என் மலர்
அரியலூர்
- அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
- 1237 வழக்குகளுக்கு தீர்வு
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு மாநில சட்ட பணிகள் ஆனைக்குழு வழி காட்டுதலின் பேரில் அரிய லூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்ற ங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.அரியலூர் ஒருங்கிணை ந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற த்தை மாநில சட்ட பணிகள் ஆனைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான கிரிஸ்டோபர் தலைமை யேற்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் குற்றவியல் தலைமை குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி, ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி கணேஷ், நீதித்துறை நடுவர் நீதிபதி ராஜசேகர் மற்றும் நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்கள்,வக்கில் சங்க பிரதிநிதிகள் நீதிமன்ற ஊழியர்கள் கலந் துகொண்டனர்.இச்சிறப்பு மக்கள் நீதிம ன்றத்தில் 6 காசோலை வழக்கு, ஒரு குடும்பநல வழக்கு, 28 சிவில் வழக்கு, 10 மோட்டார் வாகனவிபத்து, 212 சிறுகுற்ற வழக்கு, 2 வருவாய்த்துறை வழக்கு. 12 வங்கி வழக்குகள் 966 ஜெயங்கொண்டம் நிலம் கையகப்படுத்திய வழக்குகள் ஆக 1237 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
- அரியலூரில் நவராத்திரி விழா தொடங்கியது
- அம்மன் கோவில்களில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஆராதனை செய்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நவராத்திரி விழா நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி ஆலந்துறையார் கோவிலில் தபஸ்காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் கோவிலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், அரியலூர் கோதண்டராமசாமி கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஆராதனை செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்
- சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவரை கைது செய்தனர். மேலும் அந்த மாணவருக்கு 17 வயதே ஆவதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- அரியலூரில் அண்ணா பிறந்த நாள் விழா மிதிவண்டிப் போட்டி நடைபெற்றது
- கு.சின்னப்பா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
அரியலூர்,
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரிய லூரில் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யம் சார்பில் 13 முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவி யர்களு க்கான மிதிவண்டிப் போட்டி நடைபெற்றது. போட்டியை சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, கொடியசை த்து தொடக்கி வைத்தார்.
மாணவ மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெற்ற போட்டியில், 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ தூரமும், மாண விகளுக்கு 10 கி.மீ தூரமும், அதே போல் 15 வயதுக்கு உட்டபட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், மாணவி களுக்கு 15 கி.மீ தூரமும், 17 வயதுக்கு உடப்ட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ தூராமும் நடத்த ப்பட்டது.இதில் வெற்றிபெற்ற இரு பிரிவினருக்கும் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000, 4 முதல் 10 ஆவது வரை வெற்றிப்பெற்ற நபர்களுக்கு தலா ரூ.250 மற்றும் பங்கேற்பு சான்றி தழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சி யர் கண்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிக்கப்பட்டது
- கத்தியை காட்டி பணம் பறிந்த 2 பேரை போலீசார கைது செய்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இரும்புலிக்குறிச்சி கிராமத்தை ேசர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் அஜய்குமார்(வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த உடையார்பாளையம் கைக்களநாட்டர் தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் வினோத் (20), நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்த காத்தரூபன் மகன் குமரன்(23) ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2,500-ஐ பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியலூர் மாவட்டத்தில் மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
- 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அரியலூர் மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945 அட்டவணைகள் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படும்2023 அக்டோபர் 5-ந் தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.தவறும் பட்சத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்தக ஆய்வாளர் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருந்தால் மருந்தகங்களின் உரிமையாளர் மீது மேற்கண்ட உத்தரவினை பின்பற்றாத காரணத்திற்காக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரியலூரில் லாரி மோதி தனியார் நிறுவன மேலாளர் பலியானார்
- அரியலூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்
அரியலூர்,
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, குழிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்(வயது 62). இவர் தற்போது அரியலூர், வடக்கு மாரியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், ஓட்டக்கோவிலுள்ள ஒரு தனியார் சிமெண்ட் ஆலைக்கு இருசக்கர வாகனத்தி ல் பெரம்ப லூர்-தஞ்சாவூர் புறவழி சாலையோரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் ஏற்றிக் கொண்டு வந்த 2 லாரிகளில் ஒன்று, மோதியதில் சம்பவ இடத்திலேயே கதிரேசன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் அரியலூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம், அடுத்த ஆனாபுரியை சேர்ந்த டிரைவர் மகாலிங்கம் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- அரியலூர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
- கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதால் படிக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு
அரியலூர்,
அரியலூர் அரசு கலை கல்லூரிக்கு சொந்தமான நிலத்தில், அக்கல்லூரியைச் சுற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் விடுதிகள், செவிலியர்கள் விடுதிகள் என அனைத்து துறை அலுவலகங்களும் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் அருகே சுத்தகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதால், வகுப்புறைகளில் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியவில்லை. இது குறித்து மாணவர்கள் பல முறை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், வகுப்புறைக்குச் சென்ற மாணவர்கள், அங்கு அமர்ந்து படிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி முதல்வரிடம் தெரிவித்ததையடுத்து, மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
- அரியலூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு சீல்வைக்கப்பட்டது
- பட்டாசு குடோன் உரிமையாளர் கைது செ்யயப்பட்டு உள்ளார்
அரியலூர்,
திருமானூரில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சத்து 55 ஆயி–ரம் மதிப்பிலான 88 மூட்டை நாட்டு வெடிகள், 63 அட்டைபெட்டிகளில் சிவ–காசி பட்டாசுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து குகன் பட்டாசு கடை உரிமையாளர் ராஜேஷ்குமார்(37) மற்றும் கடையின் மேலாளர் சத்தியமூர்த்தி(31) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சத்தியமூர்த்தியை கைது செய்து, நீதிமன்றத்–தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான ராஜேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் க.பழூர் பகுதியில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த பட்டாசு குடோனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த குடோன் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குடோனுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல்வைத்தனர். குடோன் உரிமையாளர் தஞ்சையை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- மும்பை ரெயிலை விபத்தில் சிக்கவைக்க சதி:
- அரியலூர் அருகே ரெயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு
- போலீசார் முகாமிட்டு விசாரணை
அரியலூர்,
நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் அரியலூர் அருகே பழைய பாம்பன் ஓடை என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் பச்சை நிற சேலையில் கல்லை கட்டிய நிலையில் தொங்கி ெகாண்டிருந்தது. இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளர்கள், பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி சேலை தொங்கிக்கொண்டு இருந்த இடத்திற்கு அருகில் சென்று பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக விருத்தாசலம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, உயர் அழுத்த மின் வயரில் சேலை தானாக காற்றில் வந்து விழ வாய்ப்பில்லை என்றும், இது ரெயில் என்ஜினின் மேல் பகுதியில் உள்ள கம்பியும், மின்சார கம்பியும் உரசும்போது எளிதில் ரெயிலை தீ விபத்தில் சிக்க வைத்துவிடலாம் என்ற நோக்கில் சமூக விரோதிகள் செய்த சதியாக இருக்கலாம் என தெரிய வந்தது. இதற்கிடையில் சேலை தொங்கிய இடத்தில் இருந்து தீப்பொறி விழுவதை கண்ட பயணிகளும், அதிகாரிகளும் பதற்றம் அடைந்தனர்.
பின்னர் ரெயில்வே ஊழியர்கள் நின்ற ரெயிலில் இருந்த நீண்ட கம்பியை எடுத்து வந்து சாதுரியமாக உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி இருந்த சேலையை அகற்றினர். இதையடுத்து சுமார் 40 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் நோக்கி மும்பை ரெயில் புறப்பட்டு சென்றது.
சேலையில் கல்லை கட்டி ரெயிலை தீ விபத்தில் சிக்கவைக்க சதி திட்டம் தீட்டிய மர்ம ஆசாமிகளை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனிடையே உயர் அழுத்த மின் வயரில் சேலை சிக்கி கிடந்த இடத்தை ரெயில்வே உயர் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடம் காட்டுப்பகுதி என்பதால் அந்த வழியாக மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்று போலீசர அந்த பகுதியில் முகமைட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கருமேகங்கள் சூழந்து நின்றன
- அரியலூரில் திடீர் மழை
அரியலூரில் திடீர் மழை
அரியலூர், அரியலூரில் நேற்று மாலை 5 மணியளவில் கருமேகங்கள் சூழந்து நின்றன. இதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலைகளில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றதை காண முடிந்தது. அதன்பிறகு சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு 10 மணி வரை சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குறைதீர் முகாம்
- மருத்துவக் கல்லூரியில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு
அரியலூர்
அரியலூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள அனிதா நினைவு அரங்கில், தேசிய மற்றும் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாவட்ட நிர்வா கம் சார்பில் குழந்தை உரி மை மீறல் குறித்த குறைதீர் அமர்வு நடைபெற்றது.
தேசிய குழந்தைகள் உரி மைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திவ்யா குப்தா தலைமையில் நடைபெற்ற அமர்வில், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய கூடுதல் இயக்குநர் ஜித்தேந்திர சிங், ஆலோசகர் தேவேந்திரகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.தர்மசீலன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு,
ஆண்டிமடம் ஒன்றியத்தி ற்கு ட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் புகார்கள் குறித்து குழந்தைகளிடம் விசாரி த்தார். மேலும், குழந்தை களின் பாதுகாப்பு, பள்ளி இடைநிற்றல், உடல் ரீதியான தண்டனை, ஆதரவற்ற குழ ந்தைகள் பாதுகாப்பு உள்பட பல்வேறு கோரிக்கை மற்றும் புகார்கள் தொட ர்பான 300-க்கும் மேற்பட்ட மனுக்களை நேரடியாக பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






