அ.தி.மு.க. சார்பில் ஆறுதல், நிதியுதவி

வெடி விபத்தில் உயிரிழந்த, காயமடைந்த குடும்பத்தினருக்குஅ.தி.மு.க. சார்பில் ஆறுதல், நிதியுதவி வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
அ.தி.மு.க. சார்பில் ஆறுதல், நிதியுதவி
Published on

அரியலூர்,  

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த வெற்றியூர் மதுரா விரகாலூர் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடா வுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு, விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் நிதியுதவி யினை வழங்கினார். நிகழ்வில் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ராமஜெய லிங்கம், மாவட்ட மாணவ ரணிச் செயலர் சங்கர், ஒன்றியச் செயலாளர்கள் சாமி நாதன், வடிவழகன் உள்பட பலர் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com