என் மலர்
அரியலூர்
- அரியலூர் மாவட்டத்தில்காவல் நிலையங்களின் எல்லைகளை மறுவரையறை செய்ய கோரிக்கை
- மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர், போலீஸ் எஸ்.பி.யிடம் மனு
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் சில காவல் நிலைய எல்லைகளை மறுவரையறை செய்யவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பி ரெண்டு பெரோஸ்கான் அப்துல்லாவிடம், மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து கோரிக்கை மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அரிய லூர் மாவட்டத்தில் சில காவல் நிலையங்கள் அதன் எல்லையிலும், அதன் கட்டுப்பாட்டுப் பகுதிகள் வேறு ஒரு பகுதியிலும் இருக்கிறது.
குறிப்பாக கயர்லாபத் காவல் நிலையம் வி.கைகாட்டி அடுத்த தேளூரில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியானது அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள அரியலூர் புதிய மார்க்கெட் தெருவில் தொடங்குகி றது. இதனால் புகார் அளிக்கச் செல்லும் பொது மக்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள், வழக்குரைகள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதே போல் புதுப்பா ளையம் அருகேயுள்ள சிறுவளூர் கிராம மக்கள் புகார் அளிக்கச் செல்ல வேண்டும் என்றால் 20 கிலோ மீட்டர் தூரம் கடந்து அரியலூர் காவல் நிலை யத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த குறைபாட்டை நீக்கி மற்றும் மாவட்டத்தில் உள்ள மொத்த 16 காவல் நிலைய எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- முன்னாள் அரசு கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது
- அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
அரியலூர்,
அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா வினை முன்னிட்டு அரிய லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு முன்னாள் அரசுதலைமை கொறடாவும் மாவட்ட செயலாளருமான தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமை யில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவ ட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், மாவட்ட இணை செயலாளர் பவானி வெள்ளைசாமி, மாவட்ட கலைபிரிவு செயலாளர் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேட்டு, இணைச்செயலாளர் உதய சூரியன், காந்திர் மாவட்ட துணைச்செயலாளர் ரவி, சக்திவேல், இளங்கோவன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சங்கர், இணை செயலாளர் பிரேம்குமார், சிவா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவசங்கர், மாவட்ட மகளிரணி ஜீவா அரங்கநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் முல்லை அகிலன், அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் பாஸ்கர்,
வக்கில் பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடாஜல பதி, இணை செயலாளர் ராமகோவிந்தராஜ், சண்மு கம், எட்மன்ட் அறிவழகன், கோபாலகிருஷ்ணன், சுகுமார், சிவஞானம், முன் னாள் அரசுசிறப்பு வக்கில் சாந்தி, ஊராட்சி
மன்ற தலைவர்கள் சிவா, செங்கமலை, நகரசெயலா ளர் செந்தில், முன்னாள் நகராட்சி தலைவர் கண் ணன், மேலத்தெரு தளபதி கணேசன், நாகராஜன், பழணியாண்டி, கருணாநிதி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
- அரியலூர் அடுத்த வள்ளலார் கல்வி நிலையத்தில் சொற்பொழிவு நடைபெற்றது
- சன்மார்க்க சொற்பொழிவாளர் கிருஷ்ணமூர்த்தி புகழாரம்
அரியலூர்,
வள்ளலாரின் 201-வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் அடுத்த வள்ளலார் கல்வி நிலையத்தில் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வள்ளலார் கல்வி நிலையத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வெங்கிடகிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் வள்ளியம்மை ராமசாமி முன்னிலை வைத்தார் . பள்ளிச் செயலர் புகழேந்தி வரவேற்றார். இதில் சன்மார்க்க சொற்பொழிவாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அவர் பேசியதாவது:-
உயரிய ஆன்மீக நெறிகளையும் சமூக சீர்திருத்தங்களையும் தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் வள்ளலார். அவர் உலக மக்களையும் அவ்வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதற்கென மக்களுக்கு அருளுரைகளும் அருட்பாக்களும் அருளியதோடு நிற்காமல், அக்கொள்கைகளுக்கு அடித்தளமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை ஆகிய முப்பெரும் அமைப்புகளை ஏற்படுத்தி அவற்றின் வழி ஜீவகாருண்ய ஒழுக்கம், பசிப்போக்கும் அறம், அருட்பெருஞ்ஜோதி இறைவன் என்னும் மகத்தான ஆன்மீக சமூக சீர்திருத்தங்களை மக்கள் பின்பற்றி உய்வதற்கு வழி செய்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
சொற்பொழிவாளர் சாந்தி பாலசுப்ரமணியன், புலவர் சி.இளங்கோ, நல்லப்பன் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிவகுமார் , ராமஜெயவேல் ஆகியோர் மாணவர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகளை வழங்கினர்.முடிவில் தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அப்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில், ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும்.
அரியலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியரக, கருவூலம் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த வேண்டும்.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஷேக்தாவூத் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். பொருளாளர் காமராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் காந்தி, எம்.ஆர்.பி செவிலியர் சங்கத் தலைவர் ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம்எம்.ஆர்.சி. கல்லூரியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம், தத்தனூர் எம்.ஆர்.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன்,அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் ரகுநாதன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கலைஞர் கருணாநிதியின் பல்வேறு சாதனைகளைப் பற்றி விளக்கி பேசினார். அவருடைய போராட்டத்தில் அரியலூர் மாவட்டம் முக்கிய சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது என பேசினார்.
இந்நிகழ்வில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ச.பரிமளம், தாசில்தார்கள் துரை, கலைவாணன், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா,தஞ்சாவூர் மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜ் மற்றும் அரசு அலுவலர்கள்,பேராசிரியர்கள், இருபால் மாணவ,மாணவிகள்,கட்சி தோழர்கள் கலந்துகொண்டனர்.
- அரியலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்துக்கு, கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து பெற்ற 434 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக அவர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5,900 மதிப்பில் தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,552 மதிப்பில் பித்தளை சலவைப் பெட்டி என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.24,904 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து 2022-2023-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற அகில இந்திய தேர்வில் மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று கேடயம் பெற்ற மாணவி நித்யா மற்றும் மாணவர் சந்தோஷ் ஆகியோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அவர், ஆட்சியரக அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையத்தில் பயிற்சி மேற்கொண்ட கூவத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கலைவாணி, தனித் துணை ஆட்சியர் இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், தேசிய தகவலியல் மையத்தின் மாவட்ட அலுவலர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த பூவாணிபட்டு கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ்(வயது42). இவரை கடந்த 2020-ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவாளி அந்தோணிராஜ்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் ஆபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.7 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து அந்தோணிராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.
- அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
- சுகாதார சீர்கேட்டை சரி செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் கண்டுகொள்ளாததால் மாணவர்கள் ஆத்திரம்
அரியலூர்,
அரியலூர் அரசு கலைக்க ல்லூரி அருகே அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுகளை சுத்திகரிக்கும்போது அதிக அளவில் துர்நாற்றம் வீசுவ தாகவும், இதனால் அருகே கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ-மாண வாந்தி-மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாவதாகவும் கூறி கடந்த வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ராமகிரு ஷ்ணன் உறுதி அளித்தார்.அதன்பேரில் மாண வர்கள் கலைந்து சென்றனர்.இந்நிலையில் தற்போது வரை இந்த பிரச்சினை சரி செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் ஆத்திரம் அடைந்தனர்.இதையடுத்து வகுப்பு களை புறக்கணித்து கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கல்லூரி முத ல்வர், வகுப்பு அறை களை மாற்றித்தருவதாக உறுதியளித்தார். எனினும் மாணவர்கள் இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளிக்கப்போவதாக கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- அரியலூர் அடுத்த சிறு வளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது
- முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்க லாம் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம்
அரியலூர்,
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்க லாம் பிறந்த நாளை முன்னி ட்டு அரியலூர் அடுத்த சிறு வளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிக ழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் செந்தி ல்குமரன் அனை வரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரி யர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செவ்வேள், இளநிலை உதவி யாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் கண்ணகி, சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.
- அரியலூரில் இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
- கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூரில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். அரியலூர் முன்னாள் இந்திய குடியரசு தலைவர், பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வி துறை சார்பில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- செந்துறையில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது
- மோதல் தொடர்பாக 82 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள பால் பண்ணை அருகே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அலுவலகம் உள்ளது. இந்தநிலையில், அ.தி.மு.க.வினர் தங்களது அலுவலகத்தின் கிழக்கு பகுதியில் இருந்த சுற்றுச்சுவரை அகற்றி டீக்கடை வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் டீக்கடை வைக்கும் பணியினை நேற்று முன்தினம் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் அந்த கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனைதொடர்ந்து இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் கல்வீச்சில் போலீசார் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் 82 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரியலூரில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்
- சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2,500 பறிமுதல் செய்யப்பட்டது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே திருகளப்பூர் காலனி தெருவில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த நேரு (வயது 45), பாஸ்கர் (36), குமாரசாமி (32), மணிவாசகம் (40), காசி (40), வீரமணி (30), பாலமுருகன் (35) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2,500 பறிமுதல் செய்யப்பட்டது.






