காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு

அரியலூரில்காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பாலு தலைமையில் 66 குண்டுகள் முழங்கப்பட்டது
காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
Published on

அரியலூர்,  

அரியலூரில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, ஆயுதப்படை மைதானத்திலுள்ள நினைவுச் சின்னத்தில் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டுகள் விஜயராகவன்(மதுவிலக்குப் பிரிவு), அந்தோணி ஆரி(இணையக் குற்றப்பிரிவு), டி.எஸ்.பிக்கள் சங்கர்கணேஷ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மலர் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பாலு தலைமையில் 66 குண்டுகள் முழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. (ஆயுதப்படை பொறுப்பு) வெங்கடேசன் மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com