என் மலர்
அரியலூர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
குழுமூர் கிராமத்தில் உள்ள மறைந்த மாணவி அனிதா திடலில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவச ங்கர் கலந்து கொண்டார். அனிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், நீட் விலக்கை வலியுறுத்திகையெ ழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தி.மு.க. சட்டத்திட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அ.பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.பாலசுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.ராமராஜன், மருத்துவர் அணி அமைப்பாளர் சஞ்சய் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி நிர்வாகி கள் பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
அரியலூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண்பாண்டியன்(42). அரியலூர் அடுத்த வாரணவாசி சமத்துவபுரத்தில் வசித்து வரும், இவர் மீது தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, அரியலூர் காவல் துறையினர் கைது செய்து, அரியலூர் கிளை சிறையில் அருண் பாண்டியனை அடைத்தனர்.
இந்நிலையில் அவர் வெளியில் வந்தால், தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதால், போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அருண்பாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- அரியலூரில்காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
- ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பாலு தலைமையில் 66 குண்டுகள் முழங்கப்பட்டது
அரியலூர்,
அரியலூரில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, ஆயுதப்படை மைதானத்திலுள்ள நினைவுச் சின்னத்தில் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டுகள் விஜயராகவன்(மதுவிலக்குப் பிரிவு), அந்தோணி ஆரி(இணையக் குற்றப்பிரிவு), டி.எஸ்.பிக்கள் சங்கர்கணேஷ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மலர் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பாலு தலைமையில் 66 குண்டுகள் முழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. (ஆயுதப்படை பொறுப்பு) வெங்கடேசன் மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர்.
- ஜெயங்கொண்டம் கடைவீதியில்சிறுவர்கள் ஓட்டிய கார் மோதி விபத்து
- 4 சிறுவர்கள் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தா.பழூர் சாலையின் ஓரத்தில், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேனேஜர் செந்தில்குமார் தனது காரை நிறுத்திவிட்டு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது 4 சிறுவர்கள் ஓட்டி வந்த கார், இவரின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து மேனேஜர் செந்தில்குமார் கொடுத்த தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு வந்தார். அதன் பின்னர் அவர் விபத்து குறித்து விசாரணை நடத்தினார். மேலும் விபத்து காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இது குறித்து வழக்கு பதியப்பட்டு உள்ளது. 4 சிறுவர்கள் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெள்ளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித் துள்ள தாவது-
தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வ தேச அளவிலான போட்டி களில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர் களை ஊக்குவிக்கும் வகை யில், அவர்களுக்கு அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கோடை கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய விளை யாட்டு போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (ஐ.ஒ.சி.) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் (ஐ.எஸ்.எப்.) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பி யன்ஷிப் போட்டிகள்,
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டு களுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை ஐ.ஒ.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.எஸ்.எப். -ன் கீழ் நடத்தப்ப டும் காமன்வெல்த் சாம்பியன் ஷிப் போட்டிகள்,
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளை யாட்டு சங்கம், காது கேளாதோ ருக்கான சர்வதேச விளை யாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளை யாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள், தேசிய அளவிலான போட்டி களில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்கள்.
அதன்படி தேசிய விளை யாட்டு போட்டிகள், இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்பு களால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள். மாநில அளவி லான சாம்பியன்ஷிப் போட்டி களில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்கள்.
எனவே அரியலூர் மாவட் டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுத லின்படி 3 சதவீத இட ஒதுக் கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங் கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளது.
விண்ணப்பத்தினை பதிவி றக்கம் செய்து உரிய இணைப் புகளுடன் வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்குள் மேற்கா ணும் இணையதள முகவரி யிலோ அல்லது சென்னை நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைப்பேசி 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித் துள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கொக்கனேரி, மேட்டுத் தெருவை சேர்ந்த வர் ஜியாபத்(வயது53).இவரது மனைவி ரியாஸ்பி (42). இருவரும் கருத்து வறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.ரியாஸ்பி அவரது தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி ஜியாபத் தனது மனைவி ரியாஸ்பியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜியாபத் தனது மனைவி ரியாஸ்பிைன கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வாழக்கு பதிவு செய்து ஜியாபத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணையின் முடிவில் மனைவியை கொலை செய்த ஜியாபத்துக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். இதையடுத்து ஜியாபத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசு தரப்பில் வழக்குரைஞர் சி.சின்னதம்பி ஆஜராகினர்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மாவட்ட கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
- அரியலூர், ஜெயங்கொண்டத்தில்வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்
- வாக்காளர் பட்டியல் வரும் 27-ந்தேதி வெளியிடப்பட உள்ளது
அரியலூர்,
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 1.1.2024 ஆம் நாளை தகுதி நாளாக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடும் பொருட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், பிழைத் திருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கு விண்ணப்பிக்க அனைத்து வாக்குச் சாவடி மையங்க ளிலும் சிறப்பு முகாம் நவம்பர் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
எனவே 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை புதிதாக சேர்க்க படிவம் 6ம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ள வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர பிழைகளை திருத்தம் செய்ய படிவம் 8 ஐயும், அந்தந்த வாக்கு ச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு ச்சாவடி நிலை அலுவலர்க ளிடம் பெற்று, பூர்த்தி செய்து அளித்து பயன்பெற லாம் என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
அரியலூரில் மாவட்ட அ.தி.மு.க. பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோ சனை கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடா வுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கொள்கை பரப்பு துணை செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான இளவரசன், மாநில இளை ஞரணி துணை செயலாளர் சிவசுப்பிர மணியன், மாவ ட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து,
வாசுகிராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சிவபெருமாள், மாவட்ட இணைச்செயலாளர் பவானி வெள்ளைசாமி, மாவட்ட கலைபிரிவு செய லாளர் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேட்டு, இணை செயலாளர் உதயசூரியன், காந்தி, மாவ ட்ட துணை செயலா ளர் ரவி, சக்திவேல், இளங் கோவன், அம்மா பேரவை மாவட்டசெயலாளர் சங்கர், இணைச்செயலாளர் பிரேம் குமார்,
சிவா, மாவட்ட இளை ஞரணி செயலாளர் சிவ சங்கர், மாவட்ட மகளிரணி ஜீவா அரங்கநாதன், மாவ ட்ட மாணவரணி செயலா ளர் முல்லை அகிலன், அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் பாஸ்கர், வக்கில் பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடாஜலபதி, இணை செயலாளர் ராமகோவிந்த ராஜ், சண்முகம், எட்மன்ட ்அறி வழகன், கோபால கிருஷ்ணன், சுகுமார், சிவ ஞானம்,
ஊராட்சி மன்ற தலை வர்கள் சிவா, செங்கமலை, அரியலூர் ஒன்றிய செய லாளர் செல்வராஜ், பாலசுப ்பிரமணியன், திருமானூர் வடிவழகன், சாமிநாதன், ஜெயங்கொண்டம் கல்யாண சுந்தரம், விக்கிரபாண்டியன், தா.பழுர் அசோகன், வைத்தி, ஆண்டிமடம் மருத முத்து, ராமச்சந்தரன், நகரசெயலாளர் செந்தில், முன்னாள் நகராட்சி தலை வர் கண்ணன், மேலத்தெரு தளபதி கணேசன், நாக ராஜன், பழணி யாண்டி, கருணாநிதி உட்பட அனை த்து பிரிவு பொறுப்பா ளர்களும் கலந்துகொ ண்டனர்.
அரியலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஆசைமணி கலந்து கொண்டு பேசினார். அப் போது அவர் தெரிவித்த தாவது:-
தற்போது பா.ஜ.க. கூட்ட ணியிலிருந்து வெளியேறி யதால் தி.மு.க.வு க்கு தோல்வி பயம் வந்துவிட்டது. 40 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அனைத்து பொறுப்பாளர்களும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்றார். கூட்ட முடிவில் மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து நன்றி கூறினார்.
- அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுஅமைச்சர் சிவசங்கர் வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடை பெற்றது.
இதில் உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெய ங்கொண்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரிகளில் முதல் நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.
இதைத்தொடர்ந்து 2-ம் நாள் கருத்தரங்கம், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாகமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றிய பெருமை கருணாநிதியைேய சேரும். அந்த வகையில் மாண வர்களுடைய அறிவுத்திறன் கருணாநிதியை பற்றிய புரிந்து ணர்வு, சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு இவற்றை யெல்லாம் மாணவர்கள் பேச்சுப்போட்டி வாயிலாக எடுத்துரைத்துள்ளனர்.
இதனுடைய விளைவு இன் றைக்கு இருக்கின்ற இளம் பிள்ளைகள் நாளைய தினம் திராவிட சிந்தனையோடும், மொழி உணர்வோடும், பெரி யார், அண்ணா, கருணாநிதி ஆகி யோரின் கனவினை நனவாக்கி சமூகத்திற்கு பணியாற்றுகின்ற நல்லப் பணியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற வாய்ப்பினை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் சட்டப்பே ரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், சட்டப்பேரவை துணை செயலர் அய்யம்பெ ருமாள், சட்டப்பேரவை துணை செயலாளர் சாந்தா, சட்டப்பேரவை சார்பு செயலர் லோகநாதன், மண்டல இணை இயக்குநர் தன்ராஜ் (தஞ்சாவூர்), அரியலூர் வருவாய் கோட்டாட்சி யர் ராமகிருஷ்ணன், உடையார்பா ளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, அரியலூர் நகராட்சி உறுப்பி னர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர்.
அரியலூர்,
அரியலூர் துணைமின் நிலையத்தில் 21-ந்தேதி நாளை சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால்,அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், இராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜ நகரம், வெங்கட கிருஷ்ணா புரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாக லூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி,
தேளுர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுர், கா.அம்பாபூர், பாளை யக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழை க்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கிய ர்பாளையம், மைல்லாண்ட கோட்டை,
உடையார்பாளையம் துணை மின் நிலையங்களி லிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி,
இடையார் மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் காலை 09.00 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் செய்ய இயலாது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அரியலூர்,
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கியது.
அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டியை அரியலூர் நகர மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், துணைத் தலைவர் கலியமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இரா. முருகேசன்ஆகியோர் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி வைத்து தொடக்கி வைத்தனர்.
வட்டார கல்வி அலுவலர்கள் வி.நீலமேகம், வி. கலியபெருமாள், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ந.தமிழரசி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.செல்வராஜ், அஸ்தினாபுரம் மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் அ.வேல்முருகன், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ச.உமா, கலைத் திருவிழா போட்டி ஒருங்கிணைப்பா ளர் மீரா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழித் திறன், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கிராமிய நடனம், கும்மிப்பாட்டு, வில்லு ப்பாட்டு, நாட்டுப்புறை இசை, மயிலாட்டம், ஒயிலா ட்டம் உள்ளிட்ட போட்டிகள் வரும் 21ந்தேதி வரை நடத்தப்படுகிறது.
மேற்கண்ட போட்டிகளில் அரியலூர் வட்டாரத்துக்குள் உட்பட்ட பள்ளிகளில் இருந்து 800 மாணவ, மாண விகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டி வருகின்றனர். இதில் வெற்றிப் பெற்று முதல் மூன்று இடங்களை பெறும்மா ணவ, மாண விகள் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி யில் கலந்து கொள்ள உள்ளனர்.முன்னதாக வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் பெ.ராஜே ஸ்வரன் வரவேற்றார்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி திட்டத்தின் கீழ் கலைத்திருவிழா போட்டி புதன்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளி மாவட்டத் திட்ட உதவி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசாத்தி, வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் கண்ணதாசன், அரசு மகளிர் உயர்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி ஆகியோர் முன்னி லை வகித்தனர். முன்னதாக ஜெயங்கொ ண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார் வரவேற்றார்.






