search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்மீக நெறி, சமூக சீர்திருத்தங்களை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் வள்ளலார்
    X

    ஆன்மீக நெறி, சமூக சீர்திருத்தங்களை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் வள்ளலார்

    • அரியலூர் அடுத்த வள்ளலார் கல்வி நிலையத்தில் சொற்பொழிவு நடைபெற்றது
    • சன்மார்க்க சொற்பொழிவாளர் கிருஷ்ணமூர்த்தி புகழாரம்

    அரியலூர்,

    வள்ளலாரின் 201-வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் அடுத்த வள்ளலார் கல்வி நிலையத்தில் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வள்ளலார் கல்வி நிலையத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வெங்கிடகிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் வள்ளியம்மை ராமசாமி முன்னிலை வைத்தார் . பள்ளிச் செயலர் புகழேந்தி வரவேற்றார். இதில் சன்மார்க்க சொற்பொழிவாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அவர் பேசியதாவது:-

    உயரிய ஆன்மீக நெறிகளையும் சமூக சீர்திருத்தங்களையும் தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் வள்ளலார். அவர் உலக மக்களையும் அவ்வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதற்கென மக்களுக்கு அருளுரைகளும் அருட்பாக்களும் அருளியதோடு நிற்காமல், அக்கொள்கைகளுக்கு அடித்தளமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை ஆகிய முப்பெரும் அமைப்புகளை ஏற்படுத்தி அவற்றின் வழி ஜீவகாருண்ய ஒழுக்கம், பசிப்போக்கும் அறம், அருட்பெருஞ்ஜோதி இறைவன் என்னும் மகத்தான ஆன்மீக சமூக சீர்திருத்தங்களை மக்கள் பின்பற்றி உய்வதற்கு வழி செய்தார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சொற்பொழிவாளர் சாந்தி பாலசுப்ரமணியன், புலவர் சி.இளங்கோ, நல்லப்பன் ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிவகுமார் , ராமஜெயவேல் ஆகியோர் மாணவர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகளை வழங்கினர்.முடிவில் தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அப்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×