என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுவர்கள் ஓட்டிய கார் மோதி விபத்து;யூனியன் அதிகாரி உயிர் தப்பினார்
- ஜெயங்கொண்டம் கடைவீதியில்சிறுவர்கள் ஓட்டிய கார் மோதி விபத்து
- 4 சிறுவர்கள் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தா.பழூர் சாலையின் ஓரத்தில், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேனேஜர் செந்தில்குமார் தனது காரை நிறுத்திவிட்டு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது 4 சிறுவர்கள் ஓட்டி வந்த கார், இவரின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து மேனேஜர் செந்தில்குமார் கொடுத்த தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு வந்தார். அதன் பின்னர் அவர் விபத்து குறித்து விசாரணை நடத்தினார். மேலும் விபத்து காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இது குறித்து வழக்கு பதியப்பட்டு உள்ளது. 4 சிறுவர்கள் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






