பாம்பன் ஓடை என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் பச்சை நிற சேலையில் கல்லை கட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்தது. இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக நிறுத்தினார்.

    பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளர்கள், பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி சேலை தொங்கிக்கொண்டு இருந்த இடத்திற்கு அருகில் சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்து சற்று தூரத்தில் ஆடு மேய்ப்பவர் மட்டும் ஆடுகளுடன் நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து உடனடியாக விருத்தாசலம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது, உயர் அழுத்த மின் வயரில் சேலை தானாக காற்றில் வந்து விழ வாய்ப்பில்லை என்றும், இது ரெயில் என்ஜினின் மேல் பகுதியில் உள்ள கம்பியும், மின்சார கம்பியும் உரசும்போது எளிதில் ரெயிலை தீ விபத்தில் சிக்க வைத்துவிடலாம் என்ற நோக்கில் சமூக விரோதிகள் செய்த சதியாக இருக்கலாம் என தெரிய வந்தது. இதற்கிடையில் சேலை தொங்கிய இடத்தில் இருந்து தீப்பொறி விழுவதை கண்ட பயணிகளும், அதிகாரிகளும் பதற்றம் அடைந்தனர்.

    பின்னர் ரெயில்வே ஊழியர்கள் நின்ற ரெயிலில் இருந்த நீண்ட கம்பியை எடுத்து வந்து சாதுரியமாக உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி இருந்த சேலையை அகற்றினர். இதையடுத்து சுமார் 40 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் நோக்கி மும்பை ரெயில் புறப்பட்டு சென்றது.

    சேலையில் கல்லை கட்டி ரெயிலை தீ விபத்தில் சிக்கவைக்க சதி திட்டம் தீட்டிய மர்ம ஆசாமிகளை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • ஜெயங்கொண்டத்தில்பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
    • மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமை தாங்கினார்.

    ஜெயங்கொண்டம் 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமை தாங்கினார்.

    அரசு மருத்துவர் கீதா மணிவண்ணன் முன்னிலை வகித்தார். பீனிக்ஸ் பெண்கள் குழந்தைகள் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் கலந்துகொண்டு பெண் குழந்தைகள் உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் போது நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் பெண்கள் கல்வி விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை செய்ய வேண்டும் என பேசினார்.

    நிகழ்ச்சியில் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருட் சகோதரிகள் சகாயராணி, நிர்மலா பிரான்சிஸ், இணை செயலாளர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம்:விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலை, விற்பனையாளர்கள் உரிமம் ரத்து செய்யப்படும்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு நிரந்தர விற்ப னையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது,

    பட்டாசு உற்பத்தியா ளர்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி மட்டுமே வெடி மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் வழங்கபட வேண்டும். மேலும் பட்டாசு தொடர்பான பணிகளில் அனுபவமில்லாத உள்ளுர் ஆட்களை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்த கூடாது. உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றிட வேண்டும். பட்டாசு தயாரிப்பு தொடர்பான பணிகளில் அனுமதிக்கப்பட்ட அளவு நபர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். உரிமத்தில் குறிப்பிட ப்பட்டுள்ள இடஅமைப்பில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். தீ அணைப்பான்களை பயன்படுத்தக் கூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும் முறையாக அதனை தகுந்த காலத்திற்குள் புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும். உற்பத்தி நிலையத்திற்குள் எந்த ஒரு வாகனத்தினையும் நிறுத்தக் கூடாது உற்பத்தி நிலையத்திற்கு வெளியில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். இதனை தொடர்ந்து கண்கா ணித்திடும் பொருட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    உரிமதாரர்கள் உரிமத்தி ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்க ப்படாமல் மற்றும் மேற்கூடிய நெறிமுறைகளை பின்பற்றாத நேர்வுகளில் உரிமம் ரத்து செய்யப்ப டுவதுடன் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க ப்படும் எனவும், உரிமம் இன்றி புதுப்பிக்கப்படாமல் உற்பத்தி அலகுகள் மற்றும் விற்பனைக்கடைகள் செயல்படுவது தெரிய வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்அம்பிகா, அரசு அலுவலர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள், நிரந்தர விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அரியலூரில் சிறுவர், சிறுமியர் ஓட்டி வந்த 40 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

    அரியலூர்,  

    அரியலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் தலைமையிலான போலீசார், தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள், சிறுவர்கள், சிறுமிகள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனங்களை போலீசார், பறிமுதல் செய்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள், காவல் நிலையத்துக்குச் எடுத்து செல்லப்பட்டது.

    அங்கு சிறுவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கிய போலீசார், இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடக் காரணமாக இருக்க மாட்டோம் என உறுதிமொழி எழுதி வாங்கிக்கொண்டு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைத்தனர்.

    • வெடி விபத்தில் உயிரிழந்த, காயமடைந்த குடும்பத்தினருக்குஅ.தி.மு.க. சார்பில் ஆறுதல், நிதியுதவி
    • வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த வெற்றியூர் மதுரா விரகாலூர் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

    விபத்து நிகழ்ந்த இடத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடா வுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு, விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் நிதியுதவி யினை வழங்கினார். நிகழ்வில் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ராமஜெய லிங்கம், மாவட்ட மாணவ ரணிச் செயலர் சங்கர், ஒன்றியச் செயலாளர்கள் சாமி நாதன், வடிவழகன் உள்பட பலர் இருந்தனர்.

    • அரியலூர் பட்டாசு தயாரிப்பு ஆலையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
    • ஆய்வின் போது வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தையடுத்து அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு மற்றும் கடைகளில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

    தா.பழூர் அடுத்த நாயக்கனைபிரியாள் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு வயல் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு தயாரிக்கும் ஆலைக்கு சென்ற அரியலூர் கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணா, வெடிபொருள்கள், மூலப் பொருள்கள் பயன்பாடு குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    அப்போது ஆலையின் வெளியே வாகனங்களை நிறுத்த வேண்டும். தீயணைப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவில் வைத்திருக்க வேண்டும். அரசின் சட்ட விதிக்குப்பட்டு, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆலை நிர்வாகியிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • பட்டாசு தயாரிப்பு, கடைகளை கண்காணிக்க அரியலூரில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது
    • அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவு

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளி யிட்டுள்ள அறிக்கையில்,ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டுவரும் பட்டாசு உற்பத்தி மற்றும் பட்டாசு விற்பனைக்கடைகள் (தற்காலிகக்கடைகள் உட்பட) நடத்திட தீயணை ப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தொழில் பாதுகாப்புத்து றையின் தடையின்மைச்சா ன்று பெற்று உரிமம் பெறப்படவேண்டும்.

    மேலும், உரிமம் பெற்ற பின்பு உரிமத்தில் குறிப்பி டப்பட்டுள்ள அளவின்படி இருப்பு வைத்து க்கொள்ளவும் மற்றும் அனைத்து பாதுகாப்புகள் குறித்த நடவடிக்கைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். உரிமதாரர்கள் உரிமத்தில் குறிப்பிடப்ப ட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் உள்ள நேர்வுகளில் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்டப்படியான நடவடிக்கை கள் எடுக்கப்படும். மேலும், உரிமம் இன்றி, புதுப்பிக்க ப்படாமல் இதுபோன்று உற்பத்தி அலகுகள் மற்றும் விற்பனைக்கடைகள் செயல்படுவது தெரியவ ந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை ஆய்வு செய்ய சிறப்பு தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

    • அரியலூரில் உலக மனநல நாள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • மாணவ,மாணவிகள் மனநலம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அட்டையை ஏந்திவாறு, முழக்கமிட்டுச் சென்றனர்

    அரியலூர்,

    உலக மனநல நாள் தினத்தையொட்டி அரியலூரில் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மனநலத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கல்லூரியின் முதல்வர் முத்துகிருஷ்ணன், விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    பேரணியானது ராஜாஜி நகர், கல்லூரிச் சாலை, செந்துறை சாலை வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், மருத்துவர்கள் கண்மணி, அறிவுச்செல்வன், மருத்துவ அலுவலர் குழந்தைவேல், மனநோய் மருத்துவப் பிரிவு உதவி பேராசிரியர்கள் செந்தில்குமார், அகமதுநிஷா, உடற்கூறு ஆய்வியல் துறை துணைப் பேராசிரியர் நெடுஞ்செழியன், சமூக மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர் வினோத்குமார் மற்றும் அக்கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு மனநலம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அட்டையை ஏந்திவாறு, முழக்கமிட்டுச் சென்றனர்.

    வெடிவிபத்தில் இறந்தவர்களின் உடல் நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூரில் செயல்பட்ட யாழ் அன்ட் கோ என்ற நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் தஞ்சை மருத்துவ கல்லூரியிலும், 7 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வெடி ஆலையின் உரிமையாளர் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், அவரின் மருமகன் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    வெடி விபத்தில் உயிரிழந்த திடீர்குப்பத்தை சேர்ந்த ரவி, அவரது மனைவி சிவகாமி மற்றும் வெண்ணிலா, ராசாத்தி ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் வீட்டிற்கு ஆம்பு லன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து சுடுகாட்டிற்கு எடுத்து சென்று நள்ளிரவு 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. வெளியூரை சேர்ந்தவர்களின் சடலங்கள் அமரர் ஊர்தி வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

    • அரியலூர் மாவட்டம் விரகலூரில் மூட்டை, மூட்டையாக வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • வீடு வீடாக சோதனை செய்து போலீசார் நடவடிக்கை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூரில் செயல்பட்ட யாழ் அன்ட் கோ என்ற நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலியாகினர்.வெடி விபத்து தொடர்பாக போலீசார் அப்பகுதியில் நடத்திய தொடர் விசாரணையில், திடீர் குப்பம் பகுதியில் வசிக்கும் 30 குடும்பத்தினர், வெடி தயாரிக்கும் ஆலைகளில் இருந்து நாள்தோறும் தேவையான மருந்துகளை பெற்று, தங்கள் வீடுகளில் வைத்து, காகித குப்பிகளில் நிரம்பி வெடி தயாரித்து வருவதாகவும், இதற்கான கூலி பெற்று வருவதாகவும் தெரிய வந்தது. அவ்வாறு வெடி மருந்துகளை போதிய அளவு ஸ்டாக் வைக்காமல், அப்பகுதியை சேர்ந்த 4 பேர் மூட்டை, மூட்டையாக வாங்கி வந்து வீடுகளில் ஸ்டாக் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு அந்தோணி ஆரி தலைமையிலான போலீசார், வருவாய் துறையினர், கிராம நிர்வாக அலுவல ருடன் அப்பகுதிக்கு சென்று வாகனத்தில் பொருத்த ப்பட்ட ஒலிப்பெருக்கி மூலமாக வீடுகளில் வைத்தி ருக்கும் வெடி மருந்து பொருட்களை ஒப்படைக்கு மாறு அறிவுறுத்தினர். மேலும் ஒவ்வொரு வீடாக சென்று சோதனை மேற்கொண்டனர்அப்போது ரவி, வாசு, காசி, கணேஷ் ஆகியோரின் வீடு உள்ளிட்ட பல வீடுக ளில் சோதனை மேற்கொ ண்டனர். அப்போது பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும், கரி மருந்து, வெடி மருந்து உள்ளிட்ட வெடி பொருட்கள் மூட்டை, மூட்டையாக கைப்பற்றப்ப ட்டது. மேலும் சிலர் தங்களாகவே வந்து பதுக்கி வைத்திருந்த பட்டாசு பண்டல்களை ஒப்படைத்த னர். கைப்பற்றப்பட்ட அனைத்து வெடி மருந்து பொருட்களையும் போலீசார் குழித்தோண்டி புதைத்து அழித்தனர்.

    ×